இந்நூலானது, "முழுமஹாபாரதம்" என்ற இந்தத் தொகுப்பின் இரண்டாம் தொகுதி / இரண்டாம் நூலாகும். இத்தொகுப்பில் மஹாபாரதத்தின் முதல் பர்வமான ஆதிபர்வத்தின் 224 முதல் 236ம் பகுதிகள் வரையும், இரண்டாம் பர்வமான சபா பர்வத்தின் 1 முதல் 80ம் பகுதிகள் வரையும், மூன்றாம் பர்வமான வனபர்வம் 1 முதல் 131ம் பகுதிகள் வரையும் இடம்பெறுகின்றன.
மூலத்திற்கு மிக நெருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பென அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறும் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் படைப்பை மையமாக வைத்துக் கொண்டு, ஆங்கிலத்திலேயே அமைந்த மன்மதநாததத்தர் பதிப்பு, செம்பதிப்பான விவேக்தேவ்ராய் பதிப்பு, தமிழில் கும்பகோணம் பதிப்பு ஆகியவற்றையும், சில இடங்களில் வில்லி பாரதத்தையும் ஒப்பிட்டு, பல்வேறு இடங்களில் பல்வேறு அடிக்குறிப்புகளைக் கொடுத்துச் செய்யப்பட்டதே இந்த "முழுமஹாபாரதம்" ஆகும்.