தொண்டு நிலம் மட்டுமல்ல; தோராயமான நிலம் மட்டுமல்ல. தொங்கும் நிலம் முழுவதிலும் இருக்கு எங்கள் தொண்டு.
ஆகையால் தொங்கும் நிலம் முழுவதும் எமக்கு.
அவ்வாறிருந்தும் வடக்கு, கிழக்கு மட்டுமே கேட்டோம். தர மறுத்தது சிங்களம்.
எங்கள் வடகிழக்குப் பருவமழையைப் பொய்த்து போகச் செய்த பேரினவாதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ‘விடுதலைப்புலிகள்’ எனும் புரட்சிப்படையை உருவாக்கி பாசிச சிங்களத்தின் மேல் போர்தொடுத்து எத்தனையோ வீரச்சமர்கள், தியாகங்கள், ஊடறுப்பு வியூகங்கள் நடத்திக் காட்டி வெற்றி கண்டவர் ‘மாவேந்தன்’ வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ நிலம், அதை ஆளும் மாவேந்தனாய் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர் கட்டமைத்த விடுதலைப்புலிகள் எனும் படை என இம்மூன்றையும் உள்ளடக்கிய புவியே இப்படைப்பு.