புதுக்கவிதைகளின் தொகுப்பு, ஐக்கூ கவிதைகளின் பெட்டகம், மாறுபட்ட சிந்தனைகளை நவீனப்படுத்தி சுவையுடன் படைத்த அளித்திருக்கிறார். புலவர் இமாலயன் அவர்களின் அற்புதமான படைபுகளுள் மிகவும் அழகான ஒன்று.
வணக்கம் நான் உங்கள் இமாலயன். இயற்பெயர் ஆகிய ஆண்டனி குமார் என்பதை என் தமிழ் பேராசிரியர் பெருமதிப்பிற்குரிய முனைவர் திரு அமல்ராஜ் அவர்கள் லயோலா கல்லூரியில் நான் படிக்கிற காலகட்டத்தில் என் பெயரை மாற்றினார். பிற்காலத்தில் அந்தப் பெயரையே நான் வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அரசாங்க பதிவிலும் மாற்றிக் கொண்டேன். நான் பிறந்து வளர்ந்தது படித்தது பணிபுரிவது அனைத்தும் சென்னையில்தான். என்னுடைய பள்ளி காலங்களில் நான் கவிஞனாக பாடகனாக பாடல் எழுதுபவராக பேச்சுப் போட்டியில் பங்கு கொள்பவனாக சொற்பொழிவு போட்டியில் பங்கு கொள்பவனாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் என் தனி முத்திரையை அதில் பதித்து பரிசுகளும் பட்டங்களும் பெற்றுள்ளேன். என்னுடைய இளங்கலைப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியில் பிஏ பொருளியல் பாடத்தில் நிறைவு செய்து. முதுகலை பொருளியல் படிப்பை வெளிமாநிலத்தில் நிறைவு செய்து. எம்பிஏ மனிதவள மேம்பாட்டு படிப்பில் தேர்ச்சி அடைந்தேன் இந்த படிப்பை கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதே பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்தேன். கடந்த 16 ஆண்டுகளாக பிரைட் அகாடமி என்னும் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறேன். திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் என் மனைவி என் பெற்றோருடன் இன்றுவரை வசித்து வருகிறேன் கூட்டுக்குடும்பமாக. கல்லூரியில் படிக்கும் காலகட்டங்களில் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளேன். என் ஆசிரியர்கள் எனக்கு இளஞ் செம்மல் என்னும் பட்டத்தை வழங்கி என்னை சிறப்பித்துள்ளனர். கவிதை எழுதுவது கட்டுரைகள் படைப்பது புதினங்கள் எழுதுவது என்பதன் மூலமாக சமூகத்தின் மீதான என் பார்வையை வெளிப்படுத்தும் எண்ணத்தையும் என் படைப்புகளை என் உணர்வுகளை வெளிப்படுத்தும் என் கனவையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்கிறேன். விதைக்குள் விழுந்த மரம் என்னும் இந்த கவிதைத் தொகுப்பை வாங்கிப் படியுங்கள் புதிய சிந்தனைகள் உங்கள் இதயங்களில் விதைக்கப்படும் நன்றி