அடங்காத முரட்டு குதிரை குமாரனை வளைய வந்தது. நீண்ட நாட்களாக பழகியதை போல் நட்பாக அவனை முகர்ந்து பார்த்தது. அவனை உரசி கொண்டு சுத்தி வந்து “உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன். என் மேல் ஏறிக்கொள் சேர்ந்து பயணம் செய்வோம்” என்று அழைத்தது.
அடர்ந்து வளர்ந்த நீண்ட வெண்ணிற தாடியை தடவிக் கொண்டு பாலகுமாரன் கேட்டார் “என்னடா சந்தோசமா குதிரையே கூப்பிடுதே போயேன். மேலே ஏறி ராஜாவாட்டம் ஒரு ரவுண்டு சுத்தியிட்டு வாயேன்” புன்னகை நிறைந்த முகத்தோடு முதுகை தட்டி எழுத்த