அர்த்தமுள்ள பழமொழிகளைத் தலைப்பாகக் கொண்டு, சிறுவர்கள் விரும்பி படித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், நன்னெறி கற்பிக்கும் 16 பழமொழிக் கதைகளும், 16 கதைப் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும், மழலைக்கவி பெ.பெரியார்மன்னன் எழுதியுள்ள இந்நூலுக்கு குழந்தைகள் விரும்பும் ‘கூட்டாஞ்சோறு’ என பெயரிடப்பட்டுள்ளது.