கண்களுக்கும் வாசமுண்டு..........

priyapandu
காதல்
5 out of 5 (7 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

கண்களுக்கும் வாசமுண்டு…….

அந்திமாலை நேரம் அது…… கொடைகானலின் சில்லென்ற காலநிலை….. உடம்பை சில்லேன்று துளைக்கும் அளவிற்கு குளிர் நடுங்க வைத்தது….. ஆனாலும் அங்கு வாழும் மக்களுக்கு அது பழகியது தானே….. மாலை நேரத்தில் சாலைகளின் ஓரத்தில் அந்த குளிருக்கு இதமாக டீ கடைகளும்…….சோலைக்கருகு கடைகளும் ஜெகஜோதியாக மின்னிக்கொண்டு இருந்தது…….

ஒன்று இரண்டு கடைகள் இல்லை….. எங்கு பார்த்தாலும் அப்படியான கடைகள் தான் கண்களுக்கு தெரிந்தது……. அதிலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது….. கொடைக்கானலின் சிறப்பான சுற்றுலா தளமான லேக்கை சுற்றி தான் அத்தனை கூட்டம்……

அந்த லேக்கை சுற்றிலும் குதிரை சவாரி….. சைக்கிள் சவாரி என்று நிறைய மக்கள் தங்கள் நாட்களை கொண்டாடிக்கொண்டு இருந்தனர்…….

அப்படிப்பட்ட கொடைக்கானலின் ஒரு தெருவில் தான் ஒரு வீட்டில்……

“அடியே….. மயூ இவ்வளவு நேரமா கிளம்ப……..”என்றது ஒரு குரல்……..

அந்த குரலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டாமல் ஒருத்தி….. அந்த வீட்டின் மாடியில் நின்று எதையோ குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள்….. அவள் கண்கள் குறுகுறுப்பில் யாராக இருந்தாலும் விழுந்துதான் போவார்கள்…. அப்படிப்பட்ட மாய விழி அவள் கண்கள்….. ஆனால் அவளுக்கோ…. எதை பார்த்தால் மயக்கம் என்றால் பூக்கள்….. வண்ணமயமான பூக்களை பார்த்தாள் அவளது கண்கள் மயங்கி தான் போகும்…….

ஆம் அவள் ஒரு பூக்களின் ரசிகை என்பதை விட பூக்களின் வெறியை என்று சொல்லலாம்…… அவள் பெயர் மயூரி…… அவள் அன்னை தந்தைக்கு மட்டும் மயூ….. அவளுக்கு என்று நண்பர்களுக்கு யாரும் இல்லை….. அவள் படித்தது எல்லாம் கொடைக்கானல் தான்….. கல்லூரியும் இங்கே தான்….. படித்தது….. எம்.பி.ஏ…… இப்போது தான் படித்து முடித்தாள்….. அவளுக்கு எங்கும் வேலைக்கு போக விருப்பம் இல்லை….. அவளுக்கு சொந்தமாக பூ பொக்கே ஷாப் வைக்க ஆசை…… இதுவே அவளுக்கு பூக்களின் மீது இருக்கும் காதலால் வந்தது தான்…….

மற்றபடி மயூரிக்கு வேலைக்கு செல்வதில் எல்லாம் விருப்பம் இல்லை….. அவளுக்கு காலம் முழுவதும் தன் தந்தை….. தாயுடன் தான் இருக்க வேண்டும்…… அதற்கு எதற்கு இவ்வளவு படித்தாள் என்று கேட்டாள்… அதற்கு அவள் தந்தை தான் காரணம்……

“கரன் அப்பா நா வேலைக்கு போலப்பா……. நா படிச்ச சிங்கிள் டிகிரி போதும்ப்பா…… இப்போ எதுக்கு என்னை எம்.பி.ஏ படிக்க சொல்றீங்க…….”என்று அவள் அப்பா கருணாகரனிடம் கேட்க…… அதற்கு அவர் புன்னகையுடன்……

“அதலா படிக்கிறது வீணாகாது பாப்பா…… நீ வேலைக்கு போனும்னு நா சொல்லல…. ஆனா இரண்டு டிகிரி வாங்குறதுல என்ன தப்பு…… இன்னிக்கி இல்லைனாலும் உன்னோட எதிர்காலத்துக்கு நல்லது டா பாப்பா…. அதுக்கு தான் படிக்க சொல்றேன்……..”என்று அவளை படிக்க வைத்தார்….. அவளது செல்ல கரன் அப்பா……

“ஏங்க…. அவ தான் வேலைக்கு போகமாட்டேனு சொல்றாளே… அப்புறம் ஏன் படிக்கனும்…..”என்று வானதி கேட்க……..

“தப்பு வானு….. பொம்பளை பிள்ளைய படிக்க வைக்குறது என்னிக்கும் தப்பாகாது மா…… அவ வேலைக்கே போலேனாலும்….. நாளைக்கு இவளால ஒரு குடும்பம் நல்ல எண்ணத்தோட வளர இவ படிப்பு இவளுக்கு உதவும்…… அதுனால பொண்ணுங்கள படிக்க வைக்கிறது என்னிக்கும் வீணா போகாது……..”என்று சொன்னார் கருணா……..

மயூரியின் தந்தை அப்படிதான்…. கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பவர்……. அதற்கு அவர் சிறு வயது தனிமை கூட ஒரு காரணமாக இருக்கலாம்….. ஆம் கருணாகரன் பிறந்ததில் இருந்து வளர்ந்தது…. படித்தது அனைத்தும் ஒரு அநாதை ஆசிரமம் தான்……

ஆம் கருணாகரனின் இடது கால் கொஞ்சம் வளைந்து இருக்கும்……. அதனால் அவரால் கொஞ்சம் தாங்கி தான் நடப்பார்…… அவரது மனதில் இதனால் தான் தன் தாய் தந்தை தன்னை விட்டுவிட்டு சென்றார்களோ….. என்று பதிந்துவிட்டது… அதனாலே அவர் மகளிற்கு சிறுவயதில் இருந்து உடலால் ஊனமுற்றவர்களின் மீது ஒரு நட்புணர்வுடன் வளர்த்தார்…… அவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் உடல் ஊனமுற்ற பள்ளியில் தான் அவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார்……..

மயூரிக்கு விடுமுறை நாட்களில் அவளை அங்கு அடிக்கடி அழைத்து செல்வது அவரது வழக்கம்….. மயூரியும் அந்த குழந்தைகளுடன் வளர்ந்ததாலோ என்னவோ அவளுக்கு அவர்கள் என்றும் வித்தியாசமாக தெரிந்ததில்லை……. அவர்களும் சாதாரண குழந்தைகள் தான் என்பது மட்டும் அவள் ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்……

வானதியும் அப்படிதான்…… வானதிக்கு தாய் மட்டும் தான் இருந்தார்…… வானதியும் கருணாகரனும் ஒரே கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்பட்டு இருவரும் வானதியின் தாய் அனுமதியுடன் திருமணம் செய்துக்கொண்டனர்……. அடுத்து ஒரு வருடத்தில் வானதிக்கு மயூரி பிறக்க…… பிறந்த போது வானதியின் தாய் மயூரிக்கும் எதாவது குறை இருக்குமோ என்று பயப்பட…. ஆனால் வானதி…..”என் குழந்தை எப்டி இருந்தாலும் எங்களுக்கு பிடிக்கும் மா……. “என்று அவரது பயத்திற்கு விளக்கம் கொடுத்துவிட்டார்……..

ஆனால் மயூரி எந்த குறையும் இல்லாமல் மாறாக அனைத்து அழகையும் தானே பெற்றது போல் பிறந்தாள்…..பின் மயூரி காலேஜ் சேர்ந்த போது தான் அவளது பாட்டி இறந்து போனார்……..

இப்போது……. மயூரி தன் வீட்டு தோட்டத்தில் நட்டு வைத்த அனைத்து மலர்களையும் கண் குளிர ரசித்துக்கொண்டு இருந்தாள்…… அவளுக்கு காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் பூக்களை ரசிக்கும் அவளுக்கான நேரம்….. அதில் அவள் யாரையும் நுழைய விடமாட்டாள்……. இப்போது அவளது நேரம் முடிந்ததும் பால்கனியில் இருந்து அறைக்குள் வந்தவள்….. முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கட்டிலில் கிடந்த துப்பட்டாவை அணிந்துக்கொண்டு…… தன் ஹான்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்……..

மயூரி மாடியில் இருந்து கீழே இறங்குவதை பார்த்த வானதி……...”ஏன்டி….. எவ்வளவு நேரம் கூப்டுறது…… செடி வாங்க நர்சரி போனும்னு சொன்னல….. மணிய பாரு…. இப்போவே 6 ஆகிடுச்சி….. இதுக்கு மேல போனா பனியில நனைய போற…….”என்றார் அவளை விளையாட்டாக முறைத்தவாறு………..

“ம்ச்….. வானு….. என் டைம் 5 டு 6னு தெரியும்ல….. அந்த நேரத்துல இடியே விழுந்தாலும் நா வரமாட்டேனும் உனக்கு தெரியும்…..”என்றாள் அவரை கொஞ்சலாக பார்த்தவாறு…….

அதில் வழக்கம் போல மயங்கியவர்……..”போடி உனக்கு இதே வேலையா போச்சி….. இப்டி கொஞ்சலா பார்த்தே என்னை மயக்கிடு…….”என்றார் செல்லமாக அவள் கன்னத்தில் குத்தியவாறு…….

அதில் அவளும் புன்னகைத்துக்கொண்டே…….”சரி வானு…. நா நர்சரி போய்ட்டு வரேன்…… கருணா வந்தா நானே வந்துடுறேனு சொல்லு…… பனில அவர வர வேணாம்னு சொல்லிடு…….”என்றாள் ஒரு ஆகாய நீல நிற ஸ்வட்டரை போட்டுக்கொண்டு……..

“ஆமா உன் அப்பா என் பேச்ச கேட்டுட்டாளும்………. சரிடி சீக்கரம் போய்ட்டு வா….. அங்க வழில எதாவது பூவ பார்த்துட்டே நிக்காத…… அது என்னவோ…. உனக்கு அந்த பூ மேலலா ஏன் தான் இவ்வளவு ஆசையோ தெரில…...”என்றார் அவர்….. பின் இருக்காதா சின்ன பிள்ளையில் இருந்து தங்கள் வீட்டின் தோட்டத்தில் இல்லாத செடிகளே இல்லை என்பது போல் அனைத்தையும் வாங்கி வளர்க்கிறாள்…… அதற்கு கருணாவும் தன் மகளுக்கு சப்போர்ட்……….

“மா…… என் ஆசைனு சொல்லாத…… அது ஒரு வெறியாவே மாறிடுச்சி……. ம்ச்….எவ்வளவு பூ செடிய நட்டு வச்சாலும் எதாவது புதுசா செடி வருதானு பார்த்துட்டே இருக்க தோணுது…… இப்போ கூட எதோ நாலு நியூ டைப் செடி மார்க்கெட்ல புதுசா வந்துருக்குனு படிச்சேன்….. அதா கிடைக்குதானு பாக்க போறேன்…… கருணாட்ட சொல்லிடு பாய்……...”என்று அவள் ஓடிவிட்டாள்……. வானதி தன் மகளை நினைத்து புன்னகையுடன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்………

இங்கு மயூவோ…… அந்த கொடைக்கானலில் அனைவரது வீட்டின் வாசலிலும் எதாவது வித்தியாசமான பூச்செடி தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றாள்….. அவள் வீட்டின் இரண்டு தெரு தள்ளி இருக்கும் தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருக்க…. அப்போது தான் அதை கவனித்தாள்…….. ப்லூம்ஸ் பூக்கள்……… என்று புதிதாக ஒரு நர்சரி அங்கு முளைத்திருந்தது…….. அந்த நர்சரியின் பெயரே வித்தியாசமாக இருந்தது…… முதல் வார்த்தை ஆங்கிலத்தில்…… இரண்டாவது வார்த்தை தமிழில்….. அதாவது அதற்கு அர்த்தம் பூக்கும் பூக்கள்…….

அதனை பார்த்ததும் மயூரி அந்த கடையின் உள்ளே நுழைந்துவிட்டாள்….. அந்த கடை இப்போது தான் புதிதாக திறந்ததற்கான அடையாளமாக அந்த கடை எங்கும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது……… மயூரி உள்ளே சென்றதும் அவள் கண்கள் பெரிதாக விரிந்தது….. ஆம் அங்கு அவள் பாதி காணாத….. அவளிடம் இல்லாத பூச்செடிகள் இருந்தது……. அதனை பார்த்ததும் அவள் மனம் துள்ளியது…… கண்களுக்கு இனித்தது……….

அங்கி நிறைய பேர் தங்களுக்கு தேவையான செடிகளை ஆர்வமுடன் பார்ப்பதும் வாங்குதுமாக இருக்க……. மயூரியும் செடிகளை பார்த்து அதன் பூக்களை ரசிக்க ஆரம்பித்தாள்….. அதில் இருக்கும் நிறைய பூக்களின் பெயர் அவளுக்கு தெரியவில்லை…….

ஒரு அழகிய பர்பிள் நிற பூக்கள் அவள் கண்களை முதலில் கவர……. அதன் அருகில் சென்று அதனை தொட்டுப்பார்த்தவள் அதன் அழகில் மயங்கி……..

“சார் இதோட நேம் என்ன…….”என்று திரும்பி பார்க்காமல் கேட்க………

“பியர்டட் ஐரிஸ்…………. அது பேரு……. அதுக்கு பெல்ஜியன் ப்ரின்சஸ்னு ஒரு பேர் இருக்கு….. அதோட வாசனை சாக்லேட் மாறி இருக்கும்…….ரைன்போ…. கலர்ஸ்ல பூ பூக்குற செடி கூட கிடைக்கும்…..”என்றது ஒரு இனிமையான ஆண் குரல்……. ஒரு ஆணின் குரலில் இவ்வளவு இனிமை இருக்குமா……. என்பது மயூரியின் எண்ணமாக அப்போது இருந்தது…… அந்த இனிமையான குரலிற்கு சொந்தகாரனை பார்க்க நிமிர….. அவளுக்கு எதிரில் நின்றிருந்தான் ஒருவன்……. கம்பீரமாக இல்லை ஆனால் பூ போல மென்மையானவன் என்பது அவளுக்கு பார்த்ததும் தோன்றியது………. அவனையே அவள் பார்க்க….. முகத்தில் புன்னகையுடன்…… கண்களில் ஒரு கூலர்ஸுடன் நின்றிருந்தான்….. அவன்………

அந்த புன்னகை மயூரியை அசைத்தது…….. எதிரில் எந்த பதிலும் இல்லாததால் அவன்…...”இதோட ரைன்போ கலர்ஸ் வேணுமா மேம்…...”என்றான்…… அதே இனிமையான குரலில்……. அதில் கொஞ்சம் நினைவிற்கு வந்தவள்……..”ஹான்……. ம்ம்… ஆமா வேணும்…….”என்றாள் தன்னை சமாளித்தவாறு……. அவளின் தடுமாற்றம் அவனின் முகத்தில் புன்னகை பூக்க செய்தது…….. அவனின் புன்னகை அவளை எதோ செய்தது………

அதில் இருந்து அடுத்த பூக்கள் அருகில் வந்தவள்…… ஒரு பிங்க் நிற பூக்களை பார்த்து மயங்கி போனாள்……...”இந்த பிங்க் பூ……….”என்று அவள் ஆரம்பிக்க…….

“அது ஓரியன்டல் லில்லி………. ரொம்ப ஸ்பெஷல்…… மிட்நைட்ல தான் பூக்கும்…… அதுல இருந்து தான் பல பர்ஃபியூம் தயாரிக்கிறாங்க…….. அதுலையும் வைட்……… யல்லோ கலர்ஸ் இருக்கு……..”என்றான் அந்த செடி பக்கம் பார்க்காமல் மயூரியை பார்த்தவாறே………

அதில் மயூரி அவனை அழுத்தமாக பார்க்க……….

“என்னடா சர்னேஷ்….. கொஞ்ச நேரம் ரேஸ்ட் எடுக்காம அதுக்குள்ள கஸ்டமர் டீல் பண்ண ஆரம்பிச்சிட்டியா……...”என்று அங்கு ஒருவன் வர…….. அவன் சொன்னதில் புன்னகைத்த சர்னேஷ்……….”ஆண்டனி அதுக்குள்ள சர்ச் போய்ட்டு வந்துட்டியா……..”என்றான்…… இப்போதும் அவனது பார்வை மயூ பக்கம் தான் இருந்தது…… ஆனால் அவனது பதில் தனக்கு பின்னால் நின்றிருந்தவனுக்காக இருந்தது……

அதில் மயூ அவனை வித்தியாசமாக பார்க்க…… அதனை சர்னேஷ் உணர்ந்தானோ என்னவோ….. அவளை பார்த்து புன்னகைத்துக்கொண்டே…….

“ஆண்டனி மேடம்க்கு ஃப்ளவர் வேணுமாம் காட்டு……….”என்று தனக்கு பின்னால் இருந்த சேர் நோக்கி மெதுவாக சென்றான்……. அவனது நடையில் வேகம் இல்லை…. அதே நேரம் தடுமாற்றம் இல்லை…… ஆனால் அதில் எதோ வித்தியாசம் இருந்தது…… போகும் அவனையே அவள் பார்க்க….. ஆண்டனி அவள் சர்னேஷை பார்ப்பதை பார்த்து…….

“மேடம்……….. என்ன வேணும்……..”என்றான் கடுப்பாக……… அதில் மயூ திடீர் என்று அதிர்ச்சியாகி அவனை பார்க்க……..”சாரி சாரி சார் நா…… வேணும்னு பாக்கல…...”என்க

அவளின் இந்த தடுமாற்றம் ஆண்டனிக்கு கள்ளம் இல்லா குழந்தையின் செயலை நியாபகப்படுத்த அதில் புன்னகைத்தவன்….. மயூவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்…….. “நா மயூரி…...”என்று அவளும் அறிமுகப்படுத்திக்கொள்ள……. பின் இருவரும் தங்களை பற்றி பேசிக்கொண்டு அவளின் பூக்களின் மீதான விருப்பத்தையும் கூற…… ஆண்டனி அவளது பூக்களின் கலக்ஷனை கேட்டு ஆச்சரியப்பட்டான்………

“ஹேய்….. உன்ட நிறைய கலக்ஷன்ஸ் இருக்கா………. “என்று ஆச்சரியமாக கேட்க……..

“ம்ச்…. இவ்வளவு நாள் அப்டிதான் நினைச்சென் ஆனா….. என்ட இல்லாத நிறைய செடி இங்க இருக்கு……….”என்று சர்னேஷை பார்த்தவாறு சொல்ல……. ஆண்டனி அவளை கூர்மையாக பார்த்தவாறு………

“அவன் என் ஃப்ரண்டு சர்னேஷ்……….. நாங்க ரெண்டு பேரும் தான் இந்த நர்சரியோட ஓனர்…….”என்றான் ஆண்டனி குறும்பாக……….

அவன் முகத்தில் தெரியும் குறும்பில் புன்னகைத்தவள்……. சர்னேஷையே பார்க்க….. அவன் அங்கு உட்கார்ந்து டேபிளில் இருந்த பேப்பரில் எதோ கைகளால் தடவிப்பார்த்துக்கொண்டு இருந்தான்…… அதிலே மயூவிற்கு அனைத்தும் விளங்கியது…… அதில் அவள் முகம் கொஞ்சம் கூட பரிதாபத்தை காட்டவில்லை….. அதற்கு பதில் நீளமான புன்னகை மட்டுமே தோன்றியது அவள் இதழ்களில்…….. இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆண்டனிக்கு மயூவை பார்த்து ஆச்சரியமானான்….. ஏனென்றால் அவன் நண்பனை யார் இதுவரை கண்டாலும் அவர்கள் முகத்தில் ஒரு பரிதாபத்தை தான் முதலில் வரும்….. அதனாலே ஆண்டனி யாரையும் சர்னேஷ் அருகில் நெருங்கவிடுவது இல்லை……. அவர்கள் யாராவது போய் அவனிடம் பரிதாபப்பட்டு பேசி அவனது மனதை நோகடித்துவிட்டால்…… அதனாலே ஆண்டனி அவனை யாரும் நெருங்கவிடமாட்டான்……..

ஆனால் இன்று மயூரி பார்வை ஆண்டனியை கவர்ந்தது……..

“ம்ம்ம்…. சரி வாங்க மேடம் அவன் கிட்ட உங்கள அறிமுகப்படுத்துறேன்……..”என்றான் ஆண்டனி…… ஆனால் மயூரி அவனை முறைப்பாக பார்த்தவாறே…….”நா சின்ன பொண்ணுதான் அண்ணா……. பேர் சொல்லியே கூப்டுங்க…….”என்றாள்……

அவளின் அண்ணா என்ற உரிமையான அழைப்பு அவனை அசைக்க புன்னகையுடன் சரி என்று தலை ஆட்டிவிட்டு சர்னேஷிடம் அழைத்து சென்றான்……. சர்னேஷிடம் அவளை அறிமுகப்படுத்த சர்னேஷ் முகம் வசீகரமானது…….”என்னடா அதுக்குள்ள உனக்கு தங்கச்சி கிடைச்சாசா……...”என்றான் புன்னகையுடன்…… அவனது புன்னகை அவ்வளவு அழகானது…….. அதை பார்த்து மயங்கிவிட்டாள் மயூ………

“ம்ம்ம்…. ஆமா டா மயூக்கு கொஞ்சம் செடி வேணுமாம்……. நா பார்த்து எடுத்து வைக்கிறேன் நீங்க பேசிட்டு இருங்க…….”என்றவாறு ஆண்டனி சென்றுவிட்டான்………

அவன் சென்றதும் மயூ அமைதியாக இருக்க சர்னேஷ்…..”என்னங்க அமைதியா இருக்கீங்க……. “என்றான்…….அதை கேட்ட மயூ தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் தனது பூக்களின் மீது இருக்கும் விருப்பத்தை பற்றியும் பேச இருவரும் அன்றே நெருங்கிவிட்டனர்……. மயூ அவனை பற்றி கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை………

இதுவே கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது……. இருவரும் தங்களின் விருப்பு..வெறுப்பு பற்றி பேசினர்….. மயூவின் அப்பா அம்மாவிடம் சர்னேஷ்…… ஆண்டனியை அறிமுகப்படுத்தினாள்…… அது போல ஒரு வாரம் தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்….. தன் அம்மா அப்பாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு இருவரையும் தோட்டத்திற்கு அழைக்க ஆண்டனி அவள் அப்பாவிடம் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்றான்……….

சரி என்று இருவரும் மட்டும் தோட்டத்திற்கு செல்ல…...இங்கு ஆண்டனியிடம் மயூவின் அப்பா இருவரையும் பற்றி கேட்டார்………

“நாங்க ரெண்டு பேரும் ஆர்ப்பனேஜ்ல தான் வளர்ந்தோம் அங்கிள்……. நானும் அவனும் ஒரே வருஷம் தான் சேர்ந்தோம்….. என் அப்பா அம்மா ஒரு விபத்துல இறந்து போய்ட்டாங்கனு மதர் சொல்லுவாங்க…….. ஆனா சர்னேஷுக்கு கண்ணு தெரிலனு கொண்டு வந்து ஆசிரமம் வாசலுல போட்டுடாங்கனு அங்க உள்ளவங்க சொல்லுவாங்க……. அதுனாலையே அவன யாரையும் நா நெருங்கவிடுறது இல்ல….. அவன பரிதாபமா பாக்குறவங்கள அவன் விரும்பமாட்டான்…… அது அவனுக்கு தெரிலைனாலும் அவனால அத உணர முடியும்….. ஆனா மயூ கண்கள் அவன ஒருவித நேசத்தோட பார்த்தது……. அதனால தான் சர்னேஷும் அவகூட சாதாரணமா பழகுறான்……..”என்று தங்களை பற்றி சொல்ல….. அதில் கருணாவும் தன் மகளின் விருப்பம் அறிந்துதான் இருந்தது….. இந்த ஒருமாத காலமாக அவளின் நடவடிக்கை அவர் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்….. இதை பற்றி தன் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள……..

“அதுனால என்னங்க…… அந்த பையனுக்கு கண்ணு தெரிலனு நீங்க தயங்குறீங்களா………..”என்றார் வானதி……..

அதில் கருணா அதிர்ந்தார்……...”உங்க கிட்ட இருந்து இத நா எதிர்ப்பார்க்கலங்க….. உங்க மேல எனக்கு வந்த காதல்……. ஏன் நம்ம பொண்ணுக்கு அந்த பையன் மேல வரகூடாது……… வந்தா தப்பாங்க………..”என்றார் வானதி………

அதில் கருணா தன் தவறை உணர்ந்தவர் மனம் உடனே தெளிந்து போனது…… தன் மகள் அவள் விருப்பத்திற்கு…. அவளது சந்தோஷத்திற்கு தான் எப்போதும் தடையாக இருக்க போவதில்லை என்று அவருக்கு புரிந்து போனது………

அதனாலே இன்று சர்னேஷை பற்றி அவர் ஆண்டனியிடம் கேட்க காரணம்……. அவனும் அவரை போல அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன் என்பதில் அவருக்கு அவன் மீது இன்னும் விருப்பம் கூடியது…….

இங்கு தோட்டத்தில் தான் வளர்த்த செடிகளை அவன் கையால் தொட வைத்து அதனை உணர வைத்தவள்….. அந்த பூக்களின் வாசத்தை நுகர செய்து….. அது என்ன பூ என்று அவனை கூற செய்தாள்………..அவனிடம் அது எப்போது வாங்கியது என்று அதற்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு இருந்தாள்….. அவளின் தொடுகை அவனை தான் இம்சை செய்துக்கொண்டிருந்தது…… இது இன்று நடப்பது இல்லை….. அவள் அறிமுகம் ஆனதில் இருந்து அவளின் பேச்சி….. அவளின் பூக்களின் மீதான விருப்பம் அவனை அசைத்து பார்த்தது….. அவனிடம் பேசிவிட்டு அவள் சென்றதும் அவனின் தனிமை அவனை கொன்றது…… அவளிடம் பேசாமலும் அவனால் இருக்க முடியவில்லை…….

அதும் அவனுக்கு கண் தெரியவில்லை என்பதை ஒரு அவள் கணக்கில் கொண்டதாக தெரியவில்லை…….. எப்போதும்…… "சரு…….. இந்த ரெட் கலர் பூ அழகா பூத்துருக்குமா……. பாத்தியா…….. வாவ்………..”என்பாள்…….

“சரு…….. வைலட் கலர் பூவோட செடி ஸ்டாக் இல்ல…… இத பாக்க மாட்டியா…….” கோவமாக………

இப்படியாக அவனை ஒரு சாதாரண மனிதனாக தான் உணர வைப்பாள்…… அதுவே அவள் மீது அவனுக்கு மலை அளவு விருப்பம் உண்டாக காரணம்…… அதும் ஆண்டனியிடம் ஒரு நாள்……..

“என்னடா என்னை ஒருத்தரையும் நெருங்க விடமாட்ட…… இப்போ என்னனா மயாவ மட்டும் எங்கிட்ட நெருங்க விட்டுருக்க…….”என்று தன் சந்தேகத்தை அவனிடம் கேட்க……..

ஆண்டனி அவனின் மயா என்ற அழைப்பை கேட்டு புன்னகையுடன்…..”வேற யாரு உன்ன பார்த்தாலும் அவங்க முகத்துல உன் மேல பரிதாபம் தான் தெரியும்….. ஆனா இவ முத தடவ உன்ன பார்க்கும் போதே அவ கண்ணுல நேசம் தான் தெரிஞ்சிது…… .”என்று முடித்துவிட்டான்………

இன்று….. அதை எல்லாம் நினைத்துக்கொண்டு மயூரி பேசுவதை புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்க…….. திடீர் என்று அவன் இரு கைகளையும் இதமாக பற்றிய மயூ தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்…… அவளின் இந்த செயலில் சர்னேஷின் உடல் சிலிர்த்தது……. மனதில் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் அதே நேரம் இது வேண்டாம்….. என்ற இரு உணர்வுடன் அவளின் வார்த்தைக்காக காத்திருந்தான்……… மயூவும் மனம் படபடக்க….. அவனை ஆழமாக பார்த்தவள்……..

“ஐ லவ் யூ….. சரு……..”என்றாள் குரலில் மொத்த காதலையும் கொட்டியவாறு…….

அதில் சர்னேஷ் கண்கள் கலங்கியது……. அவன் மனம் கூத்தாடியது….. இருந்தும் அவளுக்கு நான் பொருத்தம் இல்லாதவன் என்பதிலே அவன் மனம் உலற……….

“ம்ச்…… வேண்டாம்…...”என்றான் ஒரே வார்த்தையில்….. அவன் கைகளை அவள் கன்னத்தில் இருந்து பிரிக்க மனம் இல்லாமல் பிரிக்க நினைக்க…… அதற்கு அவள் தான் அவனை விடவில்லை……. இன்னும் அழுத்தி அவன் கைகளை பிடித்துக்கொண்டவள்……..

“ஏன்…...”என்றாள்

“ம்ச்…… என்ன எனக்கு வாழ்க்கை குடுக்க போறீயா……...”என்றான் கடுப்பாக……… அவன் மனம் அப்படிதான் நினைக்கிறதா என்று கேட்டாள் இல்லை தான்….. ஆனால் அவள் வாழ்க்கை அவனுக்கு முக்கியம்……..

அதில் மயூவின் முகத்தில் குறும்பு புன்னகை ஒளிர……...”ம்ம்…. வேணும்னா நீ எனக்கு வாழ்க்கை குடேன்……...”என்றாள்

அவளின் முகத்தில் இருந்த அவனது கை மெதுவாக அவள் கன்னத்தில் இருந்து இறங்கி அவள் இதழை வருட……… அது சொன்னது அவள் தன்னை கேலி செய்வது……… அதில் அவன் முகத்திலும் புன்னகை விரிந்தது………………

மயூ தன் நுனி கால்களை நின்று…. அவன் உயரத்திற்கு வந்தவள்….. அவன் கண்கள் இரண்டிலும் தன் முதல் முத்திரையை பதித்தாள்…...

“கண்களுக்கும் வாசமுண்டு…………..”என்று அவள் உதடுகள் முனுமுனுக்க. இன்னும் அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தது………….

(முற்றும்)

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...