You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமாதவிடாய் பருவத்திலுள்ள பெண்கள் ஏன் சபரிமலைக்குள் நுழையக் கூடாது என்று கேள்வி எழுப்பிய அனைவருக்குமான பதிலே இந்தப் புத்தகம். சபரிமலைக் கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் பற்றி இதுவரை விவாதிக்கப்படாத கோணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது. சபரிமலையுடன் தொடர்புடைய ஐந்து கோவில்களுக்குச் சென்ற நூலாசிரியரின் நேரடி அனுபவத்தையும், அது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நமதுநாட்டு பாரம்பரிய அறிவியல் முறைகளான ஆயுர்வேதம், சக்கரங்கள், தந்திரம், ஆகம சாஸ்திரம் ஆகியவற்றின் மூலம் கோயிலின் தன்மையை விளக்கி, சபரிமலை பற்றி ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அரிய புத்தகம் இது. அதே சமயத்தில் வாசகர்கள் இந்த ஆழமான அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கும் சபரிமலை போன்ற கோவில்கள் மனித உடல், குறிப்பாகப் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவமே உதவுகிறது. இந்தப் புத்தகம், இந்துக் கோவில்களையும் குறிப்பாகச் சபரிமலையும் உணர்ந்து அனுபவிக்கும் விதத்தை மாற்றும்.
சினு ஜோசப்
சினு ஜோசப், மைத்ரி ஸ்பீக்ஸ் டிரஸ்டின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலராக இருக்கிறார். அவர் 2009-ஆம் ஆண்டுமுதல் மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த விரிவான நேரடி ஆராய்ச்சியை மேற்கொண்டார். மேலும் இந்தியா முழுவதும் பயணம் செய்து 20,000-க்கும் மேற்பட்ட யுவதிகளையும் பெண்களையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு மாதவிடாய் நடைமுறைகள் எவ்வாறு பெண்களின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய அனுபவத்தைப் பெற்றார். மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருட்களில் கவனம் செலுத்தும் பிரபலமான செய்திகளிலிருந்து விலகி, அவரது பணி மாதவிடாய் தொடர்பான பாரம்பரிய முறைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஆராய்ந்தது. அவர் தனது வலைப்பதிவின் மூலம் பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைக் கண்டறிவது மற்றும் மாதவிடாய் குறித்த பாரதிய கண்ணோட்டத்தில் ஒரு தனித்துவமான பரிமாணத்தை முன்வைத்துள்ளார். அவர் பல இந்துக் கோவில்களையும் மாதவிடாய் காரணமாக ஏற்படும் மதக் கட்டுப்பாடுகளையும் அது பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றி ஆய்வு செய்துள்ளார். சபரிமலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சாஸ்தா கோவில்கள் பற்றிய அவரது ஆய்வு, அத்தகைய இடங்கள் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை ஆராய்கின்றன.
The items in your Cart will be deleted, click ok to proceed.