'மாதர் மகிழ்ச்சி' பத்திரிகையில் சில மாதங்களாக நான் எழுதி வந்த 'முன்னாள் பெண் மலர்கள்' பற்றிய வரலாற்றுத் தொடரை ஒரு சிறு நூலாக வெளியிடுவது பயன் தரும் என்று பலர் கருத்து தெரிவித்ததின்பேரில், அவற்றுடன் மேலும் சில சேர்த்து இந்நூலை வெளியிட்டுள்ளோம்.
நம் நெல்லைத் திருச்சபைக்கு அருமை இரட்சகர் தந்துள்ள ஏராளமான ஆசீர்வாதங்களில் சிறந்தவற்றிலொன்று காலாகாலங்களில் நம் சபைகளில் அவர் தோற்றுவித்த பரிசுத்தவான்கள், பரிசுத்தவாட்டிகளான அநேகரின் நற்பணியாகும். அவர்களில் பன்னிரு பரிசுத்தவாட்டிகளின் செய்தியை மட்டும் இச் சிறு நூல் தருகிறது.
இது அநேகருக்குப் பயன்தரக் கர்த்தர் அருள் செய்வார் என்பது எம் நம்பிக்கை.