சிறுகதை என்பது சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A short fictional narrative in prose. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதை அல்ல; பஸ் டிக்கெட். ஒரு வாரம் அல்லது ஒரு வருஷம் கழிந்தோ அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல சிறு கதைகளில் உள்ள பொதுவான அம்சம் என்கிறார் மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா. அவர் கூறியது அவர் கதைகளுக்கு கச்சிதமாக பொருந்தும். அவர் எழுதிய சிறுகதைகளை படித்துவிட்டால், நிரந்தரமாக நம் மூளையில் ஓர் இடத்தை பிடித்துவிடும். சிறுகதையின் சூத்திரம் அறிந்து அதில் வெற்றி கண்டவர்.
அவரைப் பார்த்து வியந்த நான், என் பேனாவை எடுத்து சில சிறுகதைகளை கிறுக்கி இருக்கிறேன்.
- விவேகானந்தன்