JUNE 10th - JULY 10th
காதல் கிளுகிளுப்பை
மர்ம கதை.
யாரது????
பிங்கி... பிங்கி... பாங்கி....
டமார் ....திகில்....1.
இரவு சரியாக பணியிரண்டு மணி கருமையான மையிருட்டு....
அம்மாவாசை அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. பில்லி சூனியம் வைப்பார்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் அம்மாவாசையும் சேர்ந்து வந்தால் செய்வது எல்லாம் அப்படியே பலிக்கும் என்று சொல்லுவார்கள்.
எங்கேயோ . இரண்டு நாய்களாக தான் இருக்க வேண்டும் ஊளையிட்டு அழுதுக் கொண்டு இருந்தது.
வானத்தில் எங்கும் மின்னல் கீற்றுகள் ஓடி ஓடி மின்னிக்கொண்டு இருந்தது .
காற்று பலமாக வீச ஆரம்பித்து விட்டது . தென்னை மரத்தில் இருந்து பழுத்த ஓலைகள் காற்றில் மாட்டார்.... மாடார் என்று ஓடிந்து விழ அந்த ஓசையில் கரு வேல மரத்தில் இருந்த தூக்கனாங் குருவிகள் பட பட வென கூட்டை விட்டு வெளியே வர வீசிய காற்றில் எங்கேயோ பறந்து போனது.
திடீரென்று உக்ரயின் நாட்டின் மீது ரஷ்யா ஏவுகணை வீசியது போல வானத்தில் கண்ணை பறிக்கும் வெளிச்சம் தோன்றியது.அடுத்து நொடி
தலை மேலே இறங்கியது போல இடி டமால் என்று வெடி வெடித்தது போல சப்தம்
கண்டிப்பா இது இங்கே பக்கமாக தான் விழுந்து இருக்கும்.
டேய்.. சங்கரா.. . டேய்.... சங்கர... சங்கரா... தூரத்தில்.இருந்து கேட்டப்படி வந்த குரல் மெதுவாக நெருங்கி நெருங்கி அருகில் கூப்பிட்டுக் கொண்டே வருவது போல அவனுக்கு கேட்டது.
மேலே மின் விசிறி வேகமாக
இருந்தும் அவனுக்கு உடம்பெல்லாம் வியர்வை வழிந்துக்கொண்டுக் கொண்டு இருந்தது.
நெஞ்சம் வேகமாக அடித்துக்கொண்டது அவனுக்கு உடம்பெல்லாம் உதரல் எடுக்க அவன் வாய் திறந்து கத்துக்கிறான்.
உதடுகள் மட்டுமே அசைக்கிறது ஆனால் வார்த்தைகள் ஒன்று கூட வெளியே வரவில்லை
அந்த கொலை நடந்து நாள் முதல் அவனுக்கு இப்படி இரவும் பகலும் அவன் பெயரிட்டு அவனை சுற்றி சுற்றியே அவன் பெயரிட்டு கூப்பிடுவது போல இருக்கும். அவன் திரும்பி சுற்றி பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள்
ஒரு மாயை
ஒரு பிரமை அவனுக்கு தோன்றிக் கொண்டே இருந்தது.
அவனால் சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை.
திடீரென்று யாரோ பின்னாடி வருவது போல அவனுக்கு தெரியும்
அவன் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட்டான்.
சங்கரன்...
சங்கரன் பாளையம் மிட்ட மிராசு எட்டு பட்டிக்கு நாட்டான்மை ... இவனுங்க ஒரே பையன் ரகுநாதன் என்கின்ற ரகு.
சின்ன ஜாமின் என்று எல்லோரும் சொல்லுவார்கள் .
பிங்கி பாங்கி பாங்கி....
மஞ்சு (பாய் )
மஞ்சு பாய் அவள் பெயர் சேட் பஜன் லால் பேத்தி....
நம்மை இவங்க வாழ விட மாட்டாங்க..ஆமாம் இப்போ நாம என்ன செய்யற சொல்லுங்க ரகு....
ஆமாம் இது காதலிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்க வேண்டிய விஷயம் .
அப்போ எல்லாம் யோசிக்காமல் இப்போ யோசிச்சு என்ன பண்ணறது.
ரகு எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரகு. நான் உங்களை பார்த்து இருக்க கூடாது. பார்த்தும் பேசி இருக்க கூடாது
பேசியத்தோடு நின்று இருந்தால் இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்க முடியாது.
ரகு .. ரகு.. ப்ளீஸ் டா என்னை மன்னிச்சிரு . என்னால் உனக்கு ரொம்ப கஷ்டம் ஆகி விட்டது.
சங்கரா...... சங்கரா.....
கத்துடா... கத்து உன்னை காப்பாற்ற ஒருத்தன் கூட வர மாட்டான்.
அவன் பயத்தில் அலறினான் . அவன் அலறல் சப்தம் அறைக்குள் கூட கேட்க வில்லை ..
ஹரி .. நூர்கி .. இதர் அவோலோ...
மோதிலால் சேட் ராயகோட்டையிலே பெரிய நகை கடை வைத்து பான் புரோக்கர் கடையும் நடத்தி வரும் பெரிய மார்வாடி..
இவளுக்கு ஒரே பொண்ணு அதான் மஞ்சுபாய்
மோதிலால் சேட்டு மனைவி கமலாபாய் இரண்டு வருடத்துக்கு முன்னே கொரோனா இரண்டாவது அலையில் சென்னை அப்போலோ மருத்துவ மனையில் இறந்து விட்டாள்.
மோதிலால் மீரா பாய் என்ற பொண்ணை இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டான்.
மீரா பாயின் அம்மா சக்கு பாய் இவங்க வீட்டிலேயே இருந்து விட்டாள் .
வெங்கி இவங்க வீடு கூர்கா ...
வெங்கி ......
கதவை தட்ட.
ஜன்னல் கதவுகள் படா .. பாட வென்று அடித்துக் கொண்டது...
வெளியில் லேசாக தூரல் போட ஆரம்பித்து விட்டது .
டேய் வாடா... டேய்... வாடா...
இப்போ வா டா ....
இப்போ வாடா ......
ஒரு பெண்ணின் குரல் .
அதில் ஆத்திரம் கொலை வெறி இருந்தது....
சங்கரா.........
மோதிலால் சேட் ...
ஆவோ ஜீ..... மீறு .... மீறு ...
கியா ஒகையா
ஆவோ ஜீ..... மீறு .... மீறு ...
கியா ஒகையா .
சாய்த்தான் என்ன ஒன்னும் செய்யாதே விட்டு விட்டு விடு
கத்திகிறான் மோதிலால் சேட் ..
என்ன ஆச்சு? என்ன ஆச்சு ?
உங்களுக்கு.என்று உளுக்கி அசைத்து அசைத்து எழுப்பினாள் மீரா பாய்.
கியா .. இது கனவா . சைய்த்தான் எங்கே....
என்ன கழுதை நெறிச்ச சைய்தான் எங்கே போச்சு?
கியோ ஓ ஜீ சைய்த்தான் இல்லை ஒன்னும் இல்லை நீங்க கெட்ட கனவு பார்த்து இருக்கிங்க பேசாமல் படுங்க .
இன்னும் ஒரு மணி கூட ஆக வில்லை .
தூங்க கூட விட மாட்டேங்கீறிங்க
சலித்துக் கொண்டாள் மீரா பாய்.
ஸலாக்.... ஸலாக்.. வெளியே மழையின் சப்தம்.
திகில் 2..
இன்னும் இன்னும்... வேண்டாம்.. வேண்டாம் விட்டு விடு... விட்டு விடு என்ன ஒன்னும் செய்யாதே ..
டேய் பொறுக்கி. நாயிங்களா உங்களுக்கு அக்கா தங்கச்சி யாரும் இல்லையா ...?
அம்மா......ம்ம்ம்...
டேய் உயிர் இருக்கு ....
அப்போ என்ன செய்ய போறே...
அவ துணியிலே....
பிங்கி பாங்க்கி பாங்கி...
யாரோ வேகமா ஓடி வர்றாங்க டா
யாரு?
என்ன ரத்தம் வடிய வடிய பாவாடை எல்லாம் நனைந்து போனாலும் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம கொத்து புரோட்டா போட்ட நாயே சங்கரா ...
உன் பையன் கண்ணு முன்னாடி அவன் பார்க்கணும் என்று என் துணியெல்லாம் அவிழ்த்து அம்மனமாக்கி ....
ஐயோ சேட்டு மா புத்தி கெட்டுப் போய் தெரியாம செஞ்சிட்டேன் தாயே என்ன மன்னிச்சுடு.
ஐயோ... ஐயோ
என்ன விடு என்ன விடு ...
என்னங்க ஆச்சு உங்களுக்கு ஒரு வாரமா ராத்திரி எல்லாம் தூங்காம இப்படி கத்துறீங்க. உங்களுக்கு என்ன தான் நடந்துச்சி.
அல்ல கனவா இல்லை எதாவது தப்பு தண்டா செஞ்சி இப்படி பயந்து சாகரீங்களா?
என்றாள் சங்கரன் மனைவி ராசாத்தி
ஆமா அதான் அது யாருங்க சேட்டுமா? அவன்களுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?
அப்படி ஒன்றும் பிரச்னை இல்லை
நட்ட நடு ராத்திரியில் இந்த கூத்து அரங்கேறிக்கொண்டு இருந்தது.
திடீரென்று ஒரு பெண் பேசும் குரல் மிக அருகில் இருந்து ஒலித்தது. கேட்டு இருவரும் நடுங்கி தான் போனாரகள்.
இதோ பாருடி ராசாத்தி நீ அவனை விட்டு விட்டு உன்ன காப்பாற்றிக்கொள். உப்பு தின்னவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அவனை நீங்க கும்பிடுறே மரியாத்தா நினைச்சா கூட காப்பாற்ற முடியாது. பேசாம அவனை விட்டு விட்டு நீ ஓடி போய் விடு இல்லை என்றால் அவனோடு சேர்ந்து நீயும் செத்துப் போவே...
மல்லிப் பூ வாசனை மூக்கை துளைத்தது. திடீரென்று ஓடிக்கொண்டு இருந்த பேன் நின்று விட்டது.
மூடி இருந்த ஜன்னல் மூடி மூடி படார் படார் என்று அடித்துக் கொண்டது.
இருட்டு போட்டு இருந்த ஸிரோ லைட் கூட அணைந்து விட்டது.
சங்கரன் அவன் மனைவி ராசாத்தி இருவரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள்.
வெளியே பெய்துக் கொண்டு இருந்த மழை நின்ற பாடில்லை. ஜோ வென்று கொட்டிக்கொண்டு இருந்தது.
இடி வேறு இடித்துக் கொண்டு இருந்தது.
பட பட வென்ற சவுண்ட் கேட்டுக்கொண்டு இருந்தது.
எதோ ஒரு பொருள் அவர்கள் இருவரின் மேலே விழுந்தது போல் இருக்கவே பயந்து போய் இருவரும் ஐயோ வென்று கத்த போன கரண்ட் பக்கென்று வந்து விட பேன் வேகமாக சுற்ற ஆரம்பித்து விட்டது. ஸிரோ லைட் எரிய ஆரம்பித்து விட்டது.
அப்புறம் இருவருக்கும் அந்த பெண்ணின் குரல் கேட்க வில்லை. ஆனாலும் அந்த அறையில் யாரோ ஒரு கரிய உருவம் நடந்துக் கொண்டு இருப்பது போலவே
அவர்களுக்கு தெரிந்தது. எவ்வளவு நேரம் அவர்கள் இருவரும் நின்று கொண்டு இருப்பது.
ஏங்க வாங்க ஹாலுக்கு போய் அங்கே பார்க்கலாம் என்று சொன்னதும் சங்கரன் அவன் மனைவி ராசாத்தி இருவரும் ஹாலுக்கு வர
இவர்கள் வெளியே வரவும் அவர்கள் கதவை மூடாமலே ரூம் கதவு டாமரென்று மூடிக்கொண்டது. பயந்து
கத்தி விட்டார்கள்.
ரொம்ப பயந்து நடுங்கிய இருவரும் ஹாலுக்கு வந்து லைட் போட்டுப் பார்க்க சுவற்றில் இருந்த கடிகாரம் டெங் டாங் டிங் என்று நான்கு முறை ஒலித்து நின்றது.
பொழுது விடியும் நேரம்
மோதிலால் சேட் ஜி க்கு இரவெல்லாம் வயிற்றால் போய்க் கொண்டு இருந்தது.
லூசு மோஷன். நின்ற பாடில்லை அவன் டீலா ஆகி படுத்து கிடக்க
ஒகைய்ய.. சேட் மர்கய்யா....
கியாவோ ஜி அந்த கூர்கா கஹான் கய்யா உஷ்கு புல்லாதே.
அரே பி பி தும் ஜலிதிஸ்ஸே உஷ்கு புக்காரோ...
மீரா பாய்.. கூர்க்கா வெங்கு... வெங்கு...
ஹரே வெங்கு எங்க போய் மர்க்கய்யா....
நன்றாக தூங்கி கொண்டு இருந்த கூருக்கா வெங்கடேஷன். கண்ணு முழித்து எழுந்தான்.
சேட்டின் மனைவி மீரா பாய் கூப்பிடவே..
எஜமானி அம்மா இந்த நேரத்தில் எதுக்கு கூப்பிடுறாங்க என்று புரியாமல்.
போர்வையை உதறி தள்ளி விட்டு வேகமாக எழுந்து கண்களை துடைத்துக் கொண்டு வேகமாக போனான்.
என்ன மேடம் கூப்பிட்டிங்களே...
ஆமா பக்கத்துல இருக்கும் டிரைவர் குத்துஸ் பாய்க்கு போய் சீக்கரம் வர சொல்லி கூப்பிட்டு வா. ஜீ..க்கு
உடம்பு சரி இல்லை ஹாஸ்பிடல் போகணும் போன் போட்டா ஸ்வீட்ச் ஆப் என்று வருது என்றாள் மீரா பாய்...
அவன் சரி என்று தலையை ஆட்டி விட்டு கேட்டின் சாவியை வாங்கி கொண்டு வெளியே வந்தான்..
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
#854
தற்போதைய தரவரிசை
30,050
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 30,000
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்