நான் வரட்டுமா

உண்மைக் கதைகள்
4.9 out of 5 (21 ரேட்டிங்க்ஸ்)
இந்தக் கதையைப் பகிர

“நான் வரட்டுமா அக்கா “ என்று கேட்டாள் செண்பகம்.


“செத்த இருந்துட்டு போடி , வரது ஆடிக்கோ !அமாவசைக்கோ !
கால் ‘ல’ சுடுதண்ணி ஊத்துன கணக்கா
அதுக்குள்ள பறக்கிற “ என்றாள் கண்மணி.


கண்மணியும், செண்பகமும் இருபந்தைந்து
வருட பக்கத்து வீட்டு பழக்கம் . அது வாடகை வீடு.
செண்பகம் கல்யாணமாகி ஒரு வருடத்தில் அங்கே குடியேறியவள். அன்று முதல் மலர்ந்த நட்பு.வாழ்க்கை முன்னேற்றமும் , சமூக பார்வையும் நம்மீது படவேண்டும் என்பதற்காக காலம் அவர்களை பிரித்துவிட்டது. இப்பதான் கடந்த மூன்று வருடமாக அவங்க அவங்க சொந்த வீடு கட்டி குடிபோய்விட்டார்கள். கண்மணியை விட செண்பகம் வயதில் சிறியவள்.அதனால் அக்கா என்று முறை சொல்லி கூப்பிடுவாள். கண்மணிக்கு ரெண்டு மகள். மூத்தவளை கரையேற்றிவிட்டாள். இளையவள் மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருக்கிறாள். செண்பகத்துக்கு அவளே சொல்லுவாள்.


அன்று காலையில்


“அக்கா ,அக்கா ”என்று வாசல் கதவண்டை கூப்பிட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் செண்பகம்.


“வாங்க வாங்க இப்பதான் இடமெல்லாம் கண்ணுக்கு தெரியுதோ ?” என்று வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றாள் கண்மணி.


“எங்க அக்கா வீட்டை விட்டு நகல முடியலே;
காலையில அஞ்சு மணிக்கு எந்திச்சதுல இருந்து
ஒரே வேலைப்பாடு ;
எங்க நகல முடிது?
காலையிலே மூணு வகையான டிபன்
பெரியவனுக்கு இட்லி , சின்னவனுக்கு தோசை ,
அவருக்கு சுகர் , பிரசர் இருக்கிறனால கோதுமை கஞ்சியோ ‘இல்லைன்னா ‘ கோதுமை
தோசையோ செஞ்சி முடிக்கிறதுக்குள்ள மணி
பத்து ஆகுது . இதற்கிடையில டீ , காபி , தெரு வாசல கூட்டி பெருக்கி , மாடி தோட்டம் வேற அத பார்க்கணும் “
என்று அலுத்து கொண்டாள் செண்பகம்.


“இங்க மட்டும் என்ன அதே கதைதான் உனக்கென்ன பசங்க ~ இருக்கிறத தின்னுட்டு போயிருவாங்க , நான் பொட்ட பிள்ளையில பெத்து வச்சிருக்கேன் “ வாய்க்கு ரூசியா வித விதமா சமைச்சு கொட்டுனாதான் தொண்டைகுழியா விட்டு கீழா இறங்குது .
என்று சொல்லி கொண்டு டீ கப்பை நீட்டினாள் கண்மணி .


“இந்த டீ ய சேர்ந்து குடிச்சி எவ்வளவு நாளாச்சி “
ஒரு மடக்கு குடிச்சிட்டு ..
“இப்பவும் மாறாமல் அதே சுவை ?
நீங்க சொல்லி கொடுத்தும் எனக்கு அந்த கை பக்குவம் வரவே மாட்டிக்கே அக்கா ? “என்றாள்.


“அதுல பெரிசா ரகசியமில்ல
மல்லி ஒரு கைப்பிடி ;
மிளகு ரெண்டு கரண்டி ; எண்ணெய் இல்லாம அளவான தீயில வறு ; வறுக்கும் போது திப்பிலி , பட்டை , சுக்கு லேசா கிள்ளி போடு ~ பேருக்கு போட்டனு கணக்கு ;
ஆறின பிறகு சின்ன உரல் ‘ ல ‘ போட்டு இடி ; பவுடர் பதம் வந்த அப்புறம் காத்து போகாத டப்பா அடைச்சி வை ; எப்போ எப்போ ‘ டீ’ போடுறீயோ .!
அப்போ அப்போ ஒரு கரண்டி போட்டு கொதிக்க வை ; அந்த சுவை வந்துரும் ; செய்ய செய்ய தான் பக்குவம் வரும்.
“ சித்திரமும் கைப்பழக்கம்?””


“” செந்தமிழும் நாப்பழக்கம்” என்று சொல்லுவது உண்மைதான் அக்கா; இன்னைக்கு போயி செஞ்சு பாத்துட்டு சொல்றேன் “


அவள் சிரிப்பை மட்டுமே பதிலளித்தாள்.


சற்று நேரம் டீ உறிஞ்சி குடிச்சி கொண்டே..


“பெரியவனுக்கு வரன் பாத்துட்டு இருக்கேன் , ஒன்னுமே அமையவே மாட்டிக்கு ,
போகதா கோயில் இல்ல ;
பார்க்காத சாமியில்ல ;
பண்ணாத பரிகாரம் இல்ல ;
கிணத்துல போட்ட கல்லு கணக்கா அசையாவே மாட்டிக்கு ;
வயசு வேற ஏறிக்கிட்டே போகுது , என்ன பண்ணுறதுனே தெரியலையே அக்கா? “ என்று கேட்டாள்.


“நம்ம பழைய வீட்டுல லெட்சுமி பொண்ண கேட்டு பாருடி அவங்களும் உங்க இனம் தானே ?”


“அது சரிப்பட்டு வராது அக்கா”


“ஏண்டி இப்படி சொல்ற “ வசதியில்லைன்னா ?


“வசதியெல்லாம் யாருக்கா பார்த்த”


“பின்ன என்னடி பிரச்சனை ?”


“பொண்ணு நல்லா இருந்தா மட்டும் போதுமா?
குடும்ப ஒழுக்கமா இருக்க வேண்டாமா?
அவங்க அப்பா வேலை வெட்டி இல்லைன்னு மதம் மாறிட்டான் , இன்னொரு மதத்தை பத்தி தெரிஞ்சுக்கலாம் தப்பில்லை அதே பிடிச்சி தொங்க கூடாது.
““மதம் மாறுவது பொண்டாடியை விட்டுட்டு தாசியை
தேடி போற மாதிரி முதல்ல சுகமா தான் இருக்கும் அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல அலுத்து போச்சுன்னா ;
இன்னொரு தாசியா தேட தோணும் , அதுவும் அலுத்து போச்சுன்னா? அதுக்கு அப்புறம் ?
இப்படியே ஒன்ன விட்டு ஒன்னு தாவுன்னா நல்லா இருக்கிற மாதிரி தெரியும் .
நல்லாயிருக்கும்னு நினைச்சி பாலும் கிணத்துல போயி விழுகிற கதை .
தாசினு சொல்றதுக்கூட தப்பு
தேவுடியா சொல்றது தான் பொருத்தமா இருக்கும்.
மதங்கிறது மரம் மாதிரி ~ இந்த ஜென்மத்துல நமக்கு என்ன மரத்துல பிறந்து இருக்கமோ !
அந்த மரத்தோட அடி வேர் வரைக்கும் தெரிஞ்சுகணும். அதே மாதிரி வீட்டுகுள்ள மரத்துல இருந்து விழுகிற விதை அடுத்த வீட்டுல விதைக்க கூடாது . அது மகா பாவம் துரோகமும் கூட . பக்கத்து வீட்டு மரம் காத்து வீசுனா சுவாசிக்கனு இல்லைன்னா அந்த சுகத்தை
அனுப்பவிக்கனுமே தவிர , அத விட்டுட்டு அந்த
மரமாவே மாறக்கூடாது .” நான் சொல்றது சரிதானா அக்கா ? என்று கேள்வி கேட்டால் செண்பகம்.


“அம்மாடி அம்மா எப்ப இருந்துடி இந்த வாய் பேச ஆரம்பிச்ச நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதாண்டிமா” ஏண்டிம்மா எனக்கு தெரியாம பிரசாங்கத்துல எதுவும் சேர்ந்துட்டுயாடி ?


“அப்படியெல்லாம் ஒன்னுமில்லக்கா , இந்த மாதிரி ஜனங்கள பார்த்தாலே பத்திக்கிட்டு எரியுது .
அதுகிடக்கிடும் எனக்கு செத்த *சோலி இருக்கு
நான் வரட்டுமா அக்கா?”


“செத்த இருடி அங்க போயி என்ன பண்ணபோற “ கண்மணி சொல்லி கொண்டிருக்கும் போதே
அவளுடைய கவனம் சுவத்துல ஒரு பல்லி இன்னொரு பல்லியை துரத்துவதை வெறித்துப் பார்த்துவிட்டு


“வீட்டுல கொஞ்சம் சோலி இருக்கு , *ஏனம் எல்லாம்
போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு , அந்த மனுசன் வேற சீக்கிரம் வந்துருவாரு ,அதுமில்லமா
நம்ம பழைய தெருல கடைசி வீடு பானு தெரியும்ல அவ சாயந்தரம் ஜாதகம் வாங்க வரா, கொஞ்ச நாளைக்கு முன்னால அவ பொண்ணு காலேஜ் படிப்ப முடிச்சதா கேள்விப்பட்டேன் . இப்ப ஏதோ பெரிய படிப்பு படிக்க சேர்ந்து இருக்கா , அதை சுமதி வைச்சி விசாரிச்சேன் ,
நான் விசாரிக்கிறேன் தெரிஞ்சவுடனே ஓடி வரா ,
அந்த தெருவுல இருக்கும் போது ஒரு கேவலமா புழுவை பார்க்கிற மாதிரி பார்க்கிறது . அது மட்டுமில்லாமல்
முகத்த கொடுத்து பேசமா போவா ,
இன்னைக்கு பாரு நிலைமை தலைகீழா மாறுது . அதான்
“சீனி இருக்கிற இடம் தான் எறும்பு கூடும் சொல்லுவாங்க
அதே மாதிரி தான் கொஞ்சம் காகிதம் சேர்ந்த போதும் சொந்தமும் கூடுது ~ அக்கம்பக்கம் எல்லாம் தலைமேல தூக்கி வைச்சி கொண்டாதுங்க “
“மனுஷன் மனசுக்கு மதிப்பு இல்ல அக்கா
பழப்போன காசுக்கு தான் மதிப்பு “”
ரெண்டு பல்லிகளும் நமக்கு சாதியில்லை எந்த கட்டுபாடுமில்லை என்ற எண்ணத்தோடு கடிகாரத்துக்குள் ஓடி ஒளிந்து சங்கமித்தது.அது ஒரு அன்பின் வெளிப்பாடு . அதை ரசித்தவாறு பார்த்து கொண்டு பெரு மூச்சி விட்டால் , பெரு மூச்சிவிடும் போது நெஞ்சு விம்மி அமர்ந்தது.
“பேப்பரை மதிக்கிற பானு மகளை எப்படி ஏத்துக்கிறது?
பையனுக்கு நல்ல வரனே அமைய மாட்டிக்குனு ஏத்துக்கிறதா? தாயைப்போல தானே பிள்ளையும் இருக்கும்? அப்படி இருக்கிறவ குடும்பத்தை பிரிச்சிடடா போச்சு என்ன பண்ணுறது ?


“அப்படியெல்லாம் ஒன்னு இருக்காதடி உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ~ நல்லதா அமையும் . அம்மா பண்ணா தப்புக்கு பிள்ளை என்ன பண்ணும் ; என் பொண்ணு கூட தான் படிக்கிற அவ நல்ல பொண்ணுன்னு என் பொண்ணு பல தடவை சொல்லி கேட்டு இருக்கேன்
கவலைபடாதடி செண்பகம் “என்று சமதானபடுத்தினாள் கண்மணி


“அதுலாம் நூத்துல ஒன்னா இருக்கும்
இந்த சுமதி மவளை எடுத்துக்கோங்க அம்மா எங்கேதான் இருக்கிறா வீட்டுல ஒரு வேலையும் செய்றது கிடையாது .
அவளை சொல்லி *குத்தமில்ல எல்லா அவங்க அம்மாவ தான் சொல்லணும் . செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கா ,
அப்போது திடீரென்று போன் ஒலித்தது . அது செண்பகத்தின் கணவர் .


“ என்னம்மா கேட்டியா?”


“ அது எப்படி கேட்கிறது “


“இந்தன்னா வருஷம் என்னத்த பழகுன ~
சரி முடியலைன்னா சீக்கிரம் வீடு வந்து சேரு “ என்று போனை துண்டித்தார் .


எப்படி அந்த அக்கா கிட்ட அவ மவளை கேட்கிறது ? அவங்க என்ன நினைப்பாங்க ? என்னதா ஒரே மதமா இருந்தாலும் சாதி கீதி பார்த்த என்ன பண்ணுறது ? நம்ம என்ன அந்த பல்லி மாதிரிய ? அதுக்கு சமூங்கிற வரம்பு கிடையாது .
நம்ம சதாரண மனுஷ ஜென்மம் தானே.!
ஒரு வேளை பொண்ண கேட்டு இத்தன வருசமா ஏதோ எதிர்பார்த்து தான் பழகிருக்கா அப்படினு நினைச்சிட்டாங்கன்னா? பழகின பழக்கம் போயிருமே
அந்த அறிவுகெட்ட மனுஷனுக்கு இந்த நிலைமைய எப்படி புரிய வைக்கிறது ? என்று மனதை கடித்து கொண்டிருக்கும் போது


“ யாருடி போன் ல ?”


“ அவரு தான் வீட்டுக்கு வந்துட்டாரு
நான் வரட்டுமா அக்கா ? “


கல் நெஞ்சகாரி இத்தன பேரு கிட்ட கேட்டாலே செத்த எங்கிட்ட கேட்க கூடாதா ? கேட்டதான் என்னவா? நான் என்ன மாட்டேன்னா சொல்ல போறேன் ? ஒரு வார்த்தை கேட்டா குறைஞ்சா போயிருவா பையனை பெத்த திமிரோ ? ச்சா ச்சா..ஒரு காலமும் இருக்காது
மதத்தை பார்க்கிறவா சாதிய பார்க்கமாட்டனு என்ன நிச்சயம் ? அதனால தான் கேட்க தோணலையோ என்னவோ ? கண்மணி மனசில் அசைப்போட்டு கொண்டே
“ மூஞ்சி வாட்டமா இருக்கு ? மனசுல எதுவும் நினைச்சிட்டு இருக்கியாடி ? “


மனசுல நினைக்கிறதுலாம் பேச முடியுமா?
அப்படியே பேசுனாலும் அதோட பின்விளைவை தாங்கிற சக்தி மனசுக்கு தான் இருக்கா? எவ்வளவோ கண்டுபிடிக்கிறங்கா இந்த சீக்கு பிடிச்ச மனசுல மத்தவங்க என்ன நினைக்கிறாங்கனனு தெரிஞ்சுக்கிற இயந்திரம் கண்டுபிடிச்சா எவ்வளவு நல்லாயிருக்கும் ! பிரச்சனையே வராதுல ? அப்படி கண்டுபிடிச்சிட்டா வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாம போயிருமே ! ரசனை இல்லைன்னா அது என்ன வாழ்க்கை ?
இப்படி இருக்கிறதுதான் நல்லாயிருக்கு ;
இப்படி நினைப்பாங்களோ ~ அப்படி நினைப்பாங்களோனு தேடிக்கிட்டே இருக்க தோணுது
தேடுதல் சுவராஸ்யமானதுதான் . நினைத்ததை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்போடு - வார்தைகளை விழுங்கிவிட்டு
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல இன்னொரு நாள் நல்ல செய்தியோடு வரேன்


நான் வரட்டுமா அக்கா ?”

- தாமோதரன் சாது

damomech92@gmail.com

நீங்கள் விரும்பும் கதைகள்

X
Please Wait ...