1. சிக்கிமுக்கிக் கற்கள்
2. ஒரு சத்தியத்தின் அழுகை
3. தராசு
4. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்
5. தலைப்பாகை
6. ஆகாயமும் பூமியுமாய்
7. குற்றம் பார்க்கின்
ஆகிய 7 சிறுகதை நூல்களின் தொகுப்பு.
முற்போக்கு எழுத்தாளர்களில் சிறந்த ஒருவர் சு.சமுத்திரம்! கருத்தரங்கு ஒன்றில் அறிமுகமாகி உடன்பிறவா உற்ற உறவானவர்! அவருடைய படைப்புகள் அனைத்தையும் திறனாய்ந்து 300 பக்க அளவில் எழுதிய நூல்வரைவை நியூ செஞ்சுரி பதிப்பகத்துக்கு அனுப்பினேன்.அதை நூலாக்கும் தகுதி உடையது என அப்பதிப்பகத்தின் நூல் தேர்வுக்குழு ( வல்லிக்கண்ணன்) பரிந்துரைத்தது.
அப்போது பதிப்பகத்துக்கும் சு சமுத்திரத்துக்கும் ஏதோ கருத்து வேறுபாடு . அதனால் நூல் வரைவை அவர்களிடமிருந்து வாங்கி வந்து மதுரையில் என் இல்லம் வந்து கொடுத்துத் தானே தம் ஏகலைவன் பதிப்பகம் வாயிலாக வெளியிடப் போவதாகப்பெற்றுச் சென்றார்.! அப்போதைய அவரது பண நெருக்கடியால் அதை 150 பக்கங்களாகச் சுருக்கி "சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம்" என்ற தலைப்பில் வெளியிட்டு" ராயல்டியும் " அனுப்பினார். மகளிர், தொழிலாளர், தாழ்த்தப்பட்டமக்கள் எனும் 3 பிரிவாகச் சமுதாய மாற்றங்கள், மேம்பாடு/ முன்னேற்றம்,மாற்றம்/ சமநிலை என்ற வகையில் முந்தைய ஆய்வின் தொடர்ச்சியாகவே தொகுக்கப் பட்டுள்ளன. வாடாமல்லி அவரது சிறந்த புதினம்! அன்றைய நாளில் அவருடைய சிறுகதைகளில் காணப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு அவரைச் சிறுகதை இயக்கமாகவே கருத வைத்தது . படைப்புகளில் கோவை. ஞானி, நான் சுட்டிக் காட்டிய குறைகளை ஏற்றுக் கொண்டு இனி அவற்றைக் களைவேன் எனப் பண்புடன் கூறிய பெருந்தன்மை போற்றத் தக்க ஒன்று!
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners