செல்வம்

bhagylakshman
பெண்மையக் கதைகள்
5 out of 5 (27 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

உள்ளம் உருதய்யா
உள்ளம் உருதய்யா முருகா…
உன் அடி காண்கையிலே….
என்று அதிகாலையிலையே டி.எம். எஸ் தன் தேன் குரலால் மக்கள் அனைவரையும் பக்தி பரவசத்தில் மூழ்கடித்துக் கொண்டிருந்தார்.

ஈரக் கூந்தலில் தண்ணீர் சொட்ட சொட்ட தன் மனம் உருகி அந்த முருப்பெருமான் சன்னதியில் கண்ணீர் வழிய வேண்டிக் கொண்டிருந்தாள் அனுபமா.

திருமணம் முடிந்து 7 வருடங்கள் உருண்டோடி எட்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தனர் விஷ்வா அனுபமா தம்பதியர்.
விஷ்வா ஒரு புகழ்பெற்ற கட்டுமான கம்பெனியில் உட்புற வடிவமைப்பு பிரிவில் வேலை செய்து வருகிறான். அனுபமா இல்லத்தரசியாக இருக்கிறாள். அதுவே அவளுக்கு பெரும் மனச் சுமையாகி போயிருந்தது.

வெளியிடக்களுக்கோ இல்லை நாள் கிழமை என்றோ உறவு முறை விசேஷங்களுக்கோ சென்று கிட்டதட்ட ஐந்து ஆறு வருடங்கள் ஆயிற்று... அவளுக்கும் ஆசை தான் இதுபோல் இடங்களுக்கு சென்று வர ஆனால் அவளே மறந்திருக்கும் ஒன்றை அடிக்கடி அனைவரும் நியாபகப்படுத்தி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அவள் மனதை நோகடிக்க அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான பாலமுருகனிடம் சென்று தன் மனக்குமுறலை கொட்டிக்கொண்டு இருந்தாள்.

"விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆச்சி இன்னும் கோவிலுக்கு போன மகாராணிய ஆளைக் காணும்... என்னத்தான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறது தானே ஒட்டும்". என்று முனுமுனுத்தப்படி வேலையை செய்து கொண்டிருந்தார் மாமியார் ரங்கம்.

மகனின் அரவம் கேட்கவும் அப்படியே பசைப்போட்டது போல வாய் ஒட்டிக்கொண்டு அமைதியின் மறுவடிவாய் வேலைச் செய்ய ஆரம்பித்தவரிடம் "இன்னும் அனு வரலையாமா" என்றபடி மகன் விஷ்வா அங்கு வந்தான். .

"ம்க்கூம்…. போனா போன இடம் வந்தா வந்த இடம்... கொஞ்சமாச்சி புருசாங்காரன் வேலைக்கு போகனுமேன்னு மனசுல பயம்னு ஒன்னு இருக்கா... விளங்காதவ…" என்று அவள் மேல் குறைகளை அடுக்க,

"ம்மா.. ம்மா… போதும் உன்னை எதுவும் கேக்கல... நீ உடனே ஆரம்பிக்காத" என்று அறைக்குள் புகுந்து விட்டான் விஷ்வா. அவனுக்குத் தான் தெரியுமே இது எதில் போய் முடியும் என்று, தாயின் இரண்டாம் கல்யாண நச்சரிப்பும் மனைவியின் கவலைகளும் அவனை நாளுக்கு நாள் மூச்சு முட்ட வைத்திருந்தது.

மனைவியின் வருகையை அவளது மெல்லிய கொலுசொலியில் வைத்தே கண்டு கொண்டவன் பருக குளிரிந்த நீரை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். மனைவியின் மேல் கரைகடந்த பாசத்தை காதலையும் வைத்திருந்தான் விஷ்வா.

அதை புன்னகையுடன் வாங்கிக் கொண்டவள் "கிளம்பிட்டிங்களா?" என்றாள்.

"ம் ஆமா அனு இன்னைக்கு ஒரு வீட்டு இன்டிரியர் டிசைன் முடிச்சாகனும்…. சரி நீ சீக்கிரம் சாப்பிடு டைம்க்கு மாத்திரைய போடு இப்படியே ஈர முடியோட இருக்காத முதல்ல தலைய துடை" என்று துண்டை எடுத்து மனைவியிடம் கொடுத்தவன் சட்டையை சரிசெய்தபடியே தன் மதிய உணவு டப்பாவை வாங்கிக்கொண்டு மனைவிக்கு ஒரு அவசர இதழொற்றலையும் வழங்கிவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டிருந்தான்.

எத்தனை மாத்திரை எத்தனை மருந்து எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினாலும் அவளிடத்தில் மாத்திரைக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒவ்வெரு முறையும் நாள் தள்ளி செல்ல அவளுக்கு இருக்குள் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது... அதுவே ஒன்றும் இல்லை என்று தெரிய வரும்போது அவள் தேறி வரவே இரண்டு வாங்கள் ஆகும். 7வருடம் தவமாய் தவமிருக்கிறாள் ஒரு பிள்ளை செல்வம் வேண்டும் என்று, சரி அது கிடைக்கும் போது கிடைக்கட்டும் ஆதரவற்ற இல்லங்களில் இருந்தாவது ஒரு செல்வத்தை தத்தெடுத்து வளர்க்கலாம் என்றால் மாமியாரின் வார்த்தைகள் அவளை ரணமாக்கி இருக்க எதுவுமே செய்ய முடியாத நிலமையில் இருந்தாள்.

மகன் செல்லும் வரை வாயை திறக்காத ரங்கம் மகன் தலை மறையவும் போனும் கையுமாக அமர்ந்துவிட்டார். தன் மருமகளை குறை சொல்லவும் அடுத்த வீட்டு மருமகளை பற்றி தெரிந்துக் கொள்ளவும் அவ்வளவு ஆர்வம்.

"ஆமா, அந்த பொண்ணுக்கு கல்யாணமாகி மூனு மாசம் தானே ஆச்சி இப்போ இரெண்டு மாசம் முழுகாம இருக்காளாமே"… என்றதும் எதிர் புறம் என்ன கூறியதோ "நீ வேற இங்க ஒன்னுத்தையும் கானும்... நான் வாங்கி வந்த வரம் அப்படி…. முழுசா ஏழு வருசம் ஆகுது அவ வயத்துல ஒரு புழு பூச்சிய காணும்… அவன் அதுக்கு மேல என்னமோ ஊர் உலகத்துல நடக்காத மாதிரி என் பொண்டாட்டி தான் எனக்கு எல்லாமே இன்னொரு கல்யாணம்னு என்னை கட்டாயப்படுத்தாதன்னு பாட்டு பாடிக்கிட்டு திரியறான் பைத்தியக்காரன்". என்று மகனின் மேல் உள்ள மனதாங்களையும் கூறியது அந்த நல் உள்ளம்.

இதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கோ அழுகையில் இதயம் விம்மியது. எத்தனை நாள் தான் இதை கேட்டும் கேட்காதது போல் ஒதுங்கி போவது ஒரு முடிவோடு வெளியே வந்தவள் "இப்போ என்ன வேணும் உங்களுக்கு என்னை அத்துவிட்டுட்டு வேற ஒருத்திய அவருக்கு கட்டி வைக்கனும் அவ்வளவு தானே?" என்றாள் மூச்சு வாங்க

போனில் பேசிக்கொண்டிருந்த ரங்கத்திற்கு அதிர்ச்சியில் போன் காதில் இருந்து நழுவியது. கேட்கட்டும் என்று தான் ரங்கம் சத்தமாக பேசியது ஆனால் அவரே எதிர்பாராதது இப்படியே முன்னால் நின்று பேசுவாள் என்பது சற்று நேரத்தில் ரங்கத்திற்கு முகமெல்லாம் வியர்த்து விட்டது. இருந்தும், "ஆமா நான் நினைச்சது எங்க நடக்குது... எப்போ என் புள்ளைக்கு நல்ல காலம் பொறக்குமோ" என்று காட்டமாய் கூறி அறைக்குள் செல்லும் சமயம் பழக்கூடையில் இருந்த கத்தியை எடுத்து கை நரம்பை அறுத்துக் கொண்டாள் அனுபாமா. "இப்போ பண்ணுங்க உங்க புள்ளைக்கு கல்யாணத்தை" என்று ஆத்திரத்துடன் கூறி அவளது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டதும் உடல் எல்லாம் வியர்த்து மயக்கம்வராத குறை தான் ரங்கத்திற்கு,

"கடவுளே நான் அவன் கேட்டா என்ன பதிலை சொல்லுவேன்". என்று பயத்தில் வெடவெடக்க அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தவர் அடுத்த பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

