விண்வெளிப் பயணங்களின் வரலாறு என்ற இந்த புத்தகம் தமிழில் விண்வெளி பயணங்கள் குறித்து மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் விண்வெளி பயணத்திற்கு தேவையான அடிப்படைத் தகவல்கள் குறித்தும், எவ்வாறு விண்வெளிப் பயணத்தின் முயற்சிகள் தோன்றியது என்பதை குறித்தும் எழுதப்பட்டுள்ளது. மேலும் "எவ்வாறு நிலவில் மனிதர்கள் மனிதர்கள் காலடி வைத்தார்கள்? எந்தெந்த கிரகங்களுக்கு மனிதர்களின் ஆய்வுக் கருவிகள் சென்றுள்ளது?" என்பன பற்றியும் மிகவும் தெளிவாக பல சுவாரசிய தகவல்களுடன் விவரிக்கிறது இந்நூல். தமிழில் விண்வெளி குறித்துத் தெரிந்து கொள்ள விரும்பும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படுவதாக அமையும்.