You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவானம்
· சுற்றிச்சுற்றி வந்தாலும்
வெளியேற முடியாத
பூமிப்பறவையின்
கூண்டு.
· நட்சத்திர சித்திரங்கள்
வரையப்பட்டுள்ள
சுவர்.
· பகலில்
வண்ணத்திலும்
இரவில்
கறுப்பு வெள்ளையிலும்
காட்சி தருகின்ற
இயற்கையின்
தொலைக்காட்சி
· ஆயிரம் நட்சத்திரங்கள்
நடித்துள்ள படத்தைத்
தினந்தோறும்
திரையிடும்
திரையரங்கம்
· நிலவு விவசாயி
விதைத்து வைத்த
விண்மீன் விதைகள்
காலையில் பயிர்களானதும்
சூரிய முதலாளியால்
அறுவடை செய்யப்படும்
வயல்.
· பூமி வீட்டின்
மேற்கூரை
· மண்
’மணம்’ புரிய
மழைத்துளிகள் என்னும்
அட்சதை அரிசிகளைத் தூவி
ஆசீர்வதிக்கின்ற
அன்புடைய நெஞ்சம்.
· சூரியக்குடும்பம் என்னும்
கூட்டுக் குடும்பத்தினர்
கூடி வசிக்கின்ற
மாடி வீடு.
· நிலவு ஆசிரியர்
பாடம் நடத்த
நரை விழுந்த
நட்சத்திர முதியோர்கள்
மாணவர்களாய் அமர்ந்து
பாடம் படிக்க
இரவில் நடக்கும்
முதியோர் பள்ளி
· சூரியன் என்னும்
அமலாக்கப்பிரிவு அதிகாரியின்
அதிரடி சோதனைக்கு அஞ்சி
கணக்கில் காட்டாத- தனது
வெள்ளை நிறக்
கறுப்புப் பணத்தை (விண்மீன்கள்)
இரகசியமாய்
மறைத்து வைக்கின்ற
பணக்காரன்.
· பகலில்
பாலைவனம்
இரவில்
சோலைவனம்.
The items in your Cart will be deleted, click ok to proceed.