இரக்கம் என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.
இரக்கம் என்றால் என்ன?
பௌத்தத்தில், இரக்கம் என்பது மற்றவர்கள் அவர்களின் துன்பங்கள் மற்றும் துன்பங்களுக்கான காரணங்களில் இருந்து விடுபட விரும்புதலாகும். குறிப்பாக நாம் எதிர்கொண்ட அதே சூழலை சந்திக்கும் மற்றவர்களின் உணர்வுகளை போற்றதலை அடிப்படையாகக்கொண்டது. நாம் அந்தச் சூழலை அனுபவித்திருக்காவிட்டாலும், அவர்களிடத்தில் நம்மை பொருத்திப்பார்த்து அந்த வலி எப்படி இருக்கும் என்பதை உணர்தல். நாம் எவ்வளவு சுதந்திரமாக இருக்க கற்பனை செய்கிறோமோ, அதே போன்று மற்றவர்களும் சுதந்திரமாக இருக்க நாம் நிலையாக விரும்ப வேண்டும்.
பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசாங்கம் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகில் மனிதநேயம் குறைய குறைய மனித நேயமற்ற மனிதர்கள் வளர வளர, உலகம் விரைவில் அழிந்து விடும். உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மனிதனாகப் பிறந்த நமது ஒவ்வொருவரது கடமையாகும். அதில் முக்கியமான, அவசியமான கடமை பிறர் நலம் பேணும் சமுதாய கடமை.