விழிப்புணர்வுக்கான கதை.
ஸ்மார்ட் போன் வைத்து டெக்னாலஜி சோஷியல் மீடியா என்று எத்தனை வகையில காமுகர்கள் வலை விரிக்கிறாங்கனு நமக்கு தெரியாதது இல்லை.
இன்ஸ்டால், ஷேர்சாட், கதைக்குரிய ஆப், கிண்டல், youtube, குகூள், வாட்சப், facebook messwnger, twitter, இன்னும் எத்தனை எத்தனையோ... எல்லாவற்றிலும் முகப்பு படம் மெயில் கமெண்ட்ஸ் செய்யும் பக்கம் மற்றும் தனிபட்ட உரையாடல்(inbox chat), என்று இளைஞர் முதல் நடுத்தர வயது குழந்தைகள் வரை ஆண்களில் காமுகர்கள் பலர் வலை விரித்து எப்ப பறவையான பெண்கள் மாட்டுவார்கள் என்று காத்திருக்கின்றனர். நாம முதல்ல பிரெண்டலியா பேசறதில் என்ன தப்பு, தவறான பேசினா பிளாக்ல போடலாம்னு கூட இருப்போம். பட் எந்த லூப் மூலமாக நம் தனிபட்டவை வெளிப்பக்கம் செல்லாது பாதுகாப்பாக இருங்க.
நிறைய விழிப்புணர்வு பதிவு பார்க்கறோம், படிக்கிறோம், ஏன் நாம கூட அட்வைஸ் பண்ணறோம். பட் மனசு என்பது ஆசைக் கொண்டது. அது எப்போ தடுமாறும்னு சொல்ல முடியாது. முடிந்தவரை முகமற்றவரிடம் இருந்து ஹாய் ஹலோ எந்த ஊர் என்று ஆரம்பிக்கம் உரையாடலை கண்டு விழிப்படையுங்கள்.