டாக்டர். சி. நடேசன்
பேராசிரியரஂ டாக்டர். சி. நடேசன், சேலம்
மாவட்டத்தில் உள்ள அக்கமாப்பேட்டை
கிராமத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.
சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ்
இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு
முடித்த பிறகு, “சேலம் மாவட்ட மலைவாழ்
பழங்குடியின மக்களின் பாடல்கள் ”
என்ற ஆய்வறிக்கையில் சென்னைப்
பல்கலைக்கழகத்தில் ‘முனைவர்’ பட்டம்
பெற்றார்.
1967-1969 மற்றும் 1978-1980 ஆண்டுகளில், அமெரிக்காவின்
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும்
சமூக மானுடவியலாளர் டாக்டர். மேட்டிசன் மைன்ஸ் உடன்
இணைந்து “தமிழ்ச் சமூகம்” குறித்த ஆய்வுப் பணிகளை,
சென்னை மற்றும் சேலம் மாவட்டங்களில் மேற்கொண்டார்.
மேலும், “தெய்வீக மாந்தரீகம்” குறித்தும் பல அரிய ஆய்வுகளை
மேற்கொண்டவர்.
திருச்சி அகில இந்திய வானொலியின் நாட்டுப்புறத் தமிழ்
இசைக் கலைஞர் தேர்வுக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்று
இருந்தார். தமிழில் பக்தி பாடல் நூல்கள் மற்றும் ஆடியோ
இசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.
அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும்,
மற்றும் துறைத் தலைவராகவும் 33 வருடங்கள் பணியாற்றி 2001
ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்போது, இவர் தமிழ் பக்திப்
பாடல்களை இயற்றி வருகிறார்.