Share this book with your friends

Divyadesa Pasurangal / திவ்யதேசப் பாசுரங்கள்

Author Name: Dr. P. Madhusudhanan | Format: Paperback | Genre : Language Studies | Other Details

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளைக் குறித்துப் பாடப்பட்ட தமிழ் பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ் மறையாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தகமானது 108 திவ்ய தேசத்தில் சோழ நாட்டில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாற்பது தலங்களில் ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்களைத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பாசுரம், அதன் பொருள், பாசுரத்தின் தத்துவார்த்த அர்த்தங்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. மேலும் சில பாசுரங்களில் வியாக்யானக் கருத்துக்களும் வழங்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியில், சோழ நாட்டுத் திருப்பதிகளில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின் மூலமும் அதன் எளிய உரையும் தரப்பட்டுள்ளன.  

இந்த முதல் தொகுதியில் தென் தமிழகத்திலுள்ள  டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்டங்களில் உள்ள திவ்யதேத் தலங்களில் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளi. இதனைத் தொடர்ந்து மற்ற திவ்ய தேசப் பாசுரங்கள் அடுத்தடுத்து தொகுதிகளாகத் தர விழைகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

5 out of 5 (1 ratings) | Write a review
santhakumaran1984

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
The book purchased from Amazon is a wonderful book. This is the first book to break down the 108 Divyas platform and put it into words with

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

முனைவர் பா.மதுசூதனன்

திருக்குடந்தையினை சொந்த ஊராகக் கொண்ட முனைவர். பா. மதுசூதனன் அய்யங்கார் அவர்கள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளமையில், கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலில் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பு ஆகியவற்றை முடித்தவுடன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பொதுநிர்வாகம் மற்றும் தத்துவம்-சமயம் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். வைணவத்தில் கொண்ட ஈர்ப்பால் நெல்லை நவதிருப்பதி திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். ஆழ்வார்களின் மீது பக்தி ஏற்பட்டு அவரது அருளிச் செயல்களான நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். முகநூலில் 2014ம் ஆண்டு முதற்கொண்டு நாலாயிர திவ்யப்பிரபந்த பாசுரங்களைத் தினசரி பதிவிட்டு தொடர்ந்து அப்பணியினை இன்றும் மேற்கொண்டு வந்துள்ளார்.

ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அனைவரும் படித்து புரிந்து கொண்டு அதன்படி வழுவ வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், தினசரி முகநூலில் பதிவிட்டிருந்த பிரபந்தப் பாசுரங்களை தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆவலில், பகவானின் திருப்பணியாகக் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு ஆராஅமுதனின் திருவருளால் தற்போது அப்பணியும் முடிவுறும் நிலைக்கு வந்துள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஆழ்வார்கள் அருளிச் செய்த சோழநாட்டுத் திவ்யதேசப் பாசுரங்களைத் தொகுத்து எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நூலாகத் தந்துள்ளார். பிரபந்தத்தின் பெருமைகளையும், பெருமானின் உயரிய குணங்களையும் இப்புத்தகத்தில் இடம்பெறுமாறு செய்துள்ளார். இந்நூலைப் படிப்போர் அவற்றின் சீர்மையை உணர்ந்து, பகவானின் பல்வேறு லீலைகளையும் மனதில் இருத்தி இறுதிவரை அனைவரும் இதனைக் கற்கவேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் இந்நூலினைப் பெருமானின் அருளாசியுடன் அனைவரது இல்லங்களிலும் அலங்கரிக்க வேண்டும் என்பதே நூலாசிரியரின் உயரிய கொள்கையாகும்.

Read More...

Achievements