JUNE 10th - JULY 10th
சுமதியின் காதல்
==================.
எஸ்... எஸ்...
==================
ஆற்புதம்......
அவள் செவ்விதழ்கள் ஒரு முறை முணுமுணுத்தது.
வசந்தின் ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஊடுருவி ஒரு இன்ப கிளர்ச்சியை உண்டுப் பண்ணியது.மாகிழ்வான உணர்ச்சிகது அவளை கனவுகள் காண வைத்தது.அவளது கன்னங்கள் சிவந்து போயின.
அவனை நினைத்து நினைத்து இரவுகள் விடிந்து போகும்.வசந்தை அவள் ஒரு முறை கூட பார்க்க வில்லை.அவள் உள்ளத்தில் அவன் அழுந்து பதிந்து விட்டான்.
அவன் போட்டோ மட்டுமே அவள் பார்த்து இருக்கிறாள்.
பல பல ஜென்மங்கள் அவனோடு வாழ்ந்து விட்டது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது
அவனோடு ஒட்டி உறவாடியது போல காலங் காலமாய் உரசி பேசிப் பழகியது போலவே அவளுக்கு தோன்றியது.
விசித்திரமான நினைவலைகள் கிளர்ந்தன. அவள் இதயம் ரெக்கை கட்டி பறந்தன. நாடி நரம்புகளில் மின்னதிர்ச்சி ஏற்பட்டது போல உணர்ந்தாள்
வசந்த் சுமதியை விட ஐந்து வயது இளையவன்.இவர்களது காதல் ஒரு விபத்தில் தொடங்கி இப்போது வேரூன்றி நின்றது.
வசந்த் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர்.திருமணம் ஆகவில்லை. இப்போது வசந்துக்கு வயது இருபத்தைந்து.
இப்போது அவன் மட்டுமே தனி ஆள்.வசந்தின் அம்மா, அப்பா ஒரு கார் விபத்தில் இறந்து விட்டனர்.
அரண்மனை மாதிரி பெரிய வீடு.சுமதிக்கு கலியாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. அதுக்கு பதிநொரு வயது ஆகிறது..அவள் கணவன் ரமேஷ்குடிகாரன். கலியாணம் ஆகிய புதியத்தில் இருவரும் ரொம்ப சந்தோசமாகத் தான் இருந்தார்கள்.
ஒரு பெண் குழந்தைப் பிறந்தும் அவன் திருந்த வில்லை. அந்த பெண் குழந்தை இன்னும் இரண்டோறு மாதத்தில் வயதுக்கு வந்துவிடும் போல இருக்கிறது.
அவன் வெளியில் குடித்து கும்மாளமிட்டான். சுமதி தாங்கிக் கொண்டாள். ஆனால் இப்போது ஒரு வயசு பொண்ணு இருக்கிற இடத்தில் குடிக்காரா நண்பர்களை கூப்பிட்டுக்கொண்டு வந்து கூத்தடிப்பது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவள் நிலையில் யாராக இருந்தாலும் இப்படி தான் நினைப்பார்கள்.வீட்டுக்கு அழைத்து வந்து நடு வீட்டில் உட்கார்ந்து குடிப்பது எந்த குடும்ப பெண்ணுக்கு தான் பிடிக்கும்?
போதையில் சுமதியை கண்டப்படி அடித்து துன்புறுத்துவான். சுமதி கலியாணத்தில் போட்ட நகைகள் எல்லாம் விற்று விற்று தின்று குடித்து தீர்த்து விட்டான் பாவி.
இப்போது அவள் காதில் ஆடுவது கவரிங் கம்மல் தான்.
வசந்தின் அம்மா அவனுக்கு புத்தி சொல்லி சொல்லியே. அவன் திறந்த வில்லை என்பதால் மனம் நொந்து வெந்து, மன நோயாளியாக மாறி கடைசியில் இறந்தே போனாள்.அது அவனுக்கு இன்னும் அதிக தைரியம் வந்து விட்டது. குடிக்கார நண்பர்களோடு சேர்த்துக் கொண்டு ரொம்பவும் அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டான்.
நாளாக நாளாக இன்னும் அதிகம் ஆனதே தவிர குறையவே இல்ல
அவன் அதிகமாக குடிக்கு அடிமையாக போய் விட்டான்.
அன்று அவனிடம் குடிக்க காசு இல்லை. கண்ட கண்ட குடிகார நண்பர்கள் எல்லோரிடமும் கடன் வாங்கி கடன் வாங்கி. இப்போ அவனுக்கு கடன் யாரும் கொடுப்பதில்லை.
அவனுக்கு குடிக்காமல் வெறிப் பிடித்து விட்டது. குடிக்கவில்லை என்றால் தலை அப்படியே வெடித்து விடும் போல ஆகி விட்டது அவனுக்கு.
குடிக்கப் பணமும் இல்லை. அவன் பொண்டாட்டியிடம் நகையும் இல்லை. என்ன செய்தான் தெரியுமா?
அவன் குடிக்கார நண்பனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சுமதியை போய் படுடி என்றான்.
அவளோ செருப்பு தூக்கி அடிக்கப் போவாள்.
சும்மாவே அவளை தொட்டுக்க எதுவும் இல்லையடி நாயே என்று எட்டி உதைப்பான்.
அவன் வீட்டுக்கு வந்தாலே போதும் குழந்தை அம்மு அலறி பயந்து ஓடி ஒளிந்துக் கொள்வாள்
டேய் இன்னிக்கு நான் சொல்றது நீ கேட்டே ஆகணும்.
என் பேச்சை நீ கேட்டே ஆகணும் மீறினால் உன்னை கொலைப் பண்ண கூட தயங்க மாட்டேன்.
வாடி இங்கே. இதோ இவன் என் பிரண்ட் மணி இவன் கிட்டே நான் செலவுக்கு கை நீட்டி காசு வாங்கிட்டேன். இவன் பணக்காரன். நமக்கு வேண்டியது செய்வான்.
கொஞ்ச நேரம் அவன் கூட ஜாலியா இருடி. அவன் சொல்ற மாதிரி கேளு.
நாமே ஆசைப் பட்டது எல்லாம் செய்து கொடுப்பான்.
இண்ணிக்கு நீ கண்டிப்பா நான் சொல்றதை கேட்டே ஆகணும் என்று சொல்லியப்படி. கையை பிடித்து தர தர வென்று இழுத்துக்கொண்டு பெட் ரூமுக்கு போனான்.
அந்த பிஞ்சிக் குழந்தை அம்மா.. அம்மா என்று கத்தினாள். அது அவன் காதுகளில் விழா வில்லை.
அங்கே இவன் நண்பன் குடிகாரன் மணி பெட்டில் உட்கார்ந்து இருந்தான்.அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் சுமதி.
உள்ளே இழுத்து சென்றவன் அவளைப் பிடித்து பெட்டில் தள்ளி விட்டு வெளியே வந்து ரூம் கதவை மூடினான்.
வெளியே அந்த குழந்தை கதறி கதறி அழுத்துக்கொண்டு இருந்தது.
சுமதிக்கு ஒரு கனம் என்ன செய்வதேன்றே புரியவில்லை அவளுக்கு.
அவன் நண்பன் கட்டிலில் இருந்து எழுந்தான். இதோ பாரு உன் புருஷன் என் கிட்டே கையை நீட்டிரூபாய் பத்தாயிரம் வாங்கி இருக்கிறான். நான் நீ எவ்வளவு கேட்டாலும் தருகிறேன்.
கொஞ்ச நேரம் வந்து படு என்று சொல்லியப்படியே சுமதியின் கையை பிடித்தான் அவன்.
கட்டிலில் பிடித்து தள்ளினான்.
டேய் விடு டா.டேய் என்னை விடு டா கொலைப் பண்ணி விடுவேன். வேண்டாம் வேண்டாம் என்னை விட்டு ஓடி போய் விடு.
வேண்டாம்.. என்று சத்தமாக கத்தினாள்.
ரூமுக்கு வெளியே உட்கார்ந்து பாட்டில் திறந்து சோடா ஊற்றி குடித்துக் கொண்டு இருந்தான் அவன்.
தாயின் சப்தம். கேட்டு குழைந்தை குழலி (அம்மு ) அம்மா..
அம்மா.என்று அழுதுக் கொண்டு இருந்தாள். கதவை போய் தட்டினாள்.
அவன் தள்ளியவுடன் கட்டிலில் விழுந்த சுமதி சுதாகரித்து எழுந்தாள்.
சுமதி சுற்றும் முற்றும் பார்த்தாள். குழந்தை கொண்டு வந்து போட்டிருந்த மத்து இருந்தது.
எடுத்து தன்னை அந்த காமுகன் குடிக்காரன் கிட்டே இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லாமல் பத்திரக் காளியாக மாறி.
ஏண்டா குடிக்காரா நாய்களே உங்களுக்கு பொண்டாட்டி இல்லை. அக்கா தங்கச்சி இல்லை. அவங்க கிட்டே போய் உங்க வெறியை தீர்த்துகுங்கடா நாய்களே என்று ஓங்கி அவன் தொடைக்கு நடுவே அடித்தாள் சுமதி.
ஐயோ.. ஐயோ அம்மா.. அம்மா.. என்று வலியால் துடித்தான். அவன் கைலியில் இருந்து ரத்தம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. கைலி நனைய ஆரம்பித்து விட்டது.
கீழே விழுந்து விட்டான் அவன் சப்தம் கேட்டு சுமதியின் புருஷன் கதை திறக்க. உள்ளே இருந்து சுமதி வெளியே வந்தாள்.
கூச்சல் சப்தம் கேட்டு அக்கம் பக்கம் இருத்தவர்கள் ஓடி வந்து. ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த மணியே நூற்ரேட்டு ஆம்புலன்ஸ் வண்டிக்கு கூப்பிட்டு உடனே அரசுப் பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
போலீஸ்சுக்கு தகவல் போய் சுமதி மேலே கொலை க் குற்றம் சொல்லி FIR போடப்பட்டது.
மகளிர் காப்பகத்தில் சுமதியும் குழைந்தை குழலியும் சுமதியும் சேர்த்துத்தனர்
வழக்கு விரைவு நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நடுவர் நீதி மன்ற நீதி பதி புவனேஸ்வரி. சுமதி தற்காப்புக்குக்கு தான் அடுத்து உள்ளார். தன்னைப் பாது காத்துக்கொள்ள வே அவர் அடித்து உள்ளார் என்றும். குடிவெறியில் பாலியல் பலாத்திக்கரம் செய்த மணிக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனையும் ஐம்பது ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அதை செய்ய தூண்டிய சுமதியின் கணவர் ராமேக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்க காவல் தண்டனையும். ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்க உத்தரவு விட்டும்.
பாலியல் வன்கொடுமை செய்த மணிக்கு ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் விதித்தும் கட்ட தவறினால் அதுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும்
சுமைதியை விடுதலை செய்தும்கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
சுமதி குழந்தையுடன் வெளியே வரவும். அவள் புருஷன் உட்கார்ந்து இருந்தது பார்த்தாள்.
சுமதி கழுத்தில் இருந்த தாலியை கழற்றி அவன் மூஞ்சி மேலே விசிறி அடித்தாள். காரித் துப்பி எல்லோர் முன்னாடியும். டேய் குடிக்காரா நாயே இன்றையில் இருந்து உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.
என்று ஆவேசமாக பேசி விட்டு குழைந்தையை கை பிடித்துகொண்டு
நடந்தாள்.
குழந்தையை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறாள். வயிற்று பிழைப்புக்கு. ஊதுவத்தி தேய்க்கும் தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறாள் சுமதி.
இறைக்கு சுமதிக்கு வயது முப்பது. குழலிக்கு பதின்னொன்னு.
சுமதி விவாகரத்து விண்ணப்பம் செய்து விவாகரத்தும் செய்து விட்டாள்
குழலியோடு சுமதி கடைத் தெருவுக்கு போய் செலவு வாங்கிக்கொண்டு வரும்போது. ஆட்டோ மோதி சுமதிக்கு அதிகம் காயம் ஏற்பட்டு மயக்கம் வந்த நிலையிம் அவள் மலர் ஹாஸ்பிடலில் சேர்க்கைப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாள்.
அவள் கண் முழித்துப் பார்த்தப் போது குழலி பக்கத்தில் இருந்தாள். நர்ஸ் இங்கே நடந்தது எல்லாம் சொல்லி விட்டாள். சுமதியை வசந்த் ஹாஸ்பிடலில் சேர்த்து எல்லா செலவும் செய்து காப்பாற்றியது எல்லாம் சொல்லி விட்டாள். ஹாஸ்பிடல் செலவு பில் எல்லாம் அவனே கட்டிவிட்டு அவன் போய் இருந்தான்.
சுமதிக்கு அவன் மூஞ்சியைக் கூட தெரியாது. அவனைப் பற்றி ஹாஸ்பிடல் ரெஜிஸ்டரில் முகவரியில் தான் பார்த்தாள்.
வசந்த் யார் கிட்டேயும் பேச மட்டான் ரொம்ப அமைதி. அவன் சுமதிக்கு காசு கொடுத்த விஷயம் கூட சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு கை செலவுக்கு ஐந்து ஆயிரம் ரூபாய் நர்ஸ் கிட்டே சுமதிக்கு கொடுக்க சொல்லி கொடுத்து விட்டும் வந்து இருந்தான் அவன்.
அவனை பார்க்கும் ஆசை சுமதியின் அடி மனதில் இருந்துக் கொண்டே இருத்தது. அவள் அவனை தேடிக்கொண்டு தான் இருந்தாள்
எப்படியோ போன் நம்பர் ஹாஸ்பிடலில் வங்கி அவள் வசந்த்துக்கு போன் செய்தாள். போன் ரிங் ஆனது
போன் எடுத்தான் வசந்த். ஹலோ ஹலோ.. நான் சுமதி பேசுறேன்
எந்த சுமதி......?
≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥≥
#842
தற்போதைய தரவரிசை
25,050
புள்ளிகள்
Reader Points 50
Editor Points : 25,000
1 வாசகர்கள் இந்தக் கதையை ஆதரித்துள்ளார்கள்
ரேட்டிங்கஸ் & விமர்சனங்கள் 5 (1 ரேட்டிங்க்ஸ்)
S. Naffia Gowser
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10புள்ளிகள்
20புள்ளிகள்
30புள்ளிகள்
40புள்ளிகள்
50புள்ளிகள்