Share this book with your friends

naanae ezhuthath thuvanginen / நானே எழுதத் துவங்கினேன்

Author Name: M. Bervin Suthar | Format: Paperback | Genre : Poetry | Other Details

சின்னஞ்சிறு கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பதிவுகள் சிறப்புரைகள், பேச்சுக்கள், முகநூல் பதிவுகள் என்று குறுகிய வட்டத்தில் மட்டுமே பயணித்து வந்த எனக்கு நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஊக்கமே இந்த ”நானே எழுதத் துவங்கினேன்“ புத்தகம்.

இது நாள் வரை நான் எழுதிய சிறு சிறு கட்டுரைகள் கவிதைகள் அரசியல் பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பாகவும் இந்த புத்தகத்திற்காக எழுதிய கவிதை மற்றும் கட்டுரைகளையும் இணைத்துத் தொகுத்துள்ளேன்.

முதல் முயற்சி என்பதாலும் புத்தக அனுபவ குறைவும் நம்பிக்கைக் குறைவை தந்தாலும் நண்பர்களின் தொடர்ந்த ஊக்கம் இந்தப்  புத்தகத்தை எழுதி முடிக்க உதவி உள்ளது. எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் வேண்டும், திறமை இருந்தும் வெற்றி பெறாத பலரின் தோல்விக்கு துவங்காததும் இடை நிற்றலுமே காரணம். இந்த புத்தகம் முயற்சியின் முதல் துவக்கமாக வெற்றியின் முதல் படியாக துவங்குகிறேன்.

புத்தகம் எழுதும் முதல் படியாகவே இதைப் பார்க்கிறேன் அடுத்தடுத்த புத்தகங்களை எழுதும் தன்னம்பிக்கையையும் இந்த புத்தகம் தந்துள்ளது என்றால் மிகை ஆகாது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கும் போதே அடுத்த இரண்டு புத்தகங்களை எழுதவும் தொகுக்கவும் துவங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ம.பெர்வின் சுதர்

சிறுவயது முதலே கலைஞரின் மீது அன்பும் பாசமும் கொண்டு அவரது எழுத்துக்களாலும் அரசியலாலும் ஈர்க்கப்பட்டவர், தற்போது குவைத் திமுக தளபதி பேரவை பொறியாளர் அமைப்பு செயலாளராகவும் கொள்கை பரப்பு செயலாளராகவும் உள்ளார். குவைத் நாட்டில் வாழும் குமரி மாவட்ட தமிழ் மக்களுக்காக குவைத் வாழ் குமரி மக்கள் இயக்கத்தை உருவாக்கி நடத்தி வருகிறார்.

தாய்மொழி தமிழ்மீது கொண்ட ஆர்வம் மட்டுமல்லாது இவரது மொழி ஆர்வம் என்பது மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் பேசும் விதத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிமையானது எங்கும் காணோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என இயன்ற வரை தமிழையே அதிகம் பயன்படுத்த விரும்புவார். அலைபேசியின் அமைப்பை கூட தமிழிலேயே பயன்படுத்தி வருகிறார். தமிழ் தெரிந்த அனைவரோடும் தமிழிலேயே உரையாடுவதும் தமிழிலேயே செய்திகளை அனுப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

      வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமூகச் சிந்தனையோடு தேவைப்படுவோருக்கு தயக்கமின்றி உதவிச் செய்யும் மனம் கொண்டவர். முகநூல் வழியாக அறிமுகமான ஒரு தமிழ் நட்பின் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்ய குவைத் வாழ் குமரி மக்கள் இயக்கம் மூலமாக கடல் கடந்தும் பண உதவி செய்ய முழு ஏற்பாடும் செய்தவர். கொரோனா காலத்தில் குவைத் நாட்டில் உதவும் கரங்கள் மற்றும் குவைத் வாழ் குமரி மக்கள் இயக்கம் மூலமாக உணவு மற்றும் பல உதவிகளை செய்து வந்தவர்.

      இயற்கை மீது கொண்ட  

அளப்பரிய ஆர்வத்தால் மரம், செடி, 

கொடிகளை நட்டு பராமரிப்பதில் மிகுந்த சிரத்தை கொள்பவர். 

வீட்டைச் சுற்றி மரம் நடுவது 

மட்டுமல்லாமல் நண்பர்கள் உதவியுடன் பொது இடங்களிலும் காலியான இடங்களிலும் மரம் நட்டு பராமரித்து வருகிறார். நாட்டு மரங்களையும் பழம் காய்க்கும் மரங்களையுமே அதிகம் நடுவதில் நாட்டம் கொண்டவர்.

சின்னஞ் சிறு கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பதிவுகள், சிறப்புரைகள், பேச்சுக்கள், முகநூல் பதிவுகள் என்று குறுகிய வட்டத்தில் மட்டுமே பயணித்து வந்தவர் நண்பர்களாலும் நலம் விரும்பிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு தன்னுடைய எழுதும் திறனை மேம்படுத்தும் விதமாக முதல் முறையாக இந்த

“நானே எழுதத் துவங்கினேன்”

புத்தகத்தை எழுதியுள்ளார்.

Read More...

Achievements

+5 more
View All