Share this book with your friends

Irandu Angulam Thaan Ulagam / இரண்டு அங்குலம் தான் உலகம்

Author Name: Dr. Deepa Satish | Format: Hardcover | Genre : Biographies & Autobiographies | Other Details

“இரண்டு அங்குலம் தான் உலகம்” என்ற புத்தகம் உங்களுக்கே உரித்தான படைப்பாற்றலுக்கான வழிகாட்டியாகும். நாம் இந்த உலகத்தை உள்வாங்குவது நம் ஐம்புலங்களின் வாயிலாகத்தான். அதிலும் நம் உயிர்நிலையை தக்க வைக்கும் நம் சுவாசத்திற்கு ஆதாரமான மூக்கின் அளவு இரண்டு அங்குலமே.   இதன் மூலம் எந்த மாதிரியான விஷயங்களை நாம் உள்வாங்குகிறோமோ அதுவே நம் வாழ்க்கை ஆகிறது.

இந்த கருத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறும் பல வழிமுறைகளை மாறுபட்ட அனுபவ சுவையில் புத்தகம்  முழுக்க   எழுத்தாளர் தீபா சதிஸ் அவர்கள் எழுதியுள்ளார்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 2355

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Dr. தீபா சதிஸ்

தீபா சதிஸ் மாற்று மருத்துவத்தில் 15 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். கார்ப்பரேட் பயிற்சியாளர், மூளை செயல்திறனை அறிவியல் பூர்வமாக தொழில் நுட்ப உதவியுடன் ஆராய்ந்து ஆலோசனை வழங்கும் ஆலோசகர்.
பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிப்பவர், வணிகர் மற்றும் ஏற்றுமதியாளர். ஹாகினி, டி.எஸ்.பி குளோபல், மில்ச்சி  மற்றும் நித்யம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.

500+ உறுப்பினர்களைக் கொண்ட “வி.எம்.கே – மகளிர் தொழில் முனைவோர் முன்னேற்றக் குழு”வை  உருவாக்கி பெண் தொழில் முனைவோர் சமூகத்தை உறுதியான பார்வையுடன், அர்ப்பணிப்பான செயல்பாடுகளுடன் சிறப்பாக முன்னேற்றி வருகிற தலைமைத் திறன் கொண்டவர்.

தலைமை, மாற்றம், முன்னேற்றம் — இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து, ஒரு சக்தி வாய்ந்த பெண்கள் சமூகத்தை உருவாக்கி வருபவர். 

மாற்று மருத்துவத் துறையில் சிறந்த சாதனையாளருக்கான விருதை உயர்நீதிமன்ற நீதிபதி பி. ஜோதிமணி அவர்களால் தீபா சதிஸ் பெற்றுள்ளார். சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மூலம் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர். 555 பெண் தொழில் முனைவோர்களோடு வியாபார கலந்துரையாடலுக்கு 2 உலக சாதனை விருதை பெற்றுள்ளார்.  

தீபா சதிஸ் பல்வேறு உயர்ந்த மனிதர்களுடன் பழகிய பல அனுபவங்களை மிக எளிமையாக உலகிற்கு சொல்ல நினைக்கும் ஆர்வலர். இவரது எழுத்தில் உறுதியும், தைரியமும் கலந்திருக்கிறது.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னாற்றலை புரிந்து கொள்ள,  இவரின் முதல் புத்தகம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

Read More...

Achievements