Share this book with your friends

NEETHI RASA / நீதி ரஸம்

Author Name: Dr A T BATHRI | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த மொழிபெயர்ப்பானது சமஸ்கிருத மூலம், அவற்றைத் தமிழில் உச்சரிக்கும் ஒலிபெயர்ப்பு வடிவம், தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கியங்களின் ஒப்புமைப் பகுதி, ஆங்கில மொழிபெயர்ப்பு என்ற முறையில் அமைந்திருக்கிறது. இது ஒரு முழுமையான மொழிபெயர்ப்பு என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க ஏதுவாக இருக்கும். அதைப்போலவே தமிழ் இலக்கியங்களில் இருந்து ஒப்புமைப் பகுதியைக் காட்டியிருப்பது மிக முக்கியமானது. ஒப்பிலக்கிய ஆய்வுப்பார்வையை வளர்ப்பதற்கும் தமிழ் – சமஸ்கிருத பொதுப்பண்புகளை இலக்கியம்வழி அறிவதற்குமான நல்வாய்ப்பாக இது அமைகிறது. தமிழ்-சமஸ்கிருத ஒப்பாய்வை உணர்ச்சிக்கு இடந்தராமல், தரவுகளினூடாக ஆக்கபூர்வமான வழியில் அணுகும் பார்வைக்கு இந்த நூல் உதவியாக இருக்கும். அந்த வகையில் முனைவர். நண்பர் பத்ரி அவர்களின் இம்மொழிபெயர்ப்புப் பணி தமிழுக்கு வளம்சேர்ப்பதாக அமையும். இன்னும் நிறைய இதுபோன்ற பல இலக்கிய, மெய்யியல் நூல்களை மொழிபெயர்த்துத் தமிழ் - சமஸ்கிருத கலை, அறிவுமரபுசார் இயங்கியல் உறவுகளை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கிறேன்

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book
Paperback 190

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் ஏ டி பத்ரி

முனைவர் ஏ.டி. பத்ரி அவர்கள் தற்போது அஹோபில மட ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட, கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டப் பகுதியைத் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். இந்நூலில், சமஸ்கிருத நீதிமொழிகளைத் தமிழில் மொழிபெயர்த்ததோடு, அவற்றிற்கு இணையான பழந்தமிழ் செய்யுள்களையும் அவர் ஒப்புமையாக வழங்கியுள்ளார்.

Read More...

Achievements