வானவில் பூக்கள் எனது ஐந்தாவது நாவல். கனிந்தமனம் கதையின் மூன்றாம் பாகம்.
முதல் இரண்டு பாகங்களில் வந்த கதை மாந்தர்களின் வாரிசுகள், இக்கதையில் முதன்மை கதா பாத்திரங்களாக மாறுகின்றனர்.
ஒன்றாய் இருந்த உறவுகள் சூழ்நிலையின் காரணமாய் தனித்தனி தீவுகளாய் பிரிந்துவிட.. கால ஓட்டத்தில் மனதில் மட்டுமே இருந்த அவர்களின் உணர்வுகளின் தாக்கத்தினால்.. பிற்காலத்தில் நேரில் மீண்டும் சந்திக்கும் பொழுது நடந்தேறும் நிகழ்வுகளே இந்த வானவில் பூக்கள்.
சிறுவயது சண்டை வளர்ந்த பின்பும் தொடர்வதும்.. முறை மாமன், முறைப் பெண்ணுக்குள் இருக்கும் புரிதலும், ஊடலும், செல்லச் சண்டைகளும்.. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளுக்குள் ஏற்படும் உணர்வுகளும்.. தொட்டாச் சிணுங்கியாய் முகம் சுருங்குவதும்.. ஒற்றை வார்த்தைக்கே விலகிச் செல்வதும்.. விலகலில் மனம் உணர்வதும்.. மௌனத்திலேயே காதல் பகிர்தலும்.. என எதார்த்த நிகழ்வுகளின் கோர்வையாய்..
விட்டுப் போன உறவுகளின் சங்கமமாய்.. அன்பு என்ற ஒற்றைச் சொல்லின் பலவித பரிமாணங்களாய்.. இந்த வானவில் பூக்கள்.
ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு தன்மையுண்டு. பல நிறங்கள் இணைந்து வானவில் பாலம் அமைப்பது போல்.. இதில் வரும் கதை மாந்தர்களும் வெவ்வேறான குணங்களுடன் ஒன்றாய் பயணிக்கின்றனர்.
ஏழு நிறங்கள் ஒன்றிணைந்து வானவில்லாய் வர்ணஜாலம் காட்டி மயங்க வைப்பதிற்கு நிகராய்.. வானவில் பூக்களின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் உங்களின் மனதை மயக்கி தன் வசமாக்கும் என நம்புகிறேன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners