வரலாற்றின் வேர்கள் எனும் இந்தப் புத்தகம் இந்திய வரலாற்றை வடிவமைக்க உழைத்தவர்களின் வரலாற்றைக் கூறும் புத்தகம். இது பிரிட்டனின் ஆட்சியில் இந்தியா இருந்தபோதிலிருந்து தொடங்குகிறது. வில்லியம் ஜோன்ஸ்,ராபர்ட் புரூஸ் ஃபுட்,ஜேம்ஸ் பிரின்சப் , அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்,ஜேம்ஸ் பர்கெஸ், சர் ஜான் மார்ஷல், ராய் பகதூர் தயா ராம் சாஹ்னி, கே.என்.தீட்சித், மார்டிமர் வீலர்,காலின் மெக்கன்சி,ஹல்ட்ஷ்,ராய் பகதூர் வெங்கையா, அலெக்சாண்டர் ரியா, குடந்தை சேதுராமன், இராசமாணிக்கனார், ஐராவதம் மகாதேவன், சாமா சாத்திரி போன்றோரின் வாழ்க்கையும், சாதனைகளையும் விவரிக்கிறது, இந்திய வரலாறு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதின் வரலாறும் இதன் மூலம் அறியக்கிடைக்கிறது.