JUNE 10th - JULY 10th
ஒரு நகரத்தில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் கன்னிகா. அவள் மிகவும் குறும்பான பெண் அவர்கள் அந்தப் பெண்ணை மிகவும் அன்பாகவும் பாசமாகவும் வளர்த்து வந்தார்கள். அந்தப் பெண் தன் பள்ளிப்படிப்பை முடித்துவட்டு கல்லூரி படிப்பை தொடங்க சென்னைக்கு செல்ல வேண்டும் என தன் பெற்றோரிடம் கேட்டாள் .ஆனால் , அவர்கள் எதற்கு அவ்வளவு தூரம் போகவேண்டும் என முதலில் தயங்கினார்கள். பின்னர் மகளின் ஆசைக்கு இணங்க அவளை சென்னையில் கல்லூரியில் சேர்ப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள், மகளை பிரிந்து இருக்க இயலாத பெற்றோர்கள் கண்ணிகாவுடன் சென்னைக்கு இடம் பெயர்ந்து சென்றார்கள். சென்னையில் அவளை கல்லூரியில் சேர்த்தனர். முதல் நாள் கண்ணிகாவிற்கு ஒரு தோழி கிடைத்தால் அவள் பெயர் கீர்த்தி . கீர்த்தியும் கன்னிகாவை போலவே மிகவும் அன்பான பெண் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். கீர்த்தி அடிக்கடி கன்னிகா வீட்டுக்கு வர தொடங்கினாள். கன்னிகாவின் பெற்றோரும் கீர்த்தியுடன் நன்கு பேசிப் பழகினார். ஒரு நாள் கீர்த்தியின் பெற்றோர் தங்கள் ஊரில் திருவிழா இருப்பதாகக் கூறி கீர்த்தியை கிராமத்திற்கு வரச்சொன்னார்கள். ஆகவே ,கீர்த்தி கண்ணிக்காவிடம் தன் கிராமத்திற்கு வருமாறு கேட்டாள். கன்னிகாவும் தான் வருவதாக கூறினாள். ஏனெனில் அவள் இதுவரை கிராமத்தை கண்டதேயில்லை. கன்னிகாவின் பெற்றோரிடம் கன்னிகாவை தன் கிராமத்திற்கு அனுப்பி வைக்கும்படி கீர்த்தி கேட்டால் முதலில் தயங்கிய கன்னிகாவின் தாய் தந்தை பிறகு கீர்த்தியுடன் கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இருவரும் கீர்த்தியின் கிராமத்திற்கு சென்றார்கள். அந்த கிராமத்தின் பெயர் நாகமணிகுறிச்சி. அங்கு வந்ததும் கன்னிகாவிற்கு இனம் புரியாத ஒரு உணர்வு அவள் ஏற்கனவே அந்த கிராமத்திற்கு வந்தது போலும் அங்கு வாழ்வது போலம் தோன்றிய காட்சிகள் அவள் கண்முன் வந்துவந்து சென்றது. ஆனால் அதை எதையும் அவள் காட்டிக் கொள்ளாமல் எளிமையாக கீர்த்தியுடன் கீர்த்தி வீட்டுக்குச் சென்றாள். அங்கு கீர்த்தியின் பெற்றோர் கீர்த்தியையும் கன்னிகாவையும் வரவேற்றனர். அன்று இரவுஉணவு உண்ண அனைவரும் சென்றார்கள். அங்கு கன்னிகா அதுவரை பார்த்திராத பல்வேறு உணவு வகைகள் இருப்பதைக்கண்டு கன்னிகா ஆச்சரியமடைந்தாள். கீர்த்தியின் தந்தை ஏனம்மா இப்போதுதான் இந்த உணவு வகைகளை எல்லாம் நீ காண்கிறாயா? என்று கேட்டார். இதுவரை நீ இதெல்லாம் உண்டது இல்லையா என்றார். அதற்கு கன்னிகா நான் இப்போதுதான் இதையெல்லாம் பார்க்கிறேன் நான் இதுவரை இந்த உணவுகளையெல்லாம் சாப்பிட்டதே இல்லை என்றாள். அதற்கு கீர்த்தியின் தாய் சரி முதலில் இதை உண்டுபார் உனக்கு பிடித்து இருக்கிறதா என்று கூறு என்றார். கீர்த்தி சாப்பிட்டு பார்த்தால் மிகவும் ருசியாக உள்ளது. எங்கள் ஊரில் நட்சத்திர விடுதிகளில் கூட இப்படிப்பட்ட உணவுகள் கிடைப்பதில்லை என்றாள் அவ்வளவு சுவையாக உள்ளது என்றாள். அனைவரும் சிரித்துக்கொண்டே இரவு உணவை முடித்தனர் பின் தூங்க சென்றனர். அப்போது கன்னிகா கீர்த்தியிடம் காலையில் இந்த ஊரை சுற்றி காட்டும்படி கேட்டாள் கீர்த்தியும் சரி காலை நாம் இந்த ஊரை சுற்றி பார்க்க செல்லலாம் என்றாள் . இருவரும் உறங்கினர் காலை பொழுது விடிந்தது கன்னிகா குளித்து கிளம்பி வா போகலாம் என்றாள் .கீர்த்தி சிரித்துக்கொண்டே பொறு பொறு நான் கிளம்பி விட்டு வருகிறேன் என்றாள் அதற்கு கன்னிகா இன்னும் நீ கிளம்பவில்லையா? நான் இரவே கூறினேன் அல்லவா காலை செல்லலாம் என நீ இன்னும் கிளம்பாமல் இருக்கின்றாயே என்றாள். அதற்கென இவ்வளவு சீக்கிரம் போகவேண்டும் என்று அர்த்தமா சற்று பொறுமையாக இரு நான் கிளம்பி வருகிறேன் இருவரும் செல்லலாம் என்று கூறி விட்டு சென்றாள் கீர்த்தி. சரி சீக்கிரம் வா என்று கூறி கன்னிகா காத்திருந்தாள். கீர்த்தி குளித்து முடித்துவிட்டு கிளம்பி வந்தால் இப்போது போகலாமா என கன்னிகாவிடம் கேட்டாள் அப்போது கீர்த்தியின் தாய் இருவரும் உணவு உண்டுவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என்றார். சரி சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என இருவரும் காலை உணவை சாப்பிட்டார்கள் பின்னர் ஊரை சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். கீர்த்தி கன்னிகாவிற்கு ஊரிலுள்ள அனைத்து ஆறு மலை குளம் கோவில் என அனைத்தையும் சுற்றி காட்டினாள். கன்னிகாவிற்கு தான் இப்போது ஒரு கிராமத்தில் இருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது. வீட்டிற்கு இருவரும் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது அங்கு ஒரு பாழடைந்த கோயில் இருப்பதை கன்னிகா பார்த்தாள் அங்கு செல்லலாம் என கேட்டாள் ஆனால் கீர்த்தி அங்கு மட்டும் செல்ல வேண்டாம் என்றாள். ஏன் என கன்னிகா கேட்டதற்கு கீர்த்தி அங்கு பல ஆண்டுகளாக யாரும் செல்வதில்லை பல தீயசக்திகள் இருப்பதாக ஊரில் பேசுகிறார்கள் ஆகவே நாம் அங்கு செல்வது சரியாக இருக்காது என்று கூறினாள். இருவரும் வீட்டிற்கு வந்தார்கள் ஆனாலும் கன்னிகாவிற்கு அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது. வீட்டிற்கு வந்ததும் கீர்த்தியின் தந்தையிடம் இதைப் பற்றி கன்னிகா கேட்டாள் ஆனால் அவரோ அந்தக் கோவிலை பற்றி நீங்கள் யாரும் அறியாமல் இருப்பதே நல்லது என்று கூறி விட்டு வெளியே சென்றார். அப்போது கீர்த்தியின் பாட்டி நான் சொல்கிறேன் உங்களிடம் அந்த கோவிலைப்பற்றி என இருவரையும் அழைத்தார். அந்தப் பாழடைந்த அந்த கோவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்களால் அனுதினமும் பூஜை செய்து வழிபட்டு கொண்டிருந்த கோவிலாகும். இந்த ஊரை 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை காத்து வந்த அம்மன் ஆகும். அப்படிப்பட்ட கோயில் இப்படி இருக்க என்ன காரணம் என கன்னிகா கேட்டாள் அப்போது திடீரென வெளியே ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது என்ன சத்தம் என அனைவரும் பதறி போய் வெளியே பார்த்தார்கள் அங்கே கீர்த்தியின் தந்தை மீது ஓடுகள் சரிந்து பலத்த அடிபட்டு இருந்தது. கீர்த்தியின் தந்தையை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவமனைக்கு சென்றவுடன் கீர்த்தியின் தாய் கன்னிகா மற்றும் கீர்த்தியிடம் இனி அந்த கோவிலை பற்றி யாரும் பேசக்கூடாது நீங்கள் இப்பொழுது அதை தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டதால் தான் இப்படிப்பட்ட விபரீதம் நடந்துள்ளது என்று கோபத்துடன் கூறினார். கீர்த்தியும் சரி இனி அதைப்பற்றி பேசவேண்டாம் கன்னிகா இது இப்படியே விட்டுவிடலாம் என்று கூறினாள். இரண்டு நாட்கள் கழித்து கீர்த்தியின் தந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் அன்றுதான் அந்த ஊரில் காப்பு கட்டும் திருவிழா நடந்து கொண்டிருந்தது அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் அந்த விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.கன்னிகாவும் கீர்த்தியும் மிகுந்த மகிழ்ச்சியில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஒரு கழுகு கன்னிகாவை தாக்க வந்தது அப்போது கீர்த்தி காப்பாற்றினாள் பின் ஏன் இப்படி நடந்தது என கன்னிகாவிடம் கேட்டால் அதற்கு கன்னிகா எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது ஆனால் சிறுவயது முதலே இப்படித்தான் என்னை எங்கு கழுகு பார்த்தாலும் இப்படித்தான் தாக்கவரும் அதனாலே என்னை எங்கும் தனியாக என் பெற்றோர் விடமாட்டார்கள் என்று கூறினால் இதை கேட்டதும் கீர்த்திக்கு கன்னிகா மேல் ஒரு சிறு சந்தேகம் எழுந்தது. ஆனால் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போல் கன்னிகாவிடம் மகிழ்ச்சியாய் இருந்தால் ஆனால் அந்த சம்பவம் அவளை மிகவும் யோசிக்க செய்தது பல புத்தகங்களை படித்தால் இணையத்திலும் தேடினால் ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதற்கான விடை அவளுக்கு சற்று கிடைத்தது மேலும் இதற்கான பதில் கிடைக்க வேண்டுமெனில் கன்னிகாவின் பெற்றோரிடம் கேட்டால் மட்டுமே தெரியும் என அவள் கன்னிகாவின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்ததைப்பற்றி கூறு அவர்களை கீர்த்தியின் கிராமத்திற்கு வருமாறு கூறினாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சரி நாங்கள் வருகிறோம் என ஒப்புக் கொண்டார்கள் கீர்த்தி அப்போது தன் கிராமத்தின் பெயரை கூறினாள் அதை கேட்டதும் கனகாவின் பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள் சரி சீக்கிரம் கிளம்பி வாருங்கள் எனக் கூறிவிட்டு கீர்த்தி தொலைபேசியை வைத்துவிட்டாள். ஆனால் கன்னிகாவின் தாயோ நாம் எந்த ஊரை பற்றி அவள் அறியக்கூடாது என எண்ணினோமோ எந்த ஊருக்கு அவள் செல்லக்கூடாது என நினைத்தோமோ அவள் அங்கேயே சென்றுள்ளாள். நாமே அவளை அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறி அழுதார். கன்னிகாவின் தந்தை சரி அழுது என்னவாக போகின்றது கிளம்பு நாம் அங்கு செல்லலாம் என்றார். கன்னிகாவின் தாய் ஆமாம் சீக்கிரம் போய் அவளை இங்கு அழைத்து வரவேண்டும் அவள் அங்கு இருக்க வேண்டாம் என்றார். இருவரும் நாகமணிகுறிச்சிக்கு வந்தார்கள் அங்கு வந்து கன்னிகாவை தேடிக்கொண்டிருந்தார்கள் அப்போது கீர்த்தி அவர்களை கண்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் வீட்டிற்கு சென்றதும் கன்னிகாவின் தந்தை தாய் இருவரையும் பார்த்த கீர்த்தியின் தந்தை பேரதிர்ச்சி அடைந்தார் அதைக் கண்ட கீர்த்தியும் கன்னிகாவும் ஏற்கனவே உங்களுக்கு இவர்களை தெரியுமா எனக் கேட்டார்கள் அதற்கு கீர்த்தியின் தந்தை இவள் என் தங்கை என்று கூறினார். அப்போது கீர்த்தியின் பாட்டி அந்தக் கோவிலைப் பற்றி கேட்டாயே அந்த கோவில் இப்படி இருக்க காரணம் ஆனவளே உன் தாய் தான் என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த கன்னிகா என்ன சொல்கிறீர்கள் என் தாய்தான் காரணமா? எப்படி? என்ன நடந்தது? என்று கேள்விமேல் கேள்வி எழுப்பினால். 25 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலை அனுதினமும் சுத்தம் செய்து அந்த தெய்வத்திற்கு பூஜை செய்து யாரும் காணாத அந்த நாகமணிஅம்மனின் காட்சியை காண பெற்றவள் உன்தாய் இந்த ஊருக்கே வெளிச்சமாக திகழ்ந்தவள் உன்தாய். ஆனால் அந்தக் கோவில் இப்போது இப்படி இருக்க காரணமும் உன் தாய்தான் என்றார். அப்படி என்ன நடந்தது என கன்னிகா கேட்டாள். தினமும் அந்த கோவிலுக்கு சென்று அம்மனுக்கு பூஜை செய்வது தான் உன் தாயின் வழக்கம் அதேபோல் ஒரு நாள் அவள் கோவிலுக்குச் சென்றால் அப்போது தீயஎண்ணம் படைத்த நயவஞ்சகர்கள் அந்த அம்மனின் நாகமணியை அடையவேண்டும் என எண்ணி அவளை பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது இவளை வசப்படுத்தி அம்மனின் நாகமணியை கடத்திச் சென்றனர் இவள் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பிவீட்டிற்கு ஓடிவந்தாள் அன்று இவள் உயிரை காப்பாற்ற இந்த ஊரைவிட்டு நாங்கள் வேறு ஊருக்கு அனுப்பி வைத்தோம். அதற்குப்பின் இன்று தான் இவளை பார்க்கிறோம் என்றார் அவர். அதைக் கேட்டதும் கன்னிகாவிற்கு இன்னும் அந்த கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அன்று இரவு அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனாலும் கன்னிகாவின் தாய் முகத்தில் ஏதோ ஒரு சலணம் இருந்துகொண்டே இருந்தது அதை கவனித்த கீர்த்தியின் தந்தை அவரை தனியே அழைத்துச்சென்று என்னவென கேட்டார் அதற்கு கன்னிகாவின் தாய் எனக்கு என் மகளை இந்த ஊருக்கு அழைத்து வந்தது மிகவும் பயமாக உள்ளது என்றார். ஏன் இப்போது இப்படி யோசிக்கிறாய் அதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே என்றார் கீர்த்தியின் தந்தை. இன்னும் எதுவும் முடியவில்லை அண்ணா அன்று நடந்தது பாதிதான் நான் கூறினேன் முழுவதுமாக யாருக்கும் தெரியாது உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால் அவர்கள் வந்து என்னை வசியம் செய்து அம்மனை வெளியில் வரவைத்தார்கள் நாகமணியை கவர்ந்து சென்றனர். ஆனால் அப்போது அம்மனின் சக்தி வெளியேறி ஒருவேள்ளி சிலையாக மாறி என்காலின் அடியில் இருந்தது. அது வந்ததும் நான் சுயநினைவிற்கு வந்து அதைஎடுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன் பின் நீங்கள் கூறியவாறு நான் சென்றுவிட்டேன். அங்கே ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் செய்து 5 ஆண்டுகள் எனக்கு குழந்தைகள் இல்லை பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது அவள்தான் கன்னிகா ஆனால் அவள் பிறப்பில் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அது என்னவென்று கன்னிகாவின் மாமா அதாவது கீர்த்தியின் தந்தை கேட்டார். அவள் பிறக்கும் வரை அந்த சிலைக்கு அனுதினமும் நான் பூஜை செய்து கொண்டுதான் இருந்தேன் ஆனால் அவள் பிறந்த அன்று அந்த சிலை மறைந்துவட்டது இவளின் பிறப்பிற்கும் அந்த சிலையின் மறைவிற்கும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் ஏற்பட்டு இருக்குமோ என்று எண்ணி ஒரு ஜோசியரிடம் சென்று கேட்டேன். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அழுத்தமானதாக இருந்தது அது என்னவெனில் அவள் மனித பிறப்புஇல்லை அவள் தெய்வபிறவி அவளின் ஜாதகப்படி 21 ஆண்டுகள் கழித்து பூமியில் ஒரு அதிசயத்தை நிகழ்த்த உள்ளாள் அவளின் மாற்றம் இந்த உலகுக்கே ஒரு புத்துணர்ச்சியை தரப்போகிறது என்று கூறினார். அதை கேட்டதும் நான் புரிந்து கொண்டேன் நாகமணிஅம்மனே என்மகள் உருவில் எனக்கு பிறந்துள்ளாள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என்றார் கன்னிகாவின் தாய். அதைக் கேட்டதும் கீர்த்தியின் தந்தைக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இது எதுவும் கீர்த்திக்கும் கன்னிகாவிற்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார் கனகாவின் தாய். ஆனால் இதை அனைத்தையும் கீர்த்தி மறைந்து நின்று கேட்டுவிட்டாள். கன்னிகாவின் தாய்கதையை கேட்டதும் கன்னிகாவிற்கு அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மீண்டும் மீண்டும் அதிகமாக எழத்தொடங்கியது. அனைவரும் உறங்கியதும் யாருக்கும் தெரியாமல் கன்னிகா அந்த கோவிலுக்கு சென்றாள் அப்போதும் அவளுக்கு முன்பை போல் பல காட்சிகள் கண்முன் வந்து சென்றது அங்கு கோவிலுக்குள் அவள் சென்று அங்குள்ள அம்மனின் சிலையை அவள் தொட்டதும் அவளின் முன் ஜென்மம் அவளுக்கு நினைவிற்கு வந்தது. தான் ஒரு நாகம் என்றும் தன்னிடம் இருந்த நாகமணியை கவர்ந்து சென்றது பற்றியும் அவள் அறிந்து கொண்டாள் தன்னை அழித்து தன் நாகமணியை பறித்துச் சென்ற அந்த தீயவர்களை அழித்தாக வேண்டும் என முடிவெடுத்தாள். வீட்டிற்கு வந்ததும் தன் தாயிடம் வித்தியாசமாக நடந்து கொண்டாள். அதை அறிந்த கன்னிகாவின் தாய் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்னவாயிற்று உனக்கு எனகேட்டார். கன்னிகா எதற்கும் சரியாக பதில் சொல்லவில்லை. திருவிழா தொடங்கியது அனைவரும் திருவிழாவை சந்தோஷமாக கொண்டாடினார்கள் திருவிழா முடிந்ததும் கன்னிகாவை சென்னைக்கு போகலாம் என கன்னிகாவின் தாய் அழைத்தார் கன்னிகா என்னால் வர இயலாது என்றாள் ஏன் திருவிழாக்காக வந்தாய் அதுதான் முடிந்து விட்டது அல்லவா வீட்டிற்கு செல்லலாம் என்று கன்னிகாவின் தாய் கூறினார். கன்னிகா எவ்வளவு மறுத்தாலும் அவளின் தாய் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் கேட்கவில்லை திடீரென கோபமடைந்த கன்னிகா பாதி நாகமாகவும் பாதி பெண்ணாகவும் தன் தாய் முன் தோன்றி நான் யார் என்று உனக்கு நன்றாகத் தெரியும் இருந்தும் நீ என்னை உன் சுயநலத்திற்காக உன் மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக என்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல பார்க்கிறாய் என்று மிகவும் கோபமாக கூறினாள் நான் எதற்காக மீண்டும் வந்துள்ளேன் என்பது உனக்கு நன்றாகவே தெரியும் இருந்தும் நீ என்னை இங்கிருந்து அழைத்துச்செல்ல பார்க்கிறாய் அல்லவா தவறு செய்யாதே என் கோபத்திற்கு ஆளானால் நீ தாங்க மாட்டாய் என்று கூறினாள். தன் நாகமணியை யார் கடத்தினார் என்பதை அறிந்து கொண்டாள் அவன் அந்த ஊரிலே ஒரு வனத்தில் கடும் தவத்தில் இருப்பதையும் உணர்ந்தால் தன்னை அழிக்க தவம் புரிகிறாயா என்று அவனை அவன் தவத்தைக் கலைத்து அவனை கொல்ல முற்பட்டால் ஆனால் அவனை கொல்ல அவளால் இயலவில்லை அவன் தவத்தை மட்டும் கலைத்துவிட்டு தன் இருப்பிடமான கோவிலுக்கு சென்றால் கன்னிகா. அங்கிருந்து வந்த அந்த மாயாவி கன்னிகாவின் வீட்டிற்கு சென்று கன்னிகாவின் தாய் மாமா அனைவரையும் தாக்கி கன்னிகாவை தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது கன்னிகாவின் தந்தையைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள் கன்னிகாவின் தந்தை அவனைப் பார்த்து இப்போது எதற்கு இங்கு வந்தாய் நீ முதலில் இங்கிருந்து செல் எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் யாராவது பார்த்தால் பிரச்சனை தான் ஆகும் முதலில் செல் என்றார் .அந்த மாயாவியும் அங்கிருந்து சென்றான் பின் இரவு கன்னிகாவின் தந்தை யாருக்கும் தெரியாமல் எங்கோ செல்வதை கன்னிகாவின் தாய் கண்டார். இவர் இந்த நேரத்தில் எங்கு செல்கிறார் என்பதை அறிய கன்னிகாவின் தாய் கன்னிகாவின் தந்தையை பின்தொடர்ந்து சென்றார் அப்போது கன்னிகாவின் தந்தை அந்த மாயாவியை காணச் சென்றதை அறிந்தார் கன்னிகாவின் தந்தை மாயாவியை கண்டு அண்ணா எப்படி இருக்கிறாய் என்றார் என்று கூறி கட்டியணைத்தார் அதை கண்டதும் கன்னிகாவின் தாய்க்கு பெரும் அதிர்ச்சி. ஏன் எதற்காக என்னை தேடி என் வீட்டிற்கு நீ வந்தாய் யாரேனும் பார்த்திருந்தால் என்னவாவது என்றார் கன்னிகாவின் தந்தை .அதற்கு அந்த மாயாவி நான் உன்னை காணவரவில்லை நான் அந்த நாககன்னியை தேடி வந்தேன் என்றான். நாகக்கன்னியா? என்ன கூறுகிறாய் என்றார் கன்னிகாவின் தந்தை.ஆம் நாம் எடுத்த நாகமணியை தேடி மீண்டும் நாககன்னியாக வந்துள்ளாள் .அவளை மீண்டும் நாம் அழைத்தால் மட்டுமே நாகமணி நிரந்தரமாக நமக்கு சொந்தமாக இருக்கும் இல்லை எனில் அவள் நம்மை அழித்து விடுவாள் என்றான் மாயவி. அதிர்ந்துபோன கன்னிகாவின் தந்தை அப்போது அந்த நாககன்னி என் மகளா என கேட்டார். என்ன கூறுகிறாய் என்றான் மாயாவி. ஆம் அண்ணா நாம் அந்த கோவிலில் கண்ட பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொண்டேன். அவளுக்கு பிறந்தவள்தான் கன்னிகா. அவளிடம் கன்னிகா பிறக்கும் வரை ஒரு வெள்ளி நாகசிலை இருந்தது. கன்னிகா பிறந்ததும் அந்த நாகசிலை மறைந்துவிட்டது என்றார் அப்போதே நான் உணர்ந்திருக்க வேண்டும் என்றார் கன்னிகாவின் தந்தை. அப்போது அவள் நம்மை அழித்து விடுவாளோ என்று மிகவும் பயந்தார் கன்னிகாவின் தந்தை. அந்த மாயாவி அவள் என்னை அழித்தாலும் உன்னை அவளால் அழிக்க இயலாது ஏனெனில் இந்த ஜெனனம் எடுக்க அவளுக்கு நீயும் உதவியுள்ளாய் அவளால் உன்னை அவ்வளவு எளிதாக கொள்ள இயலாது உன்னை அவள் கொள்ள வேண்டுமென்றால் அவளுக்கு உயிர் கொடுத்த அவள் தாயின் மரணத்தால் மட்டுமே உன்னை கொல்ல முடியும் என்றான் மாயாவி. அதை அனைத்தையும் கேட்ட கன்னிகாவின் தாய் ஒரு பாவியையா நான் திருமணம் செய்துகொண்டேன் அம்மனின் அழிவிற்கு காரணமானவனையா நான் திருமணம் செய்து கொண்டேன் என்று மிகவும் வருத்தப்பட்டார். கன்னிகா சென்ற ஜென்மத்தில் அவள் இறந்த அதே நாள் வந்தது அந்த கயவர்களை கொள்ள முடிவெடுத்து மாயாவியை திட்டமிட்டு அழித்தாள். ஆனால் அந்த நாகமணி அவனிடம் இல்லை நாகமணியை காணாமல் அவள் எங்கு நாகமணி இருக்கும் என்பதை தேட ஆரம்பித்தாள் அப்போது அவன் கோயிலுக்கு வந்த கன்னிகாவின் தந்தை கன்னிகாவை அளிக்க ஆயத்தமானார்.அப்போதுதான் அந்த திருடர்களில் கன்னிகாவின் தந்தையும் ஒருவராக இருந்தார் என்பது கன்னிகாவிற்கு தெரியவந்தது பலவகையில் முயற்சித்தும் கன்னிகாவால் அவரை கொல்ல இயலவில்லை. ஆனால் கன்னிகாவின் தந்தை கன்னிகாவை பயங்கரமாக தாக்கி நாககன்னியாக இருந்த அவள் மிகுந்த காயத்துடன் மயங்கி விழுந்தாள். அப்போது அங்கு வந்த கன்னிகாவின் தாய் அடப்பாவி எப்படிடா உனக்கு மனசு வந்தது எப்படிப் பார்த்தாலும் உன்மகள் ஒரு தெய்வம் தப்பு செய்துவிட்டேன் மன்னித்து விடு என்றால் மன்னித்து இருக்குமே அவளைக் கொல்லவே நீ துணிந்து விட்டாய். இனி நீ எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் அம்மனைக் கொன்று நீ உயிரோட இருக்க வேண்டுமா என்று கூறி அங்கிருந்த சூலம் கொண்டு கன்னிகாவின் தாய் தன்னையே குத்திக்கொண்டு என்னால் மரணம் ஏற்படவேண்டும் என்ற இவனின் முடிவு அவளின் கையால் தான் நிகழவேண்டும் அவள் மரணம் இனி நிகழக்கூடாது என் மகளாக இருந்தாலும் நீ ஒரு தெய்வம் அவனை கொன்று உன் சக்தியை பெற்று ஊரை காப்பாற்று அம்மா என்றுகூறி உயிரைவிட்டார் கன்னிகாவின் தாய். தாயின் மரணம் தன் நாகமணியை காப்பாற்ற வேண்டும் என்றவெறி அனைத்தும் சேர்ந்து கன்னிகாவிற்கு புதுசக்தியை கொடுத்தது தன்தந்தையான அந்த அரக்கனை மிகவும் கொடூரமாக கொன்று நாகமணியை பெற்று அந்த ஊரில் எப்போதும் போல் வீற்றிருந்து அந்த ஊரை மிகவும் செழிமையாகவும் பாதுகாப்பாகவும் பாதுகாத்து வந்தால் கன்னிகா. மனிதனாகப் பிறந்து பின்தெய்வமாக மாறிய கன்னிகா எப்போதும் ஒரு நாகக்கன்னியே தீயவர்களை அழித்து நல்லவர்களை காதுகாத்து எப்போதும் நன்மை புரிவாள் அனைவருக்கும் நல்லதை செய்வாள்......
நன்றி
எப்போதும் அன்புள்ள காவியா.....
தங்களின் பொன்னான நேரத்தில் என் கதைகாக நேரத்தை ஒதுக்கி என் கதை முழுவதுமாக படித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....
#325
தற்போதைய தரவரிசை
51,130
புள்ளிகள்
Reader Points 1,130
Editor Points : 50,000
25 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 4.5 (25 ரேட்டிங்க்ஸ்)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
arasanvimal43
saroindia7
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்