You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palயாத்திராகமம் 15:26-ம் வசனத்தில் தேவன், "நானே உன் பரிகாரி" என்று சொல்கிறார். சங்கீதம் 107:20-ம் வசனத்தில் தேவன், தமது வசனத்தை அனுப்பி நம்மைக் குணமாக்கி, நம்மை அழிவுக்குத் தப்புவிக்கிறார் என்று காண்கிறோம். ஏசாயா 55:11-ம் வசனத்தில் தேவனுடைய வசனமாகிய அவருடைய வார்த்தைகள், அவர் விரும்புகிறதைச் செய்யும், அவர் எந்தக் காரியத்திற்காக அனுப்புகிறாரோ, அதைச் செய்து முடித்துவிட்டுத் தான் திரும்பும் என்று காண்கிறோம். ஏசாயா 53:4-5; மத்தேயு 8:17 வசனங்களில், மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டார், நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்றும் காண்கிறோம்.
இந்த வசனங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன? தேவனுடைய வார்த்தைகள் அல்லது வசனங்கள், நம்முடைய மனதை மட்டுமல்ல, நம்முடைய சரீர சுகவீனங்களையும், நோய்களையும், பெலவீனங்களையும் கூடக் குணமாக்க வல்லது என்பதுதான்.
தேவனுடைய வார்த்தைகளுக்கு ஜீவன் இருக்கிறது, வல்லமை இருக்கிறது. ஆறுதலாகவும், தேறுதலாகவும், கண்டிப்பதாகவும், கட்டளையாகவும் வேலை செய்யும் தேவனுடைய வார்த்தைகள், "மருந்தாகவும்" (அதாவது மாத்திரை யாகவும், ஒளஷதமாகவும்) வேலை செய்கிறது என்பது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இயேசு கிறிஸ்துவினால் குணமாக்க முடியாத வியாதி என்று ஒன்று இல்லவே இல்லை.
அவருடைய வார்த்தை ஒன்றே போதும்!
அத்தனை வியாதிகளும் பறந்தே போகும்!!
நீங்கள் இதைப் பயன்படுத்தும் வகையாவது, இயேசு கிறிஸ்துவின் மீதும், தேவனுடைய வார்த்தையாகிய அவருடைய வசனத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்து, இவைகளை:
1. வாசித்து அல்லது கேட்டு,
2. வாயினாலோ அல்லது மனதிற்குள்ளேயோ அறிக்கை செய்து வந்தால் போதும்.
மற்றதை இயேசு கிறிஸ்து பார்த்துக்கொள்வார்.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.ஏசுதாஸ் சாலொமோன்
ஏசுதாஸ் சாலொமோன் அவர்கள் 'தேவனுடைய வார்த்தை குழுவின்' / Word of God Team (www.WordOfGod.in) தலைவராகப் பணியாற்றுகிறார். இந்தியாவில் ஊடக ஊழியத்தை (Media Ministry) முதன்முதலில் தொடங்கியவரும், பல்வேறு ஊடக ஊழியங்களில் அநேகருக்குப் பயிற்சி அளித்த முதல் நபரும் இவரே ஆவார். பழங்குடி மக்களிடையேயும் ஊடகப் பணிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
பழமையான தமிழ் கிறிஸ்தவ ஆவிக்குரிய புத்தகங்கள், வேதாகமங்கள் மற்றும் அகராதிகள் என சுமார் 15,000 நூல்களைச் சேகரித்து ஸ்கேன் (Scan) செய்துள்ளார். இந்த அரிய பொக்கிஷங்களை www.WordOfGod.in மற்றும் www.Archive.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக மக்கள் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வழங்கி வருகிறார்.
இவர் மூன்று பல்கலைக்கழகங்களில் பயின்று 2 இளங்கலைப் பட்டங்கள், 2 முதுகலைப் பட்டங்கள் மற்றும் ஒரு முனைவர் (Doctorate) பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். ஆயினும், தேவனுடைய ஞானத்திற்கும் அறிவிற்கும் முன்பாக உலகத்தின் பட்டங்கள் எவ்வித மேன்மையுமற்றவை என்பதை உணர்ந்து, கிறிஸ்துவுக்காகத் தமது பெயருக்குப் பின்னால் உள்ள பட்டங்கள் அனைத்தையும் துறந்துவிட்டார்.
தற்போது வெளியாகும் இந்தப் புத்தகம் இவர் வெளியிடும் 192-வது நூலாகும்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.