புத்தக முன்னுரை:- திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள் என்னும் இந்தப் புத்தகம் ராஜ் பிரகாஷ் என்னும் என்னால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பாகும். இதில் 10 சிறுகதைகள் இருக்கின்றன. இந்தப் பத்து சிறுகதைகளின் தலைப்புகள் - 1. பிஞ்சு விரல் படைப்பு. 2. இளமையில் தொலைத்தது. 3. நாளைய நட்சத்திரம். 4. வேகம் தந்த விபரீதம். 5. திருத்தங்கள் செய்யும் அற்புதங்கள். 6. மண்ணின் பெருமை. 7. நம்பிக்கை துரோகம். 8. மழையின் மழலை. 9. முதுமை காதல். 10. மனிதநேயம் ஒரு புனித நேயம். சிறுகதை என்பது ஒரு கதையின் வழியாக நாம் நினைக்கும் ஒரு சித்தாந்தத்தை மனிதர்கள் மனதில் விதைக்கும் ஒரு அற்புத முயற்சியாகும். என் சிந்தனையில் எழுந்த பல்வேறு சிறுகதைகளை ஆயுதங்களாக பயன்படுத்தி மனித சிந்தனையில் சில நல்ல கருத்துக்களை விதைப்பதன் நோக்கத்தில் இந்த புத்தகத்தை நான் எழுதி உள்ளேன். இதற்கு உங்களுடைய மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவீர்கள் என்று நம்புகிறேன். இந்த சிறுகதைத் தொகுப்பின் நோக்கமானது நல்ல கருத்துக்களை நயம்பட சொல்லும் நோக்கமாகும். இந்த சிறுகதைத் தொகுப்பை படைத்த அளிக்க என்னை ஊக்குவித்தவர், உதவியவர்கள் என்னுடைய குடும்பம் என்னுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.