ஓம் முருகா ( குமரிக்கண்டத்தை நோக்கிய என் பயணம் ) என்ற இந்த புத்தகம் நிஜ வாழ்வில் நடந்த ஆன்மீக அனுபவங்களைக் கொண்டது. திரைத்துறை கனவுகளைக் கொண்டிருந்த ஒரு இளைஞன் முருகப்பெருமானின் தரிசனத்தைப் பெற்று , அவரால் ஆட்கொள்ளப்பட்டு,எதிர்பாராத பல உயரிய ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுவருகின்றார். அவர் முருகப்பெருமானின் வழிகாட்டுதலின் பெயரில் பல நாடுகளுக்குச் சென்று பல ஆற்றல் ஆதாரங்களைக் கண்டறிந்து அனைவருக்கும் வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த 18 ஆண்டுகாலமாக அவர் பெற்ற பல உயரிய ஞானம் மற்றும் தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
தன்னை நாத்திகர் என்று சொல்லிக்கொண்டிருந்த ஒருவர் இறைவனின் நேரடி பார்வையின்கீழ் விழித்தெழுந்து ஆன்மீக குருமார்கள் சென்ற பாதையில் சென்று பல அதிசயமான ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுவருகின்றார் . முருகப்பெருமான் அறிவுறுத்திய வகையில் பல்வேறு உயரிய ஆன்மீக பணிகளைச் செய்துவருகின்றார் . அவர் செய்த மற்றும் செய்யப்போகின்ற அரும்பெரும் பணிகள் குறித்தும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பண்டைய குமரிக்கண்டத்தின் ஆன்மாக்களை ஒன்றிணைத்து புதிதாக வரவிருக்கும் முருக யுகத்தை வரவேற்பதற்கான பல செயல்கள் இப்புவியில் நடைபெற்றுவருகின்றது. இதனைக் குறித்த சுவாரசிய தகவல்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கார்த்திகை ஆற்றல்கள் அல்லது ப்ளேடியன், காலப்பயணம், சுவஸ்திகா ஆற்றல்கள் ,முருகரின் நவபாஷாண சிலை, குமரிக்கண்டம் போன்றவை குறித்த அறியத் தகவல்கள் இந்த புத்தகத்தின் வாயிலாக உலக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners