ஒருமுறைதான் இது இலக்கணம் இல்லாத இலக்கியம் இல்லாத கட்டுரைகளை தொடாத கதைகளை சொல்லாத கவிதைகளை பாடாத வாழ்க்கையின் தேடலையும் பற்றியும் வாழ்க்கையில் நிதர்சனங்களை நாடவும் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது. வாழ்க்கை என்பது என்ன எதை தேடினாலும் ஓடுகிறோம் எதை நாட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் இது பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் ஒத்தடைப்புகளோ அல்லது தலையங்கங்களோ இருக்காது என்பதை முன்னரே உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த புத்தகத்தை எழுத எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்த என் தமிழ் ஆசிரியர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தகத்தை வடிவமைப்பதிலும் தட்டச்சு செய்து இதனை புத்தகமாக வெளியிடுவதற்கான முழு ஒத்துழைப்பை நல்கிய என் அன்பு இளவல் மதிப்பிற்குரிய திரு பிரபாகரன் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய திரு பாஸ்கரன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த வேலையில் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை தேர்வு செய்து வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதனை வாங்கி படிக்கும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு நொடியும் இது உங்களுக்கு கண் முன் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத பல ரகசியங்களை உடைத்து பேச காத்திருக்கிறது. வாழ்வின் பொருள் வாழ்வின் ரகசியம் நம்மை நாம் அறியும் அவசியம் அனைத்தையும் பற்றியும் பேசி இருக்கும் இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து பாருங்கள் இதை நிச்சயம் உங்களுக்கு அர்த்தமுள்ளதாக அமையும். இதை வாசிக்க வாங்க முற்படும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்