பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள் தேவனுடைய சமூகத்தில் ஆராதனை செய்யவும், தேவனுடைய ஜனங்களை ஆசீர்வதிக்கவும் தெரிந்து கொள்ளப்பட்ட தேவனுடைய ஊழியக்காரர்கள்.
தேவனுடைய ஆலயமாகிய தங்கள் சரீரங்களை ஜீவபலியாக பலிபீடத்தில் படைத்த அவர்கள் ஒவ்வொருவரையும் தேவனுடைய ஆலயமாகமாற்ற ஊழியம் செய்தனர்.
தங்களையல்ல தங்களுடைய மந்தைகளை உண்மையாய் புல்லுள்ள இடங்களில் மேய்த்து தங்கள் வாழ்க்கையையே தத்தம் செய்தனர்.
ஸ்தோத்திர பலியையும், ஜெபதூபவர்க்கத்தையும் தேவனுக்கு முன்பாக எப்போதும் ஏறெடுத்தவர்கள்இப்பலிபீடத்தின் பணிவிடைக்காரர்கள்.
இவர்கள் ஊழியத்தின் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். நம் மத்தியில் ஊழியம் செய்த சில ஊழியர்களின் வரலாற்றை இந்நூலில் எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூலை மிகச்சிறந்த முறையில் அச்சிட உதவிய நெல்லை பேராய அச்சகத்தாருக்கு நன்றி சொல்கிறேன்.
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.