விடியல் தேடும் விழிகள் என்னும் சிறுகதைத் தொகுப்பான என்னுடைய முதல் தொகுப்பு நீண்ட நெடுங்காலம் என் சிந்தனையில் எழுந்த கதைகளின் தொகுப்பாக உங்கள்முன் படைக்கிறேன். இந்தப் புத்தகம் கடல் சார்ந்த மீனவ குடிகளின் கண்ணீர் கலந்த பிரச்சினைகளைப் பற்றியும், வேளாண் மக்களின் வலிமிகுந்த சோகத்தை பற்றியும், கிராமத்திலிருந்து நகர வாழ்க்கையை நோக்கி நகர விரும்பும் ஒரு இளைஞனை பற்றியும் அதன் நிமித்தம் அவன் சந்திக்கும் பல்வேறு சிக்கல் மிகுந்த வழிகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் பேசியிருக்கிறேன். இந்தப் புத்தகமானது முழுக்க முழுக்க நலிந்த மக்களைப் பற்றியும் அவர்களின் வலிமிகுந்த வாழ்க்கையைப் பற்றியும் உங்கள் கண் முன் காட்டும் ஒரு திரையை போல கதையாக வடித்து இருக்கிறேன். இந்தப் புத்தகமானது என்னுடைய தாக்கத்தின் வெளிப்பாடு என்று கூட சொல்லலாம். பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆகவே இருக்கிறார்கள் அவர்களுக்கு கிராமப்புறத்து மக்களைப் பற்றிய சிந்தனையோ அவர்கள் படும் இன்னல்கள் பற்றிய சிந்தனையோ துளியும் இருப்பதில்லை அதனை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த புத்தகத்தை எழுதி உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் புத்தகத்தை என்னை பெற்று வளர்த்த இந்த நிலைமைக்கு என்னை கொண்டுவந்த என் அம்மாவுக்கு இதனை காணிக்கையாக்குகிறேன். இந்தப் புத்தக வடிவமைப்பு மற்றும் தட்டச்சு பணிகளுக்காக உதவின அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த புத்தகத்தை உங்கள் முன் அளிக்கிறேன் வாருங்கள் கிராமத்தை நோக்கி பயணிக்கலாம்.