கவிதைகள், உணர்வுகளை உள்ளடக்கிய ஓர் பெட்டகம். ஆம் என் உணர்வுகளை மட்டுமே வரிகளாய் கொண்டது இப்புத்தகம். இதில் மனிதம் விரும்பும் என் சிந்தனைகளும், கோபங்களும் அடங்கியிருக்கும். அத்துடன் இயற்கையின் அழகையும், அதிசயங்களையும் வார்த்தைகளில் அடக்க முயன்றிருக்கிறேன். இறுதியாய் மழலை மனம் மாறாத ஓர் பெண்ணின் அழகிய குறும்புத்தனத்தையும் கவிதையாய் சமைத்திருக்கிறேன். நான் கண்ட கற்பனை உலகின் வர்ணஜாலங்களை நீங்களும் காண்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி!