Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
நூலாசிரியருடைய பிற நூல்கள்
முழு நீள நகைச்சுவை நாடகம்
காதல் தேடி
காதல் வேட்டை
காதல் நாடகம்
காதலில் ஜெயிக்கலாம் - முப்பதே நாட்களில்
காதல் இல்லாத காதல் க
நூலாசிரியருடைய பிற நூல்கள்
முழு நீள நகைச்சுவை நாடகம்
காதல் தேடி
காதல் வேட்டை
காதல் நாடகம்
காதலில் ஜெயிக்கலாம் - முப்பதே நாட்களில்
காதல் இல்லாத காதல் கதை (மூன்று பாகங்கள்)
நாவல்
1998 - ஒரு காதல் கதை
கவிதைத் தொகுப்பு
காதல் எனப்படுவது…
காணாத கனவுகள்
உன்போல் ஒரு பெண்ணை… (மரபுக் கவிதைகள்)
சூர்யா : என்னடா, பாலா ஒரு மாதிரியா இருக்கான்.
ராஜா : அது வந்து, குமாரோட ஆளு கமலாவை, அந்த பிரகாஷ் பிக்-அப் பண்ணிக்கிட்டான்.
சூர்யா : (பாலாவிடம்) பாலா,… பாலா, யூ ஆர் வெ
சூர்யா : என்னடா, பாலா ஒரு மாதிரியா இருக்கான்.
ராஜா : அது வந்து, குமாரோட ஆளு கமலாவை, அந்த பிரகாஷ் பிக்-அப் பண்ணிக்கிட்டான்.
சூர்யா : (பாலாவிடம்) பாலா,… பாலா, யூ ஆர் வெரி க்ரேட். குமாரும் நீயும் ரொம்ப க்ளோஸ்னு தெரியும். ஆனா, அதுக்காக,… குமாரோட ஆளை, எவனோ ஒருத்தன் பிக்-அப் பண்ணீட்டுப் போய்ட்டான்றதுக்காக, நீ இவ்வளவு ஃபீல் பண்றியே. யூ ஆர் ரியலி க்ரேட் பாலா.
பாலா பார்த்தல்.
குமார் பார்த்தல்.
ராஜா பார்த்தல்.
சூர்யா : நட்புக்கு உதாரணம்னு யார் யாரோ, வயசுக்கு வராத பேர் எல்லாம்,…ச்சீச்சீ வாய்க்கு வராத பேர் எல்லாம் சொல்றாங்க. ஆனா,… இன்னைய தேதிக்கு நட்புக்கு உதாரணம்னா, அது நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்டா.
குமார் : (சூர்யாவிடம்) சரி, சரி அதை விடு,… நீ ரொம்ப நாளா, அந்தப் பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருக்கியே. அவகிட்ட சொல்லிட வேண்டியது தான?!
சூர்யா : அது,..அது வந்து அவ என்னை விரும்புறாளானு தெரியலையே.
ராஜா : நீ மொதல்ல சொல்லு, விரும்புனா ஓ.கே... விரும்பலைன்னா, விரும்ப வச்சுருவோம். என்ன?
சூர்யா : ம்ம்ம். சொல்றேன் சொல்றேன்.
வருடம் – 1998
அலங்காரம் செய்துகொண்டது
கண்ணாடி
நீ எதிரில் நிற்கும்போது…
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, இரண்டு ரூபாய் தூரத்தில் (பேருந்துக் கட்டணம
வருடம் – 1998
அலங்காரம் செய்துகொண்டது
கண்ணாடி
நீ எதிரில் நிற்கும்போது…
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து, இரண்டு ரூபாய் தூரத்தில் (பேருந்துக் கட்டணம்) இருக்கும் வண்டியூரில், பெருமாள் கோவில் தெருவில் உள்ள, அந்த ஊரின் பிரத்யேகமான மைதானத்தில், ரவிசங்கர் தன்னுடைய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனும் சிவாவும் மட்டை பிடித்துக் கொண்டிருந்தனர். ராஜா விக்கெட் கீப்பராக இருந்தான். பாண்டி ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்தான். மற்றும் சிலர், ஆங்காங்கே நின்று, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தனர்.
அந்த மைதானத்தின் காம்பவுண்டு சுவரில் அமர்ந்து சில சிறுவர்களும், ஆகாயத்தில் இருந்து ஆதவனும் அவர்களின் ஆட்டத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது பந்து வீச வருபவனின் பெயர் தான் பாலா. கபில்தேவின் உலக சாதனையை (434 விக்கெட்) முறியடிப்பது தான், இவனது ஒரே இலட்சியமாம்.
பாலா, முதல் பந்தை வீசினான். ரவிசங்கர் அந்த பந்தைச் சரியாக கணித்து அடித்தான். அவர்கள் ஒரு ரன் எடுத்தனர். இப்போது, பாலாவின் பந்தை, சிவா எதிர்கொள்ள வேண்டும்.
சிவா, தனது மட்டையை இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது போல் சுழற்றினான். பிறகு, பாலாவை பந்து வீசச் சொன்னான். பாலா பந்து வீசினான். அவன் வீசிய பந்து, பாதி பிட்ச்சைக் கடப்பதற்கு முன்பாகவே, சிவா மிகவும் பிரயாசைப்பட்டு, தனது வலது காலை மடக்கி, முட்டியைத் தரையில் ஊன்றி, அசாருதீன் ஸ்டைலில், மட்டையை ஒரு சுழற்று சுழற்றினான்.
பந்து வரும் முன்பே, மட்டை விலகிச் செல்ல, பந்து அவனது தொடையைப் பதம் பார்த்தது.
வானம்
· சுற்றிச்சுற்றி வந்தாலும்
வெளியேற முடியாத
பூமிப்பறவையின்
கூண்டு.
· நட்சத்திர சித்திரங்கள்
வரையப்பட்டுள்ள
சுவர்.
&midd
வானம்
· சுற்றிச்சுற்றி வந்தாலும்
வெளியேற முடியாத
பூமிப்பறவையின்
கூண்டு.
· நட்சத்திர சித்திரங்கள்
வரையப்பட்டுள்ள
சுவர்.
· பகலில்
வண்ணத்திலும்
இரவில்
கறுப்பு வெள்ளையிலும்
காட்சி தருகின்ற
இயற்கையின்
தொலைக்காட்சி
· ஆயிரம் நட்சத்திரங்கள்
நடித்துள்ள படத்தைத்
தினந்தோறும்
திரையிடும்
திரையரங்கம்
· நிலவு விவசாயி
விதைத்து வைத்த
விண்மீன் விதைகள்
காலையில் பயிர்களானதும்
சூரிய முதலாளியால்
அறுவடை செய்யப்படும்
வயல்.
· பூமி வீட்டின்
மேற்கூரை
· மண்
’மணம்’ புரிய
மழைத்துளிகள் என்னும்
அட்சதை அரிசிகளைத் தூவி
ஆசீர்வதிக்கின்ற
அன்புடைய நெஞ்சம்.
· சூரியக்குடும்பம் என்னும்
கூட்டுக் குடும்பத்தினர்
கூடி வசிக்கின்ற
மாடி வீடு.
· நிலவு ஆசிரியர்
பாடம் நடத்த
நரை விழுந்த
நட்சத்திர முதியோர்கள்
மாணவர்களாய் அமர்ந்து
பாடம் படிக்க
இரவில் நடக்கும்
முதியோர் பள்ளி
· சூரியன் என்னும்
அமலாக்கப்பிரிவு அதிகாரியின்
அதிரடி சோதனைக்கு அஞ்சி
கணக்கில் காட்டாத- தனது
வெள்ளை நிறக்
கறுப்புப் பணத்தை (விண்மீன்கள்)
இரகசியமாய்
மறைத்து வைக்கின்ற
பணக்காரன்.
· பகலில்
பாலைவனம்
இரவில்
சோலைவனம்.
காதல் கவிதைகள், புதுக்கவிதைகள்,
பிரசுரம்
உனது
’இதழ்’ என்னும்
இதழில்,
எனது
’முத்த’க் கவிதைகள்
பிரசுரமாகுமா?!
அடிகள்
காதல் கவிதைகள், புதுக்கவிதைகள்,
பிரசுரம்
உனது
’இதழ்’ என்னும்
இதழில்,
எனது
’முத்த’க் கவிதைகள்
பிரசுரமாகுமா?!
அடிகள்
எத்தனை அடிகள்
எழுதியும் கூட
வர்ணிக்க முடியவில்லை;
அன்பே!
உனது
ஈரடிகளை!
முழு நீள நகைச்சுவை நாடகம்.
சதீஷ் : இதான் பர்ஸ்ட் டைம்.
ரோஷினி : என்ன, பீச்சுக்கு வர்றதா?
சதீஷ் : இல்ல, ஒரு அழகான பொண்ணு கூட பீச்சுக்கு வர்றது.
முழு நீள நகைச்சுவை நாடகம்.
சதீஷ் : இதான் பர்ஸ்ட் டைம்.
ரோஷினி : என்ன, பீச்சுக்கு வர்றதா?
சதீஷ் : இல்ல, ஒரு அழகான பொண்ணு கூட பீச்சுக்கு வர்றது.
ரோஷினி : ஓ, அப்ப அழகா இல்லாத பொண்ணுங்க கூட, ஐயா, நெறையா வாட்டி வந்துருக்காரோ!
சதீஷ் : ஏம்மா, ஏன்? மொதமொதல்ல லவ் பண்ற பொண்ணை, மொத மொதல்ல வர்ணிக்கலாம்னு பார்த்தா... ரோஷினி : மொதமொதல்லயா?! அப்ப அந்த தனலெட்சுமி சதீஷ் : அது வயசுக்கு வர்றதுக்கு, ச்சீச்சீ, அந்த வயசுல வர்றதுக்குப் பேரு எல்லாம், லவ் இல்லைம்மா. இது தான் ட்ரூ லவ்.
ரோஷினி : நம்பீட்டேன்.
சதீஷ் : இதுவரைக்கும், இந்த பீச்சுக்கு வர்றப்ப எல்லாம், ரொம்ப ஃபீல் பண்ணுவேன்.
ரோஷினி : எதுக்கு?
சதீஷ் : நெறையா பேரு, ஜோடி ஜோடியா சுத்துவாங்கள்ல; அதப் பார்த்துத் தான். அதான், இந்த வங்கக் கடல் கிட்ட ஒரு சபதம் போட்டேன். இனிமே இங்கெ வந்தா என் ஆளோட தான் வருவேன்னு.
இன்னிக்குத் தான் என் சபதம் நெறைவேறுன நாளு. என் தேவதைக்கு ரொம்ப நன்றி.
ரோஷினி : நீங்க சொல்றதையெல்லாம், நான் நம்பணுமா?! சதீஷ் : நானா, என்னைய நம்புன்னு, நான் சொல்ல மாட்டேன், ஆனா, நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு, ஒரு நாள் நீயே புரிஞ்சுக்குவ.
ரோஷினி : ஐ லவ் யூ மாம்ஸ்.
சதீஷ் : ஐ டூ லவ் யூ மை ஏஞ்சல்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.