"நீ எல்லாம் எப்படி மா ரெண்டு புள்ளைய பெத்த... உனக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையாமா… குழந்தை மட்டும் தான் எங்க வாழ்க்கையா இல்லாத ஒரு உயிருக்காக இருக்க என் பொண்ணாட்டியோட உயிரை வாங்க உனக்கு எப்படி மா மனசு வந்துச்சி..நீ எவ்வளவு பேசி இருக்க இதுவரை ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருப்பாளா? நான் தப்பு பண்ணிட்டேன் மா தப்பு பண்ணிட்டேன்" என்று குமுறியவன்

"யமுனாவை கல்யாணம் பண்ணி அனுப்பின உடனே நானும் தனிகுடித்தனம் போய் இருக்கனும்… என்னை பெத்த அம்மாவாச்சே நானும் போயிட்டா யாரும் இல்லையேன்னு இருந்தா, என்னையே ஆனாதையாக்க பாக்குறியேம்மா அவ இல்லன்னா நான் உயிரேட இருப்பேன்னு நினைக்கிறியா... சத்தியமா இல்ல அவ போன அடுத்த நிமிஷமே நானும் அவ கூடவே போயிடுவேன்" என்று மகன் பேசியதில் உடைந்திருந்தார் ரங்கம்.

இன்னும் அவரை உருக்குலைக்க வைக்க மகள் யமுனா மருத்துவமனைக்குள் வந்தாள். தன் ஐந்து மாத கருவை சுமந்தபடி வந்த தங்கையை பார்த்ததும் முதலில் ஆச்சர்யம் கொண்டு பார்த்தவன் பின் கோவமாக அன்னையை பார்த்தான்.

"இதுக்குத்தான் யமுனா வீட்டுக்கு போகலாம்னு சொன்னா ஒவ்வொரு காரணமும் சொல்லி தடுத்தியாமா?" என்றான் விஷ்வா கோவமாக

"என்ன அண்ணா என்ன சொல்ற?" என்றாள் யமுனா அவர்கள் பேசிக்கொள்வது புரியாது


"நீயும் அவங்க சொல்றா மாதிரியே நடந்துக்கிட்டல்ல ச்சே உங்களையெல்லாம் நம்பி" என்று தலையில் அடித்துக் கொண்டான்.

"அண்ணா நீ என்ன சொல்ல வர்ற?" என்றாள் கெஞ்சலாக

"எல்லாம் உன் அம்மாவையே கேளு அவங்க சொல்லுவாங்க" என்றிட ரங்கம் அழுதபடி நின்றிருந்தார்

"நீயாவது சொல்லுமா" என்று தாயை உலுக்கினாள் யமுனா.

"அவக்க சொல்லமாட்டாங்க யமுனா ஏன்னா மொத்தமும் இன்னைக்கு தெரிஞ்சிடுச்சில்ல அதிர்ச்சியில சிலையாகி இருப்பாங்க… இரு நானே சொல்றேன்... நீ எத்தனை மாசம்" என்றான் வயிற்றைகாட்டி

இப்போது அவளுக்கு பயத்தில் வார்த்தை தந்தி அடித்தது. அனுவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு தான் வந்தாள், ஆனால் அவசரத்தில் தான் உண்டாகி இருப்பது அவர்களுக்கு தெரியாது என்பதை பதட்டத்தில் மறந்து தொலைத்து விட்டவள் "5 மாதம்" என்றாள் நடுக்கத்துடன்.

"என்கிட்டயோ இல்ல அனுகிட்டயோ ஒரு வார்த்தை கூட நீ கர்ப்பமா இருக்கறத சொல்லவே இல்லையே" என்றான் அழுத்தமாக,

"அண்ணா அது வந்து"

"என்ன யமுனா .. அது வந்து... உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க ரெண்டு பேரும் தேவை உன் வேலை முடிஞ்சதும் நாங்க தேவை இல்லை இல்லையா?" என்றான் ஆதங்கமாக

"நீ உண்டாகி இருந்தா நாங்க கண்ணை வைச்சிடுவோமா இல்லை உன் குழந்தையை தான் கேக்க போறோமா?" என்று வேதனையாக கூறியவன்

என் முன்னாடி நிக்காதிங்க போங்க என்னாலையே இதை ஏத்துக்க முடியல அவ நிச்சயம் தாங்க மாட்டா ஏதாவது ஆகிடும் போயிடுங்க… போகும் போது இவங்களையும் கூட்டிட்டு போ நான் மாச மாசம் பணம் கொடுக்குறேன் நீ அம்மாவை பாத்துக்க என்னால அவளை விட முடியாது" என்றான் எங்கோ பார்வையை பதித்து

"அண்ணா தப்பு தான் அண்ணா நான் உங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சி சொல்லாம இருக்கலண்ணா… உங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு அம்மா சொன்னாதால தான் நான் மறைச்சேன் என்னை மன்னிச்சிடு அண்ணா சாரி அண்ணா" என்றாள் அவனின் கரங்களை பற்றி தேம்பியபடி

"சரி யமுனா பரவாயில்லை... நீ போ நான் அனுவ பாக்க போறேன்" என்றான் உடைந்த கரகரப்பான குரலில், உடன் பிறந்த தங்கையும் பெற்று வளர்த்த தாயும் செய்தது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனம் இறுகி போயிருந்தது..

"அனுபமாவோட அட்டென்டர் யாருங்க?"

"நான் தான் நர்ஸ்"

"உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க சார்"

மருத்துவரின் அறைக்குள் நுழைந்தவனுக்கு கைகால் எல்லாம் நடுங்கியது. "வாங்க மிஸ்டர் விஷ்வா உங்காருங்க" என்று இருக்கையை காட்டியவர் அவங்களுக்கு "ஹெவி பிளட் லாஸ்… எப்படி இந்த மாதிரி ஒரு ஆக்ஸிடன்ட் நடந்தது… அவங்க இந்த மாதிரி நேரத்துல ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா? இரெண்டு முனு நாள் ஹாஸ்பிட்டல்லையே இருக்கட்டும். அப்புறம் புல் பெட் ரெஸ்ட் எடுக்கனும் 42 நாள் தான் ஆகுது" என்றார்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை "எதுக்கு டாக்டர்… என்ன ஆச்சி அவளுக்கு?" என்றான் நேரிடையாகவே

"உங்களுக்கு விஷயம் தெரிய வாய்ப்பில்லை தான் இது 42 நாள் என்பதால அவ்வளவா சிம்டம்ஸ் தெரிஞ்சி இருக்காது ஓகே… காக்ராட்ஸ் மிஸ்டர் விஷ்வா நீங்க அப்பாவாக போறிங்க" என்றார். மருத்துவர். அதன் பிறகு மருத்துவர் கூறிய எதுவுமே அவன் செவிகளை தீண்டவில்லை


உலமே தட்டாமலை சுற்றியது அவனுக்கு… அந்த மருத்துவரே கடவுள் ரூபத்தில் தெரிந்தார். உடனே அனுவை பார்க்க வேண்டும் என்று உள்ளம் துடித்தது… அவன் கால்கள் அடுத்த 5நிமிடத்தில் அனுபமாவின் அறைவாசலை அடைந்திருந்தது.

மெல்ல கண்களை திறந்தவளின் எதிரே கண்களில் நீரோடும் உதட்டில் உறைந்த புன்னகையோடும் மனைவியையே பார்த்திருந்தான் விஷ்வா.

"என்னங்க" என்றாள் ஈன ஸ்வரத்தில் "பேசாதடி என்னை விட்டு நீயும் நம்ம புள்ளையும் போக பாத்திங்கள்ள பேசாதடி" என்று அழுதவனின் வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் திணறியவளுக்கு கண்களில் துளிர்த்த நீர் துளிகள் காதோரம் உருண்டு ஓடியது.

தன் வயிற்றில் கரங்களை கொண்டு செல்லவே அவளுக்கு நடுங்கியது… "என்னங்க" என்னாள் அழுகையோடு
"இனி எதுக்காவும் அழக்கூடாதுடா... நீ அழுதது எல்லாம் போதும்…" என்று அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் விஷ்வா.

எல்லோருக்கும் பிள்ளைச் செல்வம் என்பது ஒரு வரம் அது கிடைக்கும் போது கிடைக்கட்டுமே… சிலருக்கு சீக்கிரம் கிடைக்கும் சிலருக்கு தாமதமாகும்… சரி அது இல்லை என்றாலும் கூட அது அவர்களுடைய விஷயம்... அதை பத்தி அவங்களே கவலை படாத போது சுத்தி இருக்குற நாம எதுக்கு கவலைபட்டு அவங்க மனசை ரணமாக்கனும்...

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...