Share this book with your friends

Kaatrukku ellai illaiye / காற்றுக்கு எல்லை இல்லையே

Author Name: Sudharsan Gopal | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கோரமான விபத்திலிருந்து தப்பித்து பிழைத்தவன் மனோஜ், அவன் அந்த விபத்தில் ஓர் டைரியை கண்டெடுக்கிறான். அந்த டைரியில் இடம்பெற்றிருக்கும் காதல் கதையானது அவனுக்குள் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் அந்த டைரியை எழுதியவன் அந்த விபத்தில் இறந்துவிட்டதால் அவன் சொல்லாமல் விட்டு சென்ற காதலை தேடி பயணத்தை தொடங்குகிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு திருப்பங்களும் அவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறது.

Read More...
Paperback
Paperback 151

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சுதர்சன் கோபால்

சுதர்சன் கோபால், மதுரையில் பிறந்து பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றவர். தனது பள்ளிப்பருவத்திலிருந்தே சிறுகதைகள் படிக்கும் ஆர்வம் அவரிடம் இருந்தது. கதைகள் மேல் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது தனித்துவமான கதை சொல்லும் திறமையின் வாயிலாக அதிகப்படுத்தினார். அவரது கதை சொல்லும் கலையில் ஈர்க்கப்பட்ட சுதர்சன் தானும் அக்கலையை கற்றிட வேண்டுமென நினைத்தார். சாதாரண விசயத்தை கூட மிகவும் சுவாரசியமாக சொல்லும்போது தான் கேட்பவர்கள் அதனை முழு கவனத்தோடும், ஆர்வத்தோடும் கேட்பார்கள். 

தன் வாழ்வில் காணும், கேட்கும் சிறு சிறு சம்பவங்களை எல்லாம் தன்னுடைய சொந்த கற்பனைகளை புகுத்தி சுவாரசியமான சிறுகதைகளாக மாற்றும் கலையை அவர் கற்றுக்கொண்டார். தினசரி தனது வாழ்வில் காணும் மனிதர்களும், சம்பவங்களுமே பின்னாளில் கதைகளாக மாறியது.

நாட்கள் செல்ல செல்ல தனக்குள் இருக்கும் கதைகளை எழுத்து வடிவில் எழுத தொடங்கினார். அப்படி அவர் முதன்முதலாக எழுதிய "மீட்டாத வீணை தருகின்ற ராகம்" என்ற கதை தனது நண்பர்கள் வட்டத்தில் பெரிய வரவேற்பினை பெற்றது, அதுவே அவரை எழுத்தாளராக வேண்டும் என நினைக்க வைத்தது. விறுவிறுப்பான த்ரில்லர் கதைகள், காதல், அமானுஷ்யம் என பல தரப்பட்ட கதைகளை எழுதினார். 

Read More...

Achievements