JUNE 10th - JULY 10th
பிருந்தா தேவி.
பிருந்தா தேவி....
அவன் அவளை பிந்து.... பித்து... என்று தான் கூப்பிடுவான்..
அவள் அவனை பன்னி பன்னி என்று தான் கூப்பிடுவாள்.
அதற்கு அவன் ஒரு முறை கூட கோபபட்டதாக தெரியவில்லை.
அந்த தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் அவளது.
அப்படி ஒன்னும் வசதியான குடும்பம் இல்லை.
ஏதோ அன்றோட சாப்பாட்டுகுக்கு பஞ்சம் இல்லை.
நான்கு கறவை மாடுகள் அவர்களுடைய சொத்து. அப்பா வெங்கடாஜலம் தேவர்.. இவங்க தேவர் பரம்பரை.
அம்மா பூமிகா தேவி.
பிருந்தா தேவிக்கு ஒரு அக்கா மஞ்சுளா அவளை சொந்த மாமனுக்கே கலியாணம் செய்து கொடுத்து ஐந்து வயசில் ஒரு பையன் இருக்கிறான்.
அவளை திருச்சியில் கலியாணம் செய்து கொடுத்து. ரொம்ப தூரம் தான். ஒரு அவசரத்துக்கு சீக்கிரம் போய் எட்டி பாக்க முடியாது.
பிருந்தாவின் அம்மாவின் சின்ன தம்பி செந்தில் அவனுக்கு ஒரே பையன் திருச்சியில் கோட்டைத் தெருவில் மெடிக்கல் ஷாப்
வைத்து அங்கே சொந்த இடம் வாங்கி பெரிய வீடு கட்டி வசதியாக இருக்கிறார்கள்.
அக்காப் பொண்ணு மஞ்சுளா வை பொண்ணு கேட்டதும் மறுக்காமல் சொந்ததிலேயே கொடுத்து விட்டாங்க.
சின்னப் பையன் சதீஸ் தறுதலை ஒழுங்கா படிக்காம ஊர் சுத்திக்கிட்டு கிடக்கு. பி. ஏ. வில் ரெண்டு பேப்பர் ஹரியர்.
அப்புறம் என்ன பிருந்தாதேவி தான். பிருந்தா முட்டைக் கண்ணு போட்டுக்கிட்டு அழகா இருப்பா. கருப்பா அடர்த்தியான கற்றை இரண்டு அடிக்கு ஜடை தொங்கும் ரொம்ப அழகு.
ஆனால் என்ன கொஞ்சம் குள்ளம். குண்டு கத்தரிக்காய் போல தான் இருப்பா.
ஏகப்பட்ட கொழுப்பு, குறும்பு, குசும்பு பிடிச்சவ என்று இவள் தோழிகள் எல்லாம் சொல்லுவார்கள்.
பிருந்தா அதிகமா படிக்க வில்லை சும்மா ஒரு பி. எஸ். சி. டிகிரி படித்து விட்டு டீச்சர் ட்ராயினிங் படிச்சி இருக்கிறா அம்முட்டு தான்.
இப்போ அவளுக்கு தலைக்கு மேலே டூட்டி.
காலையிலே எழுந்ததும் மாட்டைப் பிடிச்சி வெளியே கட்டிவிட்டு. சாணி அள்ளி ஒரு மூலையில் அன்னக்கூடையில் போட்டு வைத்து விட்டு. மாட்டுக்கு சோளத்தட்டு ஆறுத்து போட்டுவிட்டு. சாணியை உருட்டி பந்து செஞ்சி எதிரில் உள்ள சுவற்றில் பச்சக்... பச்சக்..
என்று அம்மா வேலை வச்ச கோபத்தை எல்லாம் காட்டி பந்து வீசி வைப்பாள்.
அது வட்டம் வட்டமாய் போய் சுவற்றில் அழகா உட்கார்ந்துக் கொள்ளும்.
வெயிலில் நன்றாக காய்ந்து போனால் அதை அப்பளம் போல எடுத்து அழகா அடுக்கி கொட்டாகை மூலையில் சாக்கு பையில் மூட்டை கட்டி வைப்பாள்..
ஏம்மா
வட்டி இருக்கா என்று யாராவது வந்து கேட்டால் காசுக்கு விற்று பாதி பணம் அம்மா கிட்டே கொடுப்பாள்.. மீதி கமிஷன் அடிச்சு சேர்த்து வைத்து இருக்கிறாள்.
அது அவ பேங்க் கணக்கில் இருபது ஆயிரம் ரூபாய் இருக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த குண்டுக்கு நேரம் கிடைக்கும் போது பக்கத்து வீதியில் இருக்கும் சின்ன பசங்களை கூப்பிட்டுக் கொண்டு.
எதிரில் இருக்கும் இவங்க மாங்காய் தோப்பில் கபாடி விளையாடுவாள்.
மொத்தத்தில் இவள் ரவுடி பேபி தான்
என்னடி தேவி இன்னும் உன் வேலை முடியவில்லையா!
இன்றைக்கு கொஞ்சம் டவுன் போயி வரணும் முக்கிய வேலை இருக்கு?
அப்பா அம்மா ஊருக்கு கிளம்பி போறாங்க என்ற உடனே இவளுக்கு லாட்டரி சீட்டில் லட்சம் ரூபாய் விழுந்த மாதிரி சந்தோசம்.
டேய் பன்னி இன்னிக்கி பிரியா டா நாயே....
என்ன பண்றேடா பொறுக்கி?
அது ஒன்னும் இல்லை குண்டு நான் இப்போ அம்மா சமாதிக்கு போயி வரணும்.
எதுக்கு டா?
அம்மா இன்றைக்கு இறந்த நாள் இன்றோடு மூன்று வருஷம் ஆச்சு?
அவங்க நினைவு நாள்.
சரிடா மாமா... சோ.. ஐ.. ஆம்.. வெரி சாரி செல்லம்.
இட்ஸ்... ஓகே..
டேய் மாமு இன்னிக்கு உன் கிட்டே முக்கியமா பேசணும் அதான் போன் போட்டேன்.
ரொம்ப முக்கியமா?
ஆமாண்டா.... ரொம்ப முக்கியம். எங்க அம்மா, அப்பா இப்போ டவுன் போயிருக்காங்க.
ஒரு வாரத்துக்கு முன்னால எங்க மாமாக்கு தெரிஞ்சவாங்க பையனுக்கு என்ன பொண்ணு வந்து பார்த்துட்டுப் போனாங்க.
போனவுங்க பொண்ணை ரொம்ப புடிச்சி போச்சு. நீங்கள் வந்து பார்த்து விட்டு சொன்னால். இந்த மாதத்திலேயே கலியாணம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டு போனாங்க அதான் மாமாவும் அக்காவும் நேற்றைக்கே வந்து தேனியில் எங்க மாமா வீட்டில் இருக்காங்க. சொந்த வீடு மாமாவுது அவங்க அப்பா அம்மா இங்கே தான் இருக்காங்க.
அதான் இப்போ அம்மா அப்பா போயி எல்லோரும் மாப்பிளை வீட்டைப் பார்க்கப் போறாங்க.
பிடிச்சி போச்சு என்றால் இந்த மாதத்திலேயே கோயிலில் வைத்து ரொம்ப சிம்பில கலியாணம் செய்து விடுவாங்க
அதான் டா உனக்கு போன் போட்டேன். இப்போ நீ எடுக்கிற முடிவில் தான் என் வாழ்க்கை இருக்கு?.
என்ன சொல்றே..
உன்கிட்ட பழகுற விஷயம் இது வரை யாருக்கும் தெரியாது.
எங்க தம்பி ஒரு நாதாரி இருக்கிறான் அவன் காதில் நான் பேசுறது விழுந்தா கூட பாடை கட்டி விடுவாங்க.
இதோ பாரு குண்டு நீ ஏற்கனவே சொல்லி இருக்கே நீங்கள் தேவர் பரம்பரை.
நாங்களோ கள்ளர் பரம்பரை.
உங்க அப்பா அந்த ஊர் நாட்டான்மை என்று.
ரொம்ப ஸ்ட்ரீட்
வெளியே வர முடியாது. பேச முடியாது. பொண்ணு கேட்டா கூட தர மாட்டாங்க. வெட்டி கூறுப் போட்டு விடுவாங்கன்னு சொல்லி இருக்கிற.
நான் தேனி வந்து உன்னை அழைச்சிட்டு வந்து கலியாணம் செய்ய தயார்.
நீ யாருக்கும் தெரியாமல் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடு. நான் அங்கே வந்து விடுகிறேன்.
நீ போன் போடு சரியான நேரத்தில் நான் அங்கு தவராமல் வந்து விடுகிறேன்.
நீ ஒன்னும் பணம், நகை, நட்டு என்று எதுவும் எடுத்துக் கொண்டு வர வேண்டாம்.
கட்டின புடவையோடு, தான் துணையோடு வந்தா சரி...
என்ன ஒரே யோசனையில் இருக்கீங்க?
ஒன்னும் இல்லை?
ஒன்னும் இல்லை என்று சொன்னால் ஏதோ பெரிய ரகசியம்.
ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்குன்னு தான் அருத்தம்.
அப்படி ஒன்னும் இல்லை...
சும்மா சொல்லுங்க அத்து... உங்க விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்?
அதிர்ந்து போனான் அவன்.
என்ன இவள் இவ்வளவு சரியா சொல்கிறாள். ஒரு வேளை பிருந்தா வைப் பற்றி எல்லா விஷயமும் இவளுக்கு தெரிந்து இருக்குமோ!!
ச்சி... ச்சி.. அப்படி இருக்காது இவளுக்கு எப்படி தெரிய போகுது.
யாருக்குமே தெரியாது.
இத்தனை நாள் மனசுக்குள்ளே போட்டு புதைச்சு வச்சி விஷயம்.
அப்பா.. வாங்க அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க என்று பிருந்தாதேவி கூப்பிட்டாள்.
சின்னக் குழந்தை வயது ஏழு இப்போ இரண்டாவது வகுப்பு சி பி எஸி யில் படிக்கிறாள்.
கலியாணம் ஆகி எட்டு வருஷம் எப்படி ஓடி போச்சு என்று தெரியவில்லை.
என்னங்க அதே யோசனையில் தான் இருக்கீங்க போல.
சாப்பிடுங்க... என்றாள் வசந்தா..
அப்பா சீக்கிரம் அப்பா எனக்கு ஸ்கூல் டைம் ஆச்சு. சாப்பிடுங்கப்பா... அதட்டினால் அந்த குட்டி பிருந்தா...
சீக்கிரம் சீக்கிரம் இரண்டு வாய் அள்ளிப் போட்டுகொண்டு குழந்தையை காரில் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து சோபாவில் விழுந்தான் அவன்.
அருகே அவன் மனைவி அவனைது தலையை பக்கத்தில் உட்கார்ந்து கொத்திக்கொண்டு இருந்தாள்
மாமு....
மாமு...
உங்க கிட்டே ஒரு உண்மையை செல்லலனும்.
ஒன்பது வருசமா என் மனதில் போட்டு போட்டு மறைச்சு வச்சி மறைச்சு வச்சி. என் மனசாட்சியே என்னை கொன்னுடும் போல இருக்கு?
ம்ம்ம்.... என்ன..
நான் நம்ம பொண்ணுக்கு ஏன் பிருந்தா தேவின்னு பெயர் நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் வச்சேன் தெரியுமா?
ம்ம்ம்ம்..
அது உங்க பிருந்தா தேவி குண்டி... அதான் உங்க பழைய எக்ஸ்.. அவ பெயர் தான்.
அதிர்ச்சி அடைந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவள் மேலும் தொடர்ந்தாள்..
அவ என் பிரிண்ட்...
தேனியில் அந்த கிராமத்தில் அவங்க பக்கத்து வீடு தான் எங்க அப்பாவின் தங்கச்சி அதான் அத்தை வீடு. நான் அங்கே போயி அங்கே அத்தை வீட்டில் தங்கி இருந்தேன் அவளோடு அவங்க மாந்தோப்பில் கபாடி விளையாடி இருக்கிறேன்.
அவ உன்னைப் பற்றி எல்லா விஷயமும் என்னிடம் மறைக்காமல் சொன்னால்.
உஙகள் லவ் மேட்டர் சக்சஸ் ஆக வேண்டும் என்று நான் ஆண்டவன் கிட்டே ரொம்ப வேண்டினேன்.
உஙகளை எனக்கு தெரியாது.
அவளை பொண்ணு வந்து பார்த்து விட்டு போனதும் ஒரு வாரத்தில் பேசி முடிவு செய்து விட்டார்கள்.
அவள் உன்னை மறக்க முடியாமல் அவங்க அம்மாகிட்டே உன்னையே கட்டி வைக்க சொல்லி பிடிவாதம் செய்து இருக்கிறாள்.
அவங்க அம்மா அவங்க புருஷன் கிட்டே சொல்லப் போயி
வானதுக்கும் பூமிக்கும் தக்க... தக்க.. என்று குதித்து அவளை அடிச்சு ரூமில் போட்டு மூடி பூட்டு போட்டு அடைச்சு வைச்சு கலியாண ஏற்பாடு செய்து இருக்கிறார்.
உனக்கு போன் போட்டு இருக்கிறா நீ எடுக்க வில்லை என்று
அவள் கடைசியா என்கிட்ட போன் போட்டு எல்லா விஷயமும் சொன்னாள்.
சொன்ன பாவி அவள் கலியாணத்துக்கு முன் நாள் அவ ரூமில் பேன் க
கொக்கியில் புடவையை மாட்டி தூக்கு போட்டுக்கிட்ட....
பாவி மகள்
அவ சாகறதுக்கு முன்னாடி என் கிட்டே உன்னை நான் கலியாணம் செய்து கொண்டு குழந்தை பிறந்து எட்டு வருஷம் கழிஞ்சி தான் இந்த உண்மையை சொல்லணும் என்று சத்தியம் போனில் வாங்கிக் கொண்டாள்.
அதான்.. என்ன மன்னிச்சிருங்க மாமா...
அதான் அவ பெயரை குழந்தைக்கு வைதேன். அவ விட்டு கொடுத்த வாழ்க்கை தான் நம்ம வாழ்க்கை.
என்று அழுதாள் அவள்.
அவன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக போய்க்கொண்டு இருந்தது......
அங்கே பிருந்தா....
டேய் பன்னி.... டேய்... பன்னி எதுக்கு டா அழுகிறாய் நான் தான் உன் பொண்ணாக பிறந்து இருக்கிறேன்....
மாமா..
ஐயோ பிந்து.......
===============================
.
#903
தற்போதைய தரவரிசை
42,550
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 42,500
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்