Share this book with your friends

Stable Life Receives Eternal Life / நிலையான வாழ்வு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுங்கள் It is the awakening of the Living way. A key to turning your life around / இது ஜீவமார்க்கத்தின் எழுப்புதல். உங்கள் வாழ்வின் திருப்புமுனைக்கு ஓர் திறவுகோல்

Author Name: B. Sathish Kumar | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

உலகமக்கள், கிறிஸ்தவர்கள் அறிய புரிய தவறின  100-க்கும்  மேற்ப்பட்ட கேள்விகளுக்கு பைபிளின் புரட்சிகரமான வசனங்களின் விளக்கங்கள் வெளிப்பாடுகள் உள்ளது . இது தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் சிந்தனை செயல்களில்  சீர்திருத்தம் பெறுவதற்கு உதவிடும். இறை அச்சமே மெய்ஞானத்தின் துவக்கம். சத்தியத்திற்கு சாட்சியாக வாழ்வதே உயர்ந்த சாதனை. மனந்திரும்புதலே மாற்றத்திற்கான முதல் படிநிலை. இறைவன் மதங்களை உண்டாக்கவில்லை. மனிதர்கள் உண்டாக்கின மதங்களினால் பிரிந்தவர்களின் பாவ மனப்பான்மை மாறவில்லை. ஆதிமுதல் மெய்யானதேவனின் சட்டம் ஒழுங்கு மாறவில்லை. பகுத்தறிவின் நிலை அறியுங்கள்.மாற்றம் இல்லாத வாழ்வு ஏமாற்றமே. சிலுவை சுமப்பதின் சத்திய சோதனை மற்றும் சாதனை. 

நாம்  நிலையான வாழ்வையும் நித்திய ஜீவனையும் பெறுவதில்  கடினமான தடையான காரணிகள் எது? இறைவனிடம் இயற்கையிடம் மனிதர்கள் மீறுவதின் விளைவு? அன்பின் அம்சங்கள் என்ன? விசுவாசம், கிருபை,நற்கிரியை, நீதிமான், மனிதநேயம், இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு போன்ற வாழ்வியலை பற்றிய  ஒருங்கிணைந்த  சத்தியத்தை பத்து படிநிலைகளில்,  மூன்று பகுதிகளாக  முன்னுரைகளுடன் எழுதப்பட்டிருக்கிறது.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

பூ. சதீஷ் குமார்

இவர் தமிழ்நாடு - சென்னையை சேர்ந்தவர். இந்திய நற்செய்தி ஊழியத்தால் தனது 7 வயதிலிருந்து இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டார். அரசு பள்ளிகளில் படிப்பை முடித்து, உடனடி வேலை வாய்ப்பிற்காக ஓட்டல் நிர்வாக படிப்பிற்கு முயற்சி செய்தார். ஆனால் பாரா மெடிக்கல் டிப்ளமோ படிப்பை முடித்தார். தனது சிறுவயதிலிருந்தே ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக அல்லது இராணுவ வீரராக பணியாற்ற விரும்பினார். ஆனால் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் டெக்னீஷியன் ஆக கடந்த 17 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

 தனது 23 வயதில் கிறிஸ்தவ மார்க்கத்தின் சேவையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு,  நேரடியாக மற்றும் தொலைதூர படிப்புகளில் B.Th., M.Div., படித்து தேர்ச்சி பெற்றார். சில கிறிஸ்தவ பாடல்கள் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கிறிஸ்தவ மார்க்கத்தில் நிலைத்து, அறியாமை நீங்கவும், சத்தியத்தை சத்தியமாக போதித்து, விசுவாசத்துடன் பூரண இரட்சிப்பு அடைவதை  தரிசனமாக  கொண்டிருக்கின்றார்.  சகோ . பூ. சதீஷ்குமார்.

Read More...

Achievements

+2 more
View All