தேவனுடைய உன்னத நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். தேவனுடைய வார்த்தைகளாகிய வேத வசனங்களை தியானிக்கும் போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் ஏராளம் ஏராளம். அந்த வார்த்தைகளை கடைப்பிடிக்கும் போது இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள மிகவும் சிறந்த வழி இதுவே. இந்த ஜீவனுள்ள வார்த்தையானது சத்துருவின் நாச மோசங்களினின்றும், பிசாசின் வஞ்சகத்தினின்றும் நம்மை எச்சரித்து நடத்தவும் பாதுக்காக்கவும் செய்யும்.
இந்த புத்தகம் தேவையா, இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியதில்லை. இந்த புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் மிகவும் பெரியதாய் இருக்கிறது. வயதானவர்கள், கண் குறைப்பாடுகள் இருக்கிறவர்கள் படிக்கும்படி இதை வடிவமைத்துள்ளோம். பூதக்கண்ணாடி தேவைப்படாது.
பெரியவர்களுக்காக எத்தனையோ காரியங்கள் நீங்கள் செய்திருந்தாலும், இப்படி ஒரு பெரிய எழுத்து வேதாகமத்தை வாங்கிக்கொடுப்பதே சிறந்த காரியமாகும்.