இது எனது புது முயற்சியின் தொடர்ச்சி. நாயகனின் இரண்டாம் பாகம் எனவே நாயகன் படித்து விட்டு இதை தொடரவும். கதை நாயகன் எழுதிய சாலி பற்றி, .எழுத்தாளினியின் மனநிலையை சொல்கிறது, அதனுடன் எழுத்து, விமர்சனம் இரண்டையும் பற்றியும் கூறுகிறது.
எனது பெயர் கௌரி முத்துகிருஷ்ணன். படித்தது இளங்கலை அறிவியல். வேலை கிராஃபிக் விஷுவலைசராக, வேலை போக மீத நேரம் என் பொழுதை போக்குவது வாசிப்புடன் தான். அப்படி வாசிக்க பிரதிலிபி என்னும் செயலியின் உள்ளே சென்று, ஹைக்கூ என சில வரிகள் கவிதையென எழுதி, அது என்னை கதை எழுத தூண்ட, என் முதல் கதையை 2019 ஆம் ஆண்டு பிரதிலிபி செயலி நடத்திய " காதலே காதலே " போட்டியில் என் முதல் கதையான "கவிதையே சொல்லடி" என்னும் கதையை சமர்பித்து, என் எழுத்தை தொடங்கினேன். என் கதைகள் அத்தனையும் அன்பையும் புரிதலையும் கருவாக கொண்டது. என்னை சுற்றியிருக்கும் மனிதர்கள் செய்த சரிகளையும் தவறுகளையும், என் புனைவு சேர்த்து கதையாக மாற்றி அதில் அன்பிற்கும் புரிதலுக்கும் உள்ள அவசியத்தை சொல்வதே என் கதையின் நோக்கம். காதல், உறவு, குடும்பம், சஸ்பென்ஸ், திரில்லர், உளவியல் ரீதியான சிக்கல் அதன் தீர்வு என என் கதைகள் இருக்கும். இதுவரை 21 நாவல், 4 குறுநாவல், 13 சிறுகதை எழுதி உள்ளேன். நன்றி.
அன்பு அனைத்தும் செய்யும். நட்புடன், கௌரி முத்துகிருஷ்ணன்.