(கார்க்குழலி) ம. மரிய ஹெலன் ஜெனோபா
ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்க்குழலி), ஆகஸ்ட் மாதம் ஏழாம் தியதி ராஜாவூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தன்னுடைய எட்டாம் வகுப்பு வரை ராஜாவூர் நடுநிலை பள்ளியிலும் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புக் கல்வியை வளனார்உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில் பயின்றார். இளநிலை, முதுகலை மற்றும் ஆங்கில தத்துவவியல் படிப்பை புனித திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் பயின்றார். இளங்கலை கல்வியியல் படிப்பை எம் இ டி கல்வியியல் கல்லூரியிலும் பயின்றார்.
பேராசிரியராய் பணிபுரிய தகுதி தேர்வை மார்ச் 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.தன்னுடைய முதலாமாண்டு பணி அனுபவத்தை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாண்டிவிளையில் பெற்றார்.
தற்பொழுது புனித திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய உணர்வுகளை எழுத்துகளில் சிறுவயதிலேயே எழுத தொடங்கியவர்.
இளங்கலை படிக்கும் பொழுது "கவிமுகில் விருது" மற்றும் "அறிவொளி விருது" இவற்றை குறிஞ்சி கபிலர் சங்கத்தில் பெற்றார். தன்னுடைய முதல் புத்தகம் "கருவாச்சியின் காதல் ஓவியமாய்" என்பதை 2020 வெளியிட்டார். இவரின் இரண்டாம் புத்தகம் "மகளின் மன்னன்" 2021 ல் வெளியிட்டார்.
நாற்பதுக்கும் மேலான புத்தகத்தில் இணை ஆசிரியராக எழுதியுள்ளார்.
“Emerging Personality Award 2021” என்பதை The Opus Coliseum என்னும் நிறுவனத்திடம் பெற்றார். “Acheiever of the Year 2020-2021” என்னும் விருதை சிறந்த கவிஞர் என்னும் பிரிவிலும், ”Leading Attainers Award 2021” என்பதை சிறந்த எழுத்தாளர் என்னும் பிரிவிலும் பெற்றார் Dr.A.P.J. அப்துல்கலாம் விருது- 2021 என்னும் விருதை தமிழ் அமுது அறக்கட்டளையிடமிருந்தும்,
கல்வித்திலகம் என்னும் விருதை என்பதை மக்கள் கல்வி மையத்திலும், Women Prestigious Award 2022, Hope International World Record, கவி மணிமகுடம் விருது-2022 from தமிழ் அமுது அறக்கட்டளை மற்றும் பேராசிரிய மணிமகுடம் விருது-2022 from தமிழ் அமுது அறக்கட்டளை பெற்றார்.
HJ Unpinned Penning Publication House- ன் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார். நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய மொழி மேல் கொண்ட பற்று காரணமாக வார்த்தை என்னும்
ஆயுதம் கொண்டு பல புத்தகங்கள் படைத்து வலம் வர காத்திருக்கிறார்.