தமது முதல் கவிதை நூலை வெளியிட்டு கவிஞராக வலம் வர இருக்கும் தீபஜோதிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் தீபஜோதி ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனை என்பது தெரியும். அவருக்கு கவிதைத்துவம் உண்டு என்பதற்கு "கானல்" என்ற இக்கவிதை நூலே சாட்சியாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு ஏற்றபடி வாழ்க்கையில் தனக்கு கிடைக்காத மகிழ்ச்சியை, ஏக்கத்தை நிறைய இடங்களில் பதிவு செய்துள்ளார்.