இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழுக்கு சங்கம் அமைத்து வளர்த்துள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என மூன்று தமிழ்சங்கங்களை பாண்டிய மன்னர்கள் அமைத்துள்ளனர். இவற்றில் கடைச்சங்கம் தவிர மற்ற இரு சங்கங்கள் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம், குமரி நாடு அல்லது இலெமூரியா என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்ததாக தமிழ் அறிஞர்களால் நம்பப்படுகிறது
பாண்டிய மன்னர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத மிக நீண்ட நெடிய வரலாறு பாண்டிய மன்னர் பரம்பரைக்கு உண்டு.
பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. ... பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
பாறைக் குடைவுகள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் போன்றவை பாண்டியர் கலை மற்றும் கட்டிடக்கலைகளில் .குறிப்பிடத்தக்க பகுதியாகும்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners