இப்போதெல்லாம் பெண்களின் தொழில்முனைவு ஒரு விரும்பப்படும் தொழிலாக மாறி வருகிறது. பல்வேறு காரணங்களால் அதிகமானவர்கள் இதில் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு நிறுவனத்தை உருவாக்குவதற்கும், செயல்பாடுகளைத் தொடங்குவதற்கும் சில பொதுவான தேவைகள் யாதெனில்- வணிக வகைகளை நிர்ணயித்தல், நிதி பெறுதல், தேவையான வணிகத் திட்டங்களை உருவாக்குதல், சந்தைக்குச் செல்லும் மூலோபாயத்துடன் தயாராகுதல் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். சோதனை மற்றும் பிழை திருத்த (trial and error) முறையைப் பயன்படுத்தும் போது, பொன்னான நேரம் மற்றும் பணம் வீணாகிறது. ஒரு வெற்றிகரமான முன்மாதிரி (role model) வளர்ந்து வரும் தொழில்முனைவரை எல்லாவற்றையும் விட அதிகமாக ஊக்குவிக்கும். இந்த புத்தகம் வணிக அமைப்பு, வணிகத் திட்டத்தை உருவாக்குதல், நிதிவழங்கும் அமைப்புக்கள் மற்றும் முன்மாதிரிகள் போன்ற அனைத்து விவரங்களையும் வழங்குவதற்கான ஒரு முயற்சியாகும். பெண் தொழில்முனைவோருக்கு இது ஒரு தொடக்கமாகவும், உபயோகமுள்ள கையேடாகவும் அமையும் என நம்புகிறோம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners