மனிதன் தன்னுடைய விருப்பு வெறுப்புகளைப் பிறரிடம் தெரிவிக்க முற்பட்டபோது, மொழி பற்றிய சிந்தனையும் கல்வி பற்றிய சிந்தனையும் தோன்றின.
'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணருவதே கல்வி என்றார்' சுவாமி விவேகானந்தர்.
ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளி களில் பயிலும் மாணவர் தாமே உயர்ந்தவர் என்று கருதித் தனிச் சாதியாக வளர்கின்றனர். நம் நாட்டில் நன்கு பயின்று சிறக்கப் பட்டம் பெறுபவர் நம் நாட்டில் தங்காது பிற நாடுகளுக்குச் சென்றுவிடுகின்றார்கள