தமிழ் கூறும் நல்லுலகிற்கு,
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அவர்களின்றி இந்த உயிர் இன்று உலகிற்கு ஏது.
விண்ணிலிருந்து பிதாவும் மண்ணிலிருந்து அன்னையும் ஆசி வழங்க இந்த கவிதை நூலினை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
எனது முதல் கவிதை தொகுப்பான “கற்பனைகள் விற்பனைக்கு” கிடைத்த நல்ல வரவேற்பு மற்றும் விமர்சனங்களுக்கு பிறகு சற்றே நீண்ட இடைவெளியில் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு “பூவேந்தனின் பாற்கடல்” வெளியிடுவதில் மகிழ்ச்சி.
இதிலும் அன்பையே பிரதானமாக எடுத்துக்கொண்டாலும் கொஞ்சம் கண்ணனின் ராதையின் காதலையும் சொல்லி இருக்கிறேன்.
கவிதைகள் தொகுப்பதில் சவால்கள் இருந்தாலும் புத்தகமாக வெளி வருவதில் நிறைய அனுபவம் பெற வேண்டி இருக்கிறது.
தலைப்பு வைத்த நாள் முதல் அச்சுக்கு கொண்டு செல்லும் நாள் வரை நிறைய பாடங்கள் கற்க வேண்டி இருந்தது.
இப்படைப்பிற்கு அணிந்துரை வழங்கிய முனைவர் திருமதி. ச.தங்கமணி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக்கொள்கிற«ன்.
இப்புத்தக அட்டைப்படத்தை வடிமைக்க எனக்கு உதவிய தம்பி சூரிய நாராயணன் அதனை இன்னும் சிறப்பாக மெருகேற்றி வடிமைத்து கொடுத்த ‘ஜிமீணீனீ கீமீதீ றிஷீஷ்மீக்ஷீ’ ரகு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எழுதுவதற்கு எனக்கு எப்போதும் துணையாக நின்று ஊக்குவிக்கும் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகமாக அச்சிட்டு வெளியிடும் பதிப்பகத்தாற்கு நன்றி.
கவிதை நூலினை வாங்கிப் படித்து தங்கள் கருத்துக்களை சொல்வீர்கள் என்று எதிர்பார்கிறேன்.
மீண்டும் ஒருமுறை என்னுள் இருந்து என்னை வழி நடத்தும் பெற்றோர்க்கு இந்நூல் சமர்ப்பணம்.
கவிஞர் பூவேந்தன் சிதம்பரம் அவர்களின் சொந்த ஊரானது திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள வடமதுரை. கணினி தொழில்நுட்பம் பயின்ற இவர் தற்போது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரின் இரண்டாவது படைப்பு “பூவேந்தனின் பாற்கடல்” என்னும் கவிதைத் தொகுப்பு.