என்னுள் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு இந்த சிறுகதைகளை எழுதத் தூண்டியது.. என்னுடைய மனைவி ஒரு புத்தகப்புழு.. அவள் எப்பொழுதும் புத்தகங்களிலேயே மூழ்கி இருப்பார்.. என்னுள் இருந்த எழுத்து திறமை சிறுவயதில் ஏற்பட்டது.. அதன்பின்னர் வளர்ந்து படித்து அரசுப் பணியில் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது குடும்ப பின்னணியில் என்னுடைய எழுத்து திறமை காணாமல் போய்விட்டது.. என்னுடைய அருமை மனைவி கடந்த ஆண்டு 2019 இல் என்னைவிட்டு மறைந்துவிட்டார்.. தனிமையில் விடப்பட்ட நான் என்னுடைய மனதினில் வேறு எதற்கும் இடம் கொடுக்காமல் என்னுடைய எழுத்து திறமையை மீண்டும் கையாளத் துவங்கினேன்.. அதன் விளைவுகளே இந்த சிறுகதைகள்..