கவிஞர். பெ. பெரியார்மன்னன் எழுதிய கவிதைகளை தொகுத்து ‘பேசும் மெளனங்கள்’ என்ற தலைப்பில் இந்நுாலை வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் மாலையாய் கோர்த்த முத்துக்கள். எளிய வார்த்தைகளை கோர்த்து அருமையான வரிகளில் நவரசங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். இந்நுால் அனைத்து தரப்பினருக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உறுதியாய் கொடுக்கும். நுாலை வாசிப்போரையும் கவிதை படைக்கத் துாண்டும் என்பது திண்ணம்.