கமலாச்சி

கற்பனை
5 out of 5 (11 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கமலாச்சி தன்னுடன் கொண்டுவந்த கட்டபையில் வைத்திருந்த புடவை ஒவொவன்றாக எடுத்து அடுக்க ஆரம்பிக்கிறாள்,மக்கள் நடமாட்டம் மிகுந்த திருமருகளின் மூன்று ரோடு இணையும் இடத்தில்...
கமலாச்சிக்கு அறுபத்தஞ்சு எழுபது வயசு இருக்கும்... யோவ் சாப்ட வாயா என்று அழைக்க கணவனோ.. ஏன்டா வயசான காலத்துல புடவ வித்துக்கிட்டு கஷ்டபடுறேன் நீ வேலைக்கு போகலாம்ல என்று கண்டிக்க மகனோ.. பொண்ணு வீட்டுக்கு போனா உக்காந்து ரெண்டு நா நல்லா சாப்ட்டுட்டு வரலாம்னு நினைக்க மகளோ இல்ல.. தினமும் வேல செய்யும் இடத்துக்கு போயிட்டு புடவ எடுத்துட்டு வந்து விக்கிறது.. பத்து புடவ வித்தா ஒரு புடவ காச விருப்பமே இல்லாம பிசகி பிசகி குடுக்குற முதலாளி மட்டுமே..
" எந்த புடவ எடுத்தாலும் இருனுறு ரூபா தான்" எந்த புடவ எடுத்தாலும் இருனுறு தான் என்று கூவ ஆரம்பிக்கிறாள்....
அவர் அவர்களுக்கு என்ன அவசரமோ தெரியல கமலாட்சியின் குரல் யாருக்குமே கேக்கல..
ஆமா இந்த ரோட்டுல பைக்ல போற கப்பல் வியாபாரிங்கலாம் பைக் ரேஸ்ல போறவங்க போல காதுல போன்ன வச்சுக்கிட்டு வேகமாக போறாங்களே அவங்கல்லாம் எங்க போறாங்க.. யாருக்கு தெரியும் எமன் கூட கூப்பிட்டிருக்கலாம்.. நாம திட்டுனது இல்ல கேட்டது ஒரு மனுசனுக்கு காதுல விழுந்துட்டு போல போன கட் பண்ணி சட்டை பாக்கெட்ல வச்சவாறே பைக்க நிறுத்தி கமலாச்சிகிட்ட
"யம்மா புடவ எவளோமா "
" எத எடுத்தாலும் இருனுறு தான்யா "
கீழ குனிஞ்சு ஒவ்வொரு புடவையாக எடுத்து பாக்கிறார்..
"இதான் இருக்காம்மா வேற ஏதும் நல்ல புடவைய எடுத்து தனியா வச்சுக்கிட்டு கழிச்சு போட்டத இங்க வச்சுருக்கியா "
"ஆமா நல்ல புடவயலாம் தனியா எடுத்து வச்சு கட்டிக்கிட்டு இந்த வயசுல தான் மினிக்கிகிட்டு திரிய போறேன் "
சரி சரி கோவப்படாத தாயி..
என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவனது போன் ஒலிக்கிறது.. எடுத்து யார் என்று பார்த்தவனின் முகம் மாறுகிறது.

போன அட்டன் பண்ணலனா நொச்சு நொச்சுனு திரும்ப திரும்ப போன் அடிச்சுகிட்டே இருப்பா.. சரி சமாளிப்போம்..

என நினைத்தப்படியே அட்டன் செய்கிறான்..

தங்கம் சொல்லுமா..?

போன எடுக்க இவ்ளோ நேரமா.. சரி எங்க இருக்க..?

அதே நீ சொன்ன நாகை முரா சன்ஸ் ஜவுளிக் கடைல தாம்மா...

சரி புடவ எடுத்துட்டியா..?

ம்ம்ம்.. எடுத்துட்டேன் தங்கம்..

எவளோல எடுத்திருக்க..?

அதே நீ சொன்ன இரண்டாயிரம் ரூபா தா தங்கம்...

என்ன கலர்..?

அதே நீ சொன்ன பச்ச கலர் தம்மா..

என்ன டிசைன்..?

அதே நீ நெளி நெளியா பூ போட்ட டிசைன் தான்..

சரி எப்போ வருவ..

அதும் நீ சொன்ன எட்டு மணிக்கு..

சரி வா..

போனை கட் செய்து விட்டு ஒரு பெரு மூச்சு விட்டப்படி கமலாச்சியை பார்க்க..

நாங்கலாம் எங்க காலத்துல புருசனுக்கு பயந்துகிட்டு இருந்தோம்.. இப்போ..ம்ம்.. இதுவும் பாக்க நல்லாத்தான் இருக்கு..

பயம்லாம் ஒன்னும் இல்லம்மா.. எனக்கு இருக்குறது ரெண்டும் பொம்பள புள்ள.. நாங்க சண்ட போட்டு எங்க சந்தோசம் போறது மட்டுமில்லாம அவங்க சந்தோசத்தையும் கெடுக்க கூடாது பாரு...

என்றவாரு தனது பாக்கெட்டில் ஒளிச்சு வச்சிருந்த புத்தம் புதிய முரா சன்ஸ் கடையின் லோகோ உள்ள துணி பையினை எடுக்கிறான்..

மனைவி சொல்லிருந்த டிசைன்ல ஓரளவுக்கு ஒத்து போகிற போல நெளி நெளியான பச்ச கலர் புடவையை பையில் எடுத்து வைத்த படி..

இந்தம்மா

என்று இருனுறு ரூபா நோட்டை குடுக்க ..

அதை வாங்கி கண்ணில் ஒத்திய படியே

அடுத்த தடவ வரும் போது உன் பொண்டாட்டியையும் நம்ம கடைக்கு கூட்டிட்டு வாப்பா.. என்றபடி சிரிக்க..

அது சரி..

என்று சிரித்தவாறு பைக் டேங் கவரில் புடைவையை வைத்து விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்புகிறான்...

கமலாச்சி பணத்தினை இடுப்பில் சொருகி வைத்துள்ள சுருக்கு பையில் போடுகிறாள் அப்போது..

இரு பெண்களும் அங்கு வருகின்றனர்..
அதில் ஒருவள்


யம்மா போன வாரம் திட்டச்சேரில நீ தான கட போட்டிருந்த.


கமலாச்சி ஆமாம் என்பது போல தலையை ஆட்டுக்கிறாள்..


பச்ச கலர் ஒன்னு மஞ்ச கலர் ஒன்னுனு ரெண்டு புடவ எடுத்துட்டு போனேனே ஞாபகம் இருக்கா..


எங்கம்மா நேத்து என்ன சாப்டனே எனக்கு ஞாபகம் இல்ல.. நீ போன வராம்ல சொல்ற.. ஏன் புடவ ஏதும் சரி இல்லயா..?


புடவ சரி இல்லையாவா.. எப்படிமா இருனுறு ரூபாக்கு புடவ குடுக்க கட்டுபடி ஆகுது.. தரம்னா தரம் அப்டி ஒரு தரம்.. சந்தைக்கு காய்கறி வாங்க வந்துட்டு முதல்ல புடவ எடுக்க வந்துட்டன்னா பாரேன்..


கமலாட்சியின் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு

இரு பெண்களும் அமர்ந்து ஒவொவொரு புடவையாக எடுத்து பார்க்கின்றனர்..

அதில் ஒருவள் கமலாட்சியிடம்..

ஆமா இருநூறு ரூபாக்கு புடவ குடுக்குறியே..

என்ன நீ நூத்து அம்பது ரூபாக்கு வாங்குவியா..?

நூத்து அம்பதோ ஐனுத்து அம்பதோ அதெல்லாம் யாரு கண்டா..பத்து புடவ வித்தா ஒரு புடவ காசு குடுப்பாரு.. விக்கலான சோத்துக்கு கூட காசு குடுக்க மாட்டாரு..

அதுக்காகலாம் பத்து புடவலாம் வாங்க முடியாதுமா.. ஒரு புடவ போதும்.. காய்கறி வாங்கிட்டு போக தான் பணம் எடுத்துட்டு வந்துருக்கேன்..

என்று திரும்பவும் புடவைகளை களைத்து போட்டு செலக்ட் பண்ண ஆரம்பிக்கிறார்கள்..

இந்த மாம்பழ டிசைன் நல்லாருக்குல

நல்லாத்தான் இருக்கு.. உன் கட்சி தலைவருக்கு ஓட்டு கேட்டு போகும் போது கட்டிக்கிட்டு போறதுக்கு சரியா இருக்கும்..

இப்பலாம் தலைவரு என்னை எங்கடி கவனிக்குறாரு...

நீ பழைய துணி மணிய கவனிக்கத்தது போல தான்...

என்று சிரிக்க...

அயன் பண்ணி தலைவர சரி பன்றேன் பாரு..

என்று பதிலுக்கு அவளும் சிரிக்கிறாள்..

திரும்பவும் ஒரு சில புடவைகளை பார்த்துவிட்டு கடைசியாக அந்த மாம்பல டிசைன் புடவையை எடுத்து கொண்டு

இந்தம்மா இதே எடுத்துக்குறேன்..

என்று புடவை காட்டியப்படி கமலாட்சியிடம் ஐனுறு ரூபா நோட்டை நீட்டிக்கிறாள்..

சில்லறை இல்லையம்மா...

என்று கமலாச்சி சொல்ல..

சரி இந்த புடவைய யார்கிட்டயும் குடுத்துடாதீங்க.. உங்ககிட்டயே தனியா வச்சுக்கோங்க... நாங்க காய்கறி வாங்கிட்டு சில்லறை மாத்திட்டு வரோம்..

என புடவையை கமலாட்சியிடம் குடுக்கிறாள்..

கமலாச்சி புடவையை வாங்கி தனியாக வைத்தவாரு..

சரி.. சரி சீக்கிரமா வந்துடுங்க.. இருட்டிடுச்சுன்னா நான் கிளம்பிடுவேன்..

அதுக்குள்ள பத்து புடவ வித்துட்டியாமா..?

பத்து புடவ வித்தாலும் விக்கமா இருந்தாலும் ஆறு மணியாச்சுன்னா கிளம்பிடுவேன்..

ஏன்மா..

ஆறு மணிக்கு மேல கண்ண மறைக்குதுமா. இது மாதிரி தான் ரெண்டு நா முன்னால யாரோ ஐனுறு ரூபா கள்ள நோட்ட குடுத்து ஏமாத்திட்டு போய்ட்டாங்க.. நான் ரெண்டு நா பட்டினியா கிடந்தேன்... பட்டினியோட முதலாளியோட வசவ தான் தாங்கிக்க முடியல.. அதுல இருந்து ஆறு மணிக்கு மேல வியாபாரம் பண்றதில்ல...

என்ன மனுஷனுங்க... ச்சே உன்ன ஏமாத்த எப்படி தான் இந்த மிருகங்களுக்கு மனசு வருதோ... சரிம்மா நீ வித்துட்டு இரு.. நாங்க காய்கறி வாங்கிட்டு நீ போறதுக்குள்ள வந்துடுறேன்...

சரி போயிட்டு வாங்க...

இரு பெண்களும் கிளம்ப..

ஏய் கொஞ்ச நேரத்துல எனக்கு வேர்த்து வேட வேட வெத்துட்டு டி..

ஏன்..

எங்க அந்த கிழவி போன வாரம் ஐனுறு ரூபா கள்ள நோட்ட நாம தான் ஏமாத்துனும்னு கண்டு புடிச்சிட்டோன்னு..

தைரியம் ஒருவனை மேலே ஏற்றும் பயம் ஒருவனை கீழே இறக்கும்... நீ மேல போறியா கீழ போறியா..

நீ எங்க போறியோ அங்கேயே நானும் வரேன்..

பரவா இல்லயே.. நீயும் நல்லா தான் பேசுற..

என்றவாறு ஆட்டோவை கை காட்டி மறைத்து நிறுத்துகிறாள்..

என்னடி இன்னைக்கு அவளோ தானா.. அந்த கிழவிகிட்ட மாத்த முடியலைன்னா என்ன வா வேற இடத்துல மாத்துலாம்...

இல்ல இன்னைக்கு மாத்தினது போதும் வீட்டுக்கு போகலாம்...

என்று ஆட்டோவில் ஏறி இருவரும் செல்கின்றனர்... அவர்களின் பின்னால் போலீஸ் ஜீப் ஓன்று அவர்களை பின் தொடர்கின்றனர்...

அதே நேரம் கமலாட்சியிடம்..

என்னமா இன்னைக்கு புடவலாம் அவ்வளவா சிறப்பா இல்லயே...

என்று கமலாட்சியிடம் இருந்த புடவையினை பார்க்க..

யம்மா உன் பக்கத்துல இருக்குற அந்த புடவையை குடு பாக்கலாமா.. இல்ல யாரும் எடுத்து வச்சிருக்காங்களா..

யாரும் எடுத்து வைக்கல தாயீ இந்தா பாரு..

என்று எடுத்து குடுக்க...

வாங்கி பார்த்தவள் செம்மயா இருக்கே..

எவளோ..?

அதான் சொன்னேன்மா எத எடுத்தாலும் இருனுறுனு.

இந்தம்மா

என்று ஐனுறு ரூபா நோட்டை நீட்ட அதனை வாங்கி தனது சுருக்கு பையில் போட்டு மீதம் மூன்னுறு ரூபாய எடுத்து குடுக்கிறாள் கமலாச்சி ..


நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...