மந்திரம் என்றால் என்ன ? மஹாமந்திரம் என்றால் என்ன ?
மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள், அதாவது "மன்" என்றால் மனதை குறிக்கும், திரா என்றால் விடுவிப்பது, மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும். மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவவிளைவுகள், தீயசிந்தனைகள், சண்டைசச்சரவுகள், காமம், கோபம், மயக்கம், பேராசை, மதம், பொறாமை மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி ஹரேகிருஷ்ண மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை "மஹாமந்திரம்" என்று வேதசாஸ்திரங்கள் அழைக்கின்றன. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை சொல்லக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, உச்சரிக்கும் முறை நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்தபட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும், சந்தோசத்தையும் பெறலாம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners