வணக்கம் தோழமைகளே..
தேன்மழைச் சாரலாய்.. காதலை மட்டுமே மையப்படுத்தி எழுதிய கதை.
நாயகன் - தேன்மொழியன் (இனியன்)
நாயகி - சாராவதி (சாரல்)
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மொழியனின் வாழ்வில் எதிர்பாராத விதமாக இணையும் சாரா.
தமக்கை மற்றும் தங்கையின் குடும்பம், தந்தை, ஒரே ஒரு நண்பன் வருண் எனச் சிறு கூட்டுக்குள் வாழும் நாயகன்.
தனக்குப் பின்னே பிறந்தவனைத் தவிர வேறு எவரையுமே அறியாத நாயகி.
சூழ்நிலையின் காரணமாகச் சாரலை சேயாகத் தன்மடி தாங்கும் மொழியனுக்கும் அவளுக்கும் இடையேயான உணர்வுப் போராட்டமே தேன்மழைச் சாரலாய்.
பொறுப்பை மட்டுமே சுமப்பவனுக்குள் காதல் மலர.. அதை அறியாத பேதையோ மொழியனின் வாழ்வில் இருந்து விலகி கருப்பைப் பகிர்ந்தவனுடன் இடம் பெயர்கிறாள்.
பிரிவின் ஏக்கத்தில் தன்னைத் தொலைப்பவளுக்குக் காலம் புது அரிதாரம் பூசி.. பழயவளையே மீட்டெடுக்க, பெண்மைக்குள் காலம் கடந்து, விலகியவனைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே காதல் பூக்கிறது.
தொலைத்த அவனும், தொலைந்த அவளும் இணைந்தார்களா என்பதே கதை!
இவள்
நந்தினி சுகுமாரன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